ONGC நிறுவனத்தால் கதிராமங்கலத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது – அதிகாரிகள் விளக்கம்

ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் கதிராமங்கலம் கிராமத்திற்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது என அந்நிறுவன அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.

கும்பகோணத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் சென்னை பேசின் மேலாளர் ராஜேந்திரன், காரைக்கால் அசெட் மேலாளர் குல்பீர் சிங், உள்ளிட்ட அதிகாரிகள் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய சென்னை பேசின் மேலாளர் ராஜேந்திரன், கதிராமங்கலம் உள்ளிட்ட இடங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் தொடர்ந்து செயல்படும் என்றும், எண்ணெய் வளங்கள் இருக்கும் இடத்தில் புதிய கிணறுகள் அமைக்கப்பட்டு கச்சா எண்ணெய் எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

மேலும், கதிராமங்கலம் கிராம மக்களின் அச்சத்தை போக்கும் வகையில், ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் விழிப்புணர்வு கூட்டங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் எண்ணெய் எடுக்கும் பணிகளால் விவசாய நிலங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் கூறினர். மேலும் ஓ.என்.ஜி.சி. மக்களுக்காகவே செயல்படும் நிறுவனம் என்றும் சமூக வலைதளங்களில் சிலர் பரப்பும் வதந்திகளை மக்கள் யாரும் நம்ப வேண்டாம் என்றும் மேலாளர் ராஜேந்திரன் கேட்டுக்கொண்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன