​​
Polimer News
Polimer News Tamil.

மத்திய அரசின் அதிவிரைவுப் படையினர் கும்பகோணம் வருகை

காவிரி டெல்டா மாவட்டங்களில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வரும் சூழலில் மத்திய அரசின் அதி விரைவுப் படையினர் குவிக்கப்பட்டு வருவதால் பதற்றம் அதிகரித்துள்ளது. ஓ.என்.ஜி.சி, மீத்தேன், ஹைட்ரோகார்பன், காவிரி மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்காக காவிரி டெல்டா மாவட்டங்களில் போராட்டங்கள் நடைபெற்று...

புதுச்சேரியில் அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளை

புதுச்சேரி அருகே அடுத்தடுத்து மூன்று வீடுகளில் கொள்ளையடித்து சென்ற முகமூடிக் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர். புதுச்சேரி பொன்நகர் 4வது தெருவை சேர்ந்த ரஜினி பிரகாஷ், மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இரண்டு நாட்களுக்கு முன்னர் ரஜினிபிரகாஷ் காரைக்குடி சென்ற நிலையில் அவரது...

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தும் முடிவை கைவிடுமாறு வேல்முருகனுக்கு உதவி காவல் ஆணையர் கடிதம்

சென்னை மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்தும் முடிவை கைவிடுமாறு தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனுக்கு சென்னை திருவல்லிக்கேணி உதவி காவல் ஆணையர் அறிவுறுத்தியுள்ளார். அவர் அனுப்பியுள்ள கடிதத்தில், போராட்டம் நடத்துவது தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கும், மருத்துவமனைக்குச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு இடையூறாக...

சீனாவில் ஒரே பிரசவத்தில் 5 குட்டிகளை ஈன்ற மஞ்சூரியன் இன புலி

சீனாவில், அரிதாகி வரும் மஞ்சூரியன் இனத்தை சேர்ந்த புலி, ஒரே பிரசவத்தில் 5 குட்டிகளை ஈன்றுள்ளது. இதில், 3 பெண் குட்டிகள் அடங்கும். அங்குள்ள Heilongjiang மாகாணத்தில் உள்ள மிருகக்காட்சி சாலையில், தாய் புலியும், குட்டிகளும் நலமாக உள்ளதாக தெரிவித்த மிருகக்காட்சி சாலை...

காவிரி பிரச்சனையில் தேசிய கட்சிகளை நம்ப மாட்டோம்: தம்பிதுரை

காவிரி பிரச்சனையில் தேசிய கட்சிகளான பா.ஜ.க மற்றும் காங்கிரசை நம்ப அதிமுக தயாராக இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியளார்களுடன் பேசிய அவர், திவாகரனை கட்சியில் சேர்ப்பதா, வேண்டாமா என்பது பற்றி அமைச்சர் ஜெயக்குமாரோ...

கொடுத்த வாக்குறுதிகளை பாஜக அரசு நிறைவேற்றவில்லை: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

நரேந்திர மோடி தலைமையிலான அரசு, கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மக்கள் ஆக்ரோஷம் ((Jan Akrosh)) என்ற பெயரில், காங்கிரஸ் சார்பில், டெல்லி ராம்லீலா மைதானத்தில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்ற இக்கூட்டத்தில்...

IAS தேர்வுக்கு Google, You Tube மிகச்சிறந்த ஆசிரியர்கள் - அனுதீப்

ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு கூகுளும், யூ டியூப்பும் மிகச் சிறந்த ஆசிரியர்கள் என குடிமைப்பணி தேர்வில் தேசிய அளவில் முதலிடம் பிடித்த அனுதீப் துரிசெட்டி தெரிவித்துள்ளார். டைம்ஸ் ஆஃப் இந்தியா ஆங்கில நாளேட்டுக்கு பேட்டியளித்துள்ள அனுதீப் துரிசெட்டி, ஐ.ஏ.எஸ். தேர்வுக்கு படிப்பதற்காக, தாம்...

முதுமலையில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

கோடை விடுமுறையை யொட்டி முதுமலை புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகள் குவிந்த வண்ணம் உள்ளனர். முதுமலை புலிகள் காப்பகம், நீலகிரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று. அண்மையில் பெய்த மழையின் காரணமாக, அங்கு பசுமை படர்ந்து காணப்படுகிறது. இதனால், கோடை வெயிலில்...

சென்னை உள்பட பெருநகரங்களில் கார்கள் விற்பனை சரிவு

வாகன நெரிசல் உள்ளிட்ட காரணங்களால், சென்னை உட்பட முக்கிய நகரங்களில், கார் விற்பனை குறைந்துள்ளது. மும்பையில், 2017-18ம் நிதியாண்டில், 97,274 கார்கள் விற்பனையானது; இது, முந்தய ஆண்டின், ஒரு லட்சத்து, 22 ஆயிரத்துடன் ஒப்பிடும் போது, 20 சதவீதம் குறைவு. கார் சந்தையில்...

நீர் மேலாண்மை திட்டம் குறித்து பிரதமர் மோடி பேச்சு - தமிழக கல்வெட்டுகளை குறிப்பிட்டு உரை

நீர் மேலாண்மை திட்டம் குறித்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, பல நூற்றாண்டுகளுக்கு முன்னரே முன்னோர்கள் இதை செயல்படுத்திக் காட்டி இருப்பதாகவும், இதற்கான கல்வெட்டுகள் தமிழகத்தில் இருப்பதாகவும் குறிப்பிட்டார். மனதின் குரல் என்ற நிகழ்ச்சியின் மூலம் 43ஆவது முறையாக வானொலியில் பிரதர் நரேந்திரமோடி...