​​
Polimer News
Polimer News Tamil.

டென்மார்க் நாட்டில் பர்தா ஆடை மீதான தடையை நீக்கக் கோரி தொடரும் போராட்டங்கள்

டென்மார்க் நாட்டில் பர்தா உள்ளிட்ட முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி போராட்டங்கள் நடந்து வருகின்றன. அந்த நாட்டில் இருவர் சந்தித்துக் கொள்ளும்போது ஒருவர் முகத்தை மறைத்திருந்தால் எதிரே உள்ளவரை அவமதிப்பதாகக் கருதப்படும். எனவே முகத்தை மறைக்கும் ஆடைகளுக்கு தடை...

சீனாவில் நடந்த சர்வதேச ராணுவ விளையாட்டுப் போட்டிகள்

சீனாவில் நடைபெற்ற ராணுவ விளையாட்டு போட்டிகளில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த டாங்குகள் பங்கேற்றன. இந்த ஆண்டுக்கான சர்வதேச ராணுவ விளையாட்டுப் போட்டிகள் ஸின்ஜியாங் ((Xinjiang)) பிராந்தியத்தில் உள்ள கொர்லா நகரில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் ரஷ்யா, பெலாரஸ், கஜகஸ்தான், ஆர்மேனியா, அஸர்பைஜான், ஈரான்...

கடித்த பாம்பையே கையில் சுற்றி மருத்துவமனைக்கு வந்த பெண்

சீனாவில் பாம்பு கடித்ததால் பெண் ஒருவர் தம்மைக் கடித்த பாம்பையே தமது கையில் கடித்த இடத்தில் சுற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றார். இது தொடர்பான காட்சிப் பதிவுகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. சுமார் ஒன்றரை மீட்டர் நீளம்...

சீனாவில் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்துச் சிதறியது

சீனாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வெடித்துச் சிதறிய போது அருகில் இருந்த தந்தையும், மகளும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சீனாவில் வீட்டில் சார்ஜ் ஏற்றப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒன்றிலிருங்து மெல்லிய சப்தம் கேட்டதும், அருகில் நின்ற நாய் குரைத்துள்ளது. இதையடுத்து ஸ்கூட்டரில் இருந்து புகை...

மும்பையில் கூட்டம் நிறைந்த ரயிலில் ஏற முயன்று தவறிவிழுந்த பெண்

மும்பையின் தானேவில் இருந்து வாஷிக்கு செல்லும் மின்சார ரயில் துர்பே ரயில் நிலையத்திற்கு வந்து புறப்பட்ட போது வேகமாக ஏற முயன்ற மீனாட்சி என்ற பெண் கால் தவறி தண்டவாளத்திற்கும் ரயிலுக்கும் இடையில் விழுந்துவிட்டார். இதனைக் கண்ட ரயில்வே பாதுகாப்பு போலீஸ்காரர் ஒருவர்...

விசாரணையின் போது காவலரை தாக்கிய இளைஞர்

சென்னை அருகே சேலையூரில், காவலரை தாக்கிய இளைஞர் கைது செய்யப்பட்டார். ராஜகீழ்பாக்கத்தை சேர்ந்த ரஞ்சனி - பிரவீன்ராஜ் இருவரும் காதலித்து வந்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரவீன் ராஜ் குடும்பத்தினர், அவருக்கு வேறொரு பெண்ணை திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்வதாக கூறப்படுகிறது. இந்த...

கேரளாவுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்களுக்கு திடீர் தடை

கேரளாவுக்கு சரக்கு வாகனங்கள் செல்ல நெல்லை மாவட்டம் கோட்டைவாசல் ஆரியங்காவு வனப்பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது. மிகவும் கடினமான வளைவுகள் மற்றும் அதல பாதாளம் மிக்க மலைப்பாதையில் வாகனங்கள் ஆயிரக்கணக்கில் சரக்குகளை ஏற்றிச் செல்வதால் இந்த தடத்தில் அடிக்கடி சாலைகள் பழுதாகின்றன. தற்போது தென்மேற்குப்...

ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள Fanney Khan பட அறிமுக விழாவில் திரண்ட நட்சத்திரங்கள்

நடிகை ஐஸ்வர்யா ராய் நடித்துள்ள ஃபன்னே கான் படத்தின் அறிமுக விழா மும்பையில் நடைபெற்றது. இப் படத்தில் நடித்துள்ள நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் உட்பட பலரும் சிவப்புக் கம்பள மரியாதையை ஏற்றனர்.  'Everybody's Famous' என்ற ஆங்கிலப்படத்தை தழுவி எடுக்கப்பட்ட இப்படத்தில் தம்மை...

கலைக்கூடமா சூப்பர் மார்க்கெட்டா என பிரமிப்பை ஏற்படுத்தும் இடம்

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நுழைந்தால் நாம் பல்பொருள் அங்காடிக்குள் நுழைவதற்கு பதிலாக ஏதோ ஒரு கலைக்கூடத்திற்குள் நுழைந்துவிட்டோமா என்ற சந்தேகம் எழுவது நிச்சயம். அங்குள்ள பழங்கள், காய்கறிகள், நொறுக்குத் தீனிகள், டிவிடிக்கள், கழிவறைப் பொருட்கள் உள்பட...

100 அடி ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த பெண் குழந்தை உயிருடன் மீட்பு

பீகார் மாநிலம் மங்கர் பகுதியில் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்த 3 வயது சன்னோ என்ற பெண் குழந்தை நீண்ட போராட்டத்திற்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டாள். 100 அடி ஆழம் கொண்ட அந்த ஆழ்துளை கிணற்றில்  சிக்கிய சன்னோவை தேசிய பேரிடர் மீட்புப் படையினர்...