​​
Polimer News
Polimer News Tamil.

நீட் தேர்வுக்கு போலி அனுமதிச்சீட்டுடன் சென்ற மாணவி

சேலத்தில் நீட் தேர்வெழுதுவதற்காக சென்ற மாணவி போலி அனுமதிச் சீட்டுடன் சென்றதால் அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். போலி அனுமதிச் சீட்டு எவ்வாறு கிடைத்தது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவியான ஜீவிதா சேலம்...

சீனாவில் மழை நேரத்தில் வடிகாலில் தவறி விழுந்து சிறுவன்

சீனாவில் மழைநீர் வடிகாலில் விழுந்து அடித்துச் செல்லப்பட்ட சிறுவனை, அங்கிருந்தவர்கள் மீட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. ஷெஜியாங் மாகாணம் ஜியாங்ஷான் நகரில், மழையில் குடைபிடித்தபடி 11 வயது சிறுவன் குடைபிடித்தபடி செல்கிறான். சாலையில் மழைநீர் வடிகாலை கவனிக்காமல் அதில் விழுந்த சிறுவனை தண்ணீரின் வேகம்...

ஐடியா நிறுவனத்தில் 100% நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது குறித்துத் தொலைத்தொடர்பு அமைச்சகமே முடிவெடுக்க வேண்டும் - சுரேஷ் பிரபு

ஐடியா நிறுவனத்தில் 100விழுக்காடு நேரடி வெளிநாட்டு முதலீட்டை அனுமதிப்பது குறித்துத் தொலைத்தொடர்பு அமைச்சகமே முடிவெடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். ஓடபோன் நிறுவனமும் ஐடியா செல்லுலார் நிறுவனமும் இணையத் திட்டமிட்டுள்ளன. ஏற்கெனவே ஐடியா செல்லுலார் நிறுவனத்தில் 34விழுக்காடு வெளிநாட்டு...

முகேஷ் அம்பானியின் மகள் இஷா அம்பானிக்கு திருமணம்

ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானியின் மகளான இஷா அம்பானிக்கும் தொழிலதிபர் அஜய் பிராமாலின் மகன் ஆனந்த் பிராமாலுக்கும் திருமணம் நடைபெறவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரமால் ரியாலிட்டீஸ் நிறுவனரான ஆனந்த் பிராமால், இந்திய வர்த்தக சபையின் இளைஞர் பிரிவில் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவராவார். இளம்...

வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் - ராம்விலாஸ் பாஸ்வான்

வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். மத்திய உணவு மற்றும் பொதுவிநியோகத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது...

வாரன் பப்பட்டின் சவாலை ஏற்று அவருக்கு போட்டியாக மிட்டாய் கம்பெனி தொடங்கப்போவதாக Space X நிறுவனர் எலோன் மஸ்க் பதில்

வாரன் பப்பட்டின் மிட்டாய் வணிகத்துக்குப் போட்டியா, தாங்களும் மிட்டாய் வணிகத்தைத் தொடங்கப்போவதாக அமெரிக்காவின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத் தலைவர் எலோன் மஸ்க் தெரிவித்துள்ளார். பெர்க்சயர் ஹாத்தவே நிறுவனத்தின் ஆண்டுக்கூட்டத்தில் பேசிய வாரன் பப்பட், எலோன் மஸ்க் ஒரு மிட்டாய் நிறுவனம் தொடங்கி நடத்திப்...

மக்களின் உணர்வுகளை பற்றி கவலைப்படாத காங்கிரஸ் கட்சி, ஒப்பந்தங்களை பற்றி மட்டுமே காங்கிரஸ் கவலைப்படுகிறது - பிரதமர் மோடி

மக்களின் உணர்வுகளை பற்றி கவலைப்படாத காங்கிரஸ் கட்சி, ஒப்பந்தங்களை பற்றி மட்டுமே நினைப்பதாக பிரதமர் மோடி குற்றஞ்சாட்டினார். கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் 12ஆம் தேதி நடைபெறவுள்ளதை முன்னிட்டு, சித்ரதுர்கா, ராய்ச்சூர் ஆகிய இடங்களில் நடந்த பாஜக பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி பங்கேற்றார்....

உத்தரப்பிரதேசத்தில் விபத்து நடந்த இடத்தில் செல்ஃபி எடுத்த காவல் அதிகாரி

உத்தரப்பிரதேசத்தில் விபத்து நேரிட்ட இடத்துக்குச் சென்ற போலீஸ் அதிகாரிகள், அதன் பின்னணியில் செல்ஃபி எடுத்துக் கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. லக்னோ நகரில் டல்கட்டோரா ((Talkatora)) என்ற இடத்தில் சிமெண்ட் குடோன் ஒன்றில் மூடைகள் சரிந்து விழுந்து 2 தொழிலாளர்கள் பலியாகினர். இதுகுறித்து தகவலறிந்த...

பள்ளிவாசல்களில்தான் தொழுகை நடத்த வேண்டும் - மனோகர்லால் கட்டார்

தொழுகைகள் பள்ளிவாசல்களில்தான் நடத்தப்பட வேண்டும் என்று அரியானா மாநில முதலமைச்சர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார். அம்மாநிலத்தில் குர்கான் நகரில் பள்ளிவாசலுக்கு அருகே உள்ள பொது இடங்களில் தொழுகை நடத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. இந்நிலையில், சண்டிகர் நகரில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய அரியானா முதலமைச்சர்...

மோசடிப் பேர்வழிகள் வெளிநாடுகளுக்கு தப்புவதைத் தடுக்க நிறுவன இயக்குநர்களின் பாஸ்போர்ட் தகவல்களை சேகரிக்க திட்டம்

முக்கிய நிறுவனங்களின் இயக்குநர்களது பாஸ்போர்ட் தகவல்களைச் சேகரிக்க கார்ப்பரேட் விவகாரத்துறை அமைச்சகம் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நீரவ் மோடியைப் போல் வங்கிகளை மோசடி செய்துவிட்டு வெளிநாடுகளுக்கு இனி யாரும் தப்பிச் செல்லாத வகையில், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மோசடி...