​​
Polimer News
Polimer News Tamil.

பிரதமர் மோடி ஆட்சியில் பங்குச்சந்தைகள் 13% வளர்ச்சி அடைந்துள்ளன - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு

பிரதமர் மோடி ஆட்சியில் பங்குச்சந்தைகள் 13 சதவீதம் வளர்ச்சி அடைந்திருப்பதாக மத்திய தொழில், வர்த்தகத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற இந்தியா-கொரியா வர்த்தக உச்சிமாநாட்டில் பேசிய அவர், பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின், 4 ஆண்டுகளில் பங்குச்சந்தைகள் 13 சதவீத,...

சுயநினைவை இழந்து தண்ணீரில் மூழ்கியே ஸ்ரீதேவி உயிரிழந்ததாக துபாய் அரசு அறிவிப்பு

ஸ்ரீதேவி மரணம் தொடர்பான வழக்கு முடித்துவைக்கப்பட்டதாக துபாய் அமீரக அரசு தெரிவித்துள்ளது. நடிகை ஸ்ரீதேவியின் மரணம், விடுதி அறையில் இருந்தபோது சுயநினைவை இழந்து நீரில் மூழ்கியதால் ஏற்பட்டதாக, மருத்துவ அறிக்கை தெரிவித்துள்ளது என துபாய் அமீரக அரசின் ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. ஸ்ரீதேவியின் மரணம்...

புனித ஜோசப் இல்லத்தில் இருந்து 20 பேர் தனியார் காப்பகத்துக்கு மாற்றம்

காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரத்தில் உள்ள புனித ஜோசப் கருணை இல்லத்தில் இருந்த 20 பேர் தனியார் காப்பகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆதரவற்றோரை கொன்று அவர்களது எலும்புகளை கடத்துவதாக எழுந்த புகாரில் புனித ஜோசப் கருணை இல்லத்தில், மூன்றாவது நாளாக வருவாய்துறை, சுகாதாரத்துறை,...

பிரத்யேக வசதிகள் கோரி காட்பாடி ரயில் நிலையம் முன்பு மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ரயிலில் பயணிக்கும் மாற்றுத்திறனாளிக்கான பல்வேறு வசதிகளை செய்துதரக்கோரி வேலூர் மாவட்டம் காட்பாடி ரயில் நிலையம் முன்பு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பயணீச்சீட்டு வழங்குமிடத்தை தாழ்வாக அமைத்தல், எளிதில் சென்றுவர பேட்டரி கார்...

பொதுத்துறை வங்கிகளில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை சரிசெய்ய 15 நாள் கெடு

பொதுத்துறை வங்கிகளில் அன்றாட நடைமுறைகளில் உள்ள தொழில்நுட்ப குறைபாடுகளை சரிசெய்ய 15 நாள் கெடுவிதிக்கப்பட்டுள்ளது. பஞ்சாப் நேஷனல் வங்கி மோசடி விவகாரத்தில் பன்னாட்டு பணப்பரிமாற்றத்திற்கான தானியங்கி தொழில்நுட்பம் இல்லாததும் ஒரு காரணமாக கூறப்பட்டது. இந்நிலையில் பொதுத்துறை வங்கிகளுக்கு மத்திய நிதி சேவைகள் துறை...

தென்னாப்பிரிக்காவில் அதிகரித்து வரும் தண்ணீர் பற்றாக்குறை-சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்

தென்னாப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ள நிலையில் சுற்றுலாப் பயணிகளுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கேப்டவுன் நகரில் ஜூலை 9ம் தேதிக்குள் நீர் இருப்பு முற்றிலுமாக காலியாகிவிடும் என கருதப்படுகிறது. இதனையடுத்து இங்கு வசிக்கும் மக்கள் மட்டுமின்றி சுற்றுலாப் பயணிகளுக்கும்...

சிரியாவில் ரசாயன குண்டுகளால் கொத்து கொத்தாக பலியாகும் குழந்தைகள்

சிரியாவில் அரசுப் படைகளின் தாக்குதலால் உருகுலைந்த கட்டிட இடிபாடுகளில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட பச்சிளங்குழந்தைகளும், சிறுவர்களும் மீட்கப்படும் காட்சிகள் காண்போரின் மனதை பதைபதைக்க வைக்கிறது. சிரியா தலைநகர் டமாஸ்கஸ் அருகே, கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கவுட்டா (Eastern Ghouta) பகுதியில்...

நடிகை ஸ்ரீதேவியின் உடலை பதப்படுத்தும் பணி நிறைவு

துபாயில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடலை பதப்படுத்தும் பணி நிறைவடைந்ததை அடுத்து, விமானம் மூலம் மும்பைக்கு கொண்டுவரப்பட உள்ளது. திருமண நிகழ்ச்சியில் பங்கேற்க துபாய் சென்றிருந்த நடிகை ஸ்ரீதேவி கடந்த சனிக்கிழமை நட்சத்திர ஓட்டல் அறையில் உயிரிழந்தார். ஸ்ரீதேவியின் மரணம் தொடர்பான விசாரணை...

தமிழகம் மின்மிகை மாநிலம் என்ற நிலையை தக்கவைத்துள்ளது : தங்கமணி

தமிழகம் மின்மிகை மாநிலம் என்ற நிலையை தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டு உள்ளதால், இனி எந்தக்காலத்திலும் மின்வெட்டு இருக்காது என மின்சாரத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அடுத்த பள்ளிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் கள்ளச்சாராயம் கிட்டத்தட்ட ஒழிக்கப்பட்டுவிட்டதாகக்...

ராமதாசுக்கு கொலை மிரட்டல் - நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு

பாமக நிறுவனர் ராமதாசுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. விழுப்புரத்தில் சிறுவன் அடித்துக்கொல்லப்பட்டு, தாயார் மற்றும் சிறுமி கொடூரமாக அண்மையில் தாக்கப்பட்டனர். அந்த சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதும்...