​​
Polimer News
Polimer News Tamil.

ஜெயலலிதாவிடம் ஓட்டுநராக இருந்த ஐயப்பன் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் முன் ஆஜர்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் ஜெயலலிதாவின் வாகன ஓட்டுநர் ஐயப்பன் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம்,ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட வீட்டில் பணிபுரிந்தவர்களின் விவரங்களை அவரது உதவியாளர் பூங்குன்றனிடம் கேட்டிருந்தது. இதையடுத்து 31பேரின்...

வேண்டுமென்றே வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தப்படாத வாராக் கடன் தொகை அதிகரிப்பு

திட்டமிட்டு வேண்டுமென்றே கடனை திருப்பிச் செலுத்தாத தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால், வங்கிகளுக்கு வாராக் கடன் தொகை 1 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்திருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. வங்கிகளில் வாங்கிய கடனை, வழியிருந்தும் திருப்பிச் செலுத்தாதமல் இருப்பது, கடனைப் பெற்று அதை...

BCCI-யின் வீரர்கள் தேர்வுக் கொள்கை வெளிப்படையானது : கங்குலி

இந்தியக் கிரிக்கெட் வாரியத்தின் வீரர்கள் தேர்வுக் கொள்கை மற்ற நாடுகளை விட சிறப்பாகவும், வெளிப்படையானதாகவும் இருப்பதாக சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கோவை கொடீசியா அரங்கில் கண்மருத்துவம் தொடர்பான 76-வது அனைத்திந்திய மாநாடு நடைபெற்றது. இதையொட்டி நடைபெற்ற வாக்கத்தான் நிகழ்ச்சியை கொடியசைத்து தொடங்கி...

TTV தினகரனுடன் கள்ளக்குறிச்சி MLA பிரபு திடீர் சந்திப்பு

கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, டிடிவி தினகரனை நேரில் சந்தித்து அவருக்கு ஆதரவு தெரிவித்தார். கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு, இன்று முற்பகலில், சென்னை அடையாறில் உள்ள டிடிவி தினகரன் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு டிடிவி தினகரனை சந்தித்த பிரபு, அவருக்கு...

கனடா பிரதமருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வரவேற்பு

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு ((Justin Trudeau)) டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்புக் கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. குடியரசுத் தலைவர் மாளிகைக்கு காரில் வந்திறங்கிய ட்ரூடோ மற்றும் அவரது குடும்பத்தினரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் கனடா பிரதமருக்கு சிவப்புக் கம்பள வரவேற்பும்,...

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய தடை

திருப்பதி ஏழுமலையான் கோவில் தேவஸ்தானத்தில் பணியாற்றும் வேற்று மத ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஐதரபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிரந்தர மற்றும் ஒப்பந்த ஊழியர்கள் பணியாற்றி வரும் நிலையில் 1989 முதல் 2017ஆம் ஆண்டுக்கு...

திருவண்ணாமலையில் 3 நகைக் கடைகளில் வருமான வரி சோதனை நிறைவு

திருவண்ணாமலையில் 3 நகைக் கடைகளில் வருமான வரித்துறையினர் மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. திருவண்ணாலையில் இயங்கி வரும் சுமங்கலி ஜுவல்லர்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான இரண்டு கடைகளிலும், சாந்தி ஸ்வர்ண மஹால் நகைக்கடையிலும் நேற்று மாலை 4 மணி முதல் வருமான வரித்துறையினர்...

திருப்பதி அருகே 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்கள் பறிமுதல்

திருப்பதி அருகே 12 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மரங்களைப் போலீசார் பறிமுதல் செய்தனர். திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படையினர் இன்று அதிகாலை கே.எம்.எம். கல்லூரி அருகே ரோந்து சென்றனர். வனப்பகுதியையொட்டி நின்று கொண்டிருந்த காரை, போலீசார் சோதனை செய்ய முயன்றனர். அப்போது...

ஹைதராபாத்தில் வேதித் தொழிற்சாலையில் தீ விபத்து

ஹைதராபாத்தில் வேதித் தொழிற்சாலை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. ஜீடிமெல்டா ((Jeedimelta)) தொழிற்பேட்டைப் பகுதியில் உள்ள வேதிப்பொருட்கள் தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றில் இன்று காலை பிடித்த தீ அருகில் உள்ள வேதிப் பொருள் கிடங்குக்கும் பரவியது. தகவல் அறிந்து 9...

கருணை இல்லத்தில் கருணை கொலையா ? - 1590 முதியவர்கள் சடலமான பின்னணி..

சடலத்துடன் முதியவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய செயிண்ட் ஜோசப் கருணை இல்லத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆதரவற்ற முதியவர்களை அரசு காப்பகத்துக்கு மாற்ற சமூக நல பாதுகாப்பு அலுவலர் பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 1590 முதியவர்கள் சடலமான பின்னணி. காஞ்சிபுரம் மாவட்டம்...