​​
Polimer News
Polimer News Tamil.

சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்ரேவின் நினைவிடத்திற்கு ரூ.100 கோடி நிதி ஒதுக்கீடு

சிவசேனா நிறுவன தலைவர் பால் தாக்ரேவின் நினைவிடத்திற்கு, 100 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, மகாராஷ்டிரா அமைச்சரவை ஒப்புதல் அளித்திருக்கிறது. மும்பை தாதர் பகுதியில், சிவாஜி பூங்கா அருகே, 11 ஆயிரத்து 500 சதுரமீட்டர் பரப்பளவில், பால் தாக்கரேவிற்கு நினைவிடம்...

சீனா ராணுவத்தில் தரைப்படை வீரர்களின் எண்ணிக்கை 50சதவீதம் குறைப்பு

சீனாவில் ராணுவத்தில் இடம்பெற்றுள்ள தரைப்படை வீரர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு கீழ் குறைக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. 20 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களுடன் உலகின் மிகப்பெரிய வலிமைமிக்கதாக சீன ராணுவம் விளங்குகிறது. தரைப்படையில் சண்டையிடும் பிரிவு தவிர்த்து மற்ற பிரிவுகளில்...

ஆஸ்திரேலிய டென்னிஸ் அரையிறுதி சுற்றுக்கு 20 வயது இளைஞர் கிரீஸ் வீரர் முன்னேற்றம்

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு 20 வயது இளைஞரான சிட்ஜிபஸ் முன்னேறினார். கிரீஸ் நாட்டின் இளம் வீரரான ஸ்டெபனோஸ் சிட்ஸிபஸ் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் நடப்பும் சாம்பியனும், 2-வது நிலை வீரருமான நட்சத்திர வீரரான ரோஜர் பெடரரை வீழ்த்தினார். இதன்...

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைப்பு - விஜயபாஸ்கர்

தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையை அடுத்த குலமங்கலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆண்டு தோறும் பிப்ரவரி 3-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறும் நிலையில், இந்த ஆண்டு மத்திய அரசின்...

நாட்டின மாடுகளுக்கான உயிரணுக்கள் தமிழகத்தில் மிக அதிகம் - உடுமலை ராதாகிருஷ்ணன்

நாட்டின மாடுகளுக்கான உயிரணுக்கள் தமிழகத்தில் மிக அதிக அளவில் உள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே சத்திரப்பட்டியில் விலையில்லா நாட்டுக் கோழிகள், கறவைப் பசுக்கள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் பங்கேற்ற உடுமலை ராதாகிருஷ்ணன்,...

அதிமுக - பாஜக கூட்டணி தமிழகத்தில் அமையும் : ராம்தாஸ் அத்வாலே

மக்களவை தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.க.வுக்கு அதிமுக ஆதரவளிக்கும் என்று மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார். சமூக நீதித் துறை இணை அமைச்சரான அவர் புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய ராம்தாஸ் அத்வாலே, டிடிவி தினகரன் அதிமுகவோடு இணைய வேண்டும் என்று...

அவனியாபுரம் ஜல்லிக்கட்டை சிறப்பாக நடத்திய ஒருங்கிணைப்புக் குழுவுக்கு பாராட்டு

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு குழுவினருக்கு உரிய ஊதியத்தை வழங்க மதுரை மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஜல்லிக்கட்டை நடத்தி முடித்தது குறித்த அறிக்கையும் ரசீது புத்தகம் மற்றும் வரவு - செலவு கணக்குகளும் ஒருங்கிணைப்புக்குழு சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. ஜல்லிக்கட்டை...

சென்னையில் 2வது உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஏற்பாடுகள் தீவிரம்

சென்னையில் 2-வது உலக முதலீட்டாளர்கள் மாநாட்டுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் நாளை காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த மாநாடு, 2 நாள்கள் நடைபெறுகிறது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமை விருந்தினராக பங்கேற்று...

குப்பையில் கை, கால்கள் - சென்னையில் பயங்கரம்

சென்னையில் பெண்ணை துண்டு துண்டாக வெட்டி குப்பை கிடங்கில் வீசிய வழக்கில், கொலையான பெண் யாரென போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கை மற்றும் கால்கள் கிடந்த குப்பை எந்த பகுதியில் இருந்து சேகரிக்கப்பட்டது என்பதை கண்டறிந்து சிசிடிவி காட்சிகளை...

ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகள்

கோவை வால்பாறையில் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்த காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். வால்பாறை ஒட்டியுள்ள வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரு காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து 100க்கும் மேற்பட்ட வாழை மரங்களை நாசப்படுத்தியது. விளைநிலங்களில் பயிரிடப்பட்டு...