​​
Polimer News
Polimer News Tamil.

வனத்திற்குள் சென்றவர்களை புலி ஒன்று விரட்டியடித்த அதிர்ச்சிக் காட்சிகள்

மகாராஷ்டிராவில் வனத்திற்குள் சென்றவர்களை புலி ஒன்று விரட்டியடித்த அதிர்ச்சிக் காட்சிகள் வெளியாகி உள்ளன. தடோபா தேசியப் பூங்காவில் திறந்த வெளி வாகனத்தில் சிலர் சென்று கொண்டிருந்தனர். அப்போது வாகனத்தின் பின்புறம் வந்த புலி ஒன்று திடீரென சுற்றுலா பயணிகளை நோக்கி ஓடி வந்தது....

ஓடும் ரயிலில் ஏற முயன்று கீழே விழுந்த பயணியை காப்பாற்றிய ரயில்வே பாதுகாப்பு படை வீரர்

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணியை ரயில்வே பாதுகாப்பு படை வீரர் காப்பாற்றிய வீடியோ வெளியாகி உள்ளது. ராமேஸ்வரத்தில் இருந்து பைசாபாத் செல்லும் சர்தார் சேது எக்ஸ்பிரஸ், ரயில் எழும்பூர் 5வது நடைமேடையில் இருந்து புறப்பட்டது. அப்போது...

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை விமான நிலைய சுங்கத்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். நேற்று இரவு கோலாலம்பூரில் வந்த ரியாஸ் அகமது என்ற பயணியை சந்தேகத்தின் பேரில் அவர்கள்...

சட்டவிரோத குடியேற்றம் காரணமாக அமெரிக்க சிறைகளில் 2,400 இந்தியர்கள் இருப்பதாக தகவல்

அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேற முயன்றதாக ஏறத்தாழ 2 ஆயிரத்து 400 இந்தியர்கள் சிறையில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வடஅமெரிக்க பஞ்சாபி அசோசியேஷன் என்ற அமைப்பு தெரிவித்துள்ள புள்ளி விபரங்களின் படி, கலிபோர்னியாவின் அடிலாண்டோ சிறையில் 377 பேரும், இம்பீரியல் பகுதியில் 269...

நியூஸிலாந்து கடல் பகுதியில் 26 அடி நீளமுள்ள பிரமாண்டமான கடல் புழு

நியூஸிலாந்து கடல் பகுதியில் 26 அடி நீளமுள்ள பிரமாண்டமான கடல் புழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிமலையால் உருவான வெள்ளைத் தீவுப்பகுதியில் ஸ்டீவ் ஹாத்வே ((Steve Hathway)) என்பவர் தலைமையில்  கடலுக்குள் சென்று ஆய்வு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது வழுவழுப்பான நிலையில் வெள்ளை நிறத்துடன் பிரம்மாண்ட...

சாலையோர நடைபாதையில் உண்டான திடீர் பள்ளத்தில் பெண் விழுந்து படுகாயம்

சீனாவில் சாலையோர நடைபாதையில் நடந்து சென்ற பெண் திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விழுந்து படுகாயமடைந்தார். லான்ஷூ என்ற இடத்தில் சாலையோரம் உள்ள நடைபாதையில் நடந்து சென்ற பெண் ஒருவர் திடீரென உண்டான பள்ளத்தில் விழுந்தார். சுமார் 10 அடி ஆழத்திற்கு ஏற்பட்ட அந்தப்...

உக்ரைனில் குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சியளிக்கும் கிளர்ச்சியாளர்கள்

உக்ரைன் கிளர்ச்சியாளர்கள் குழந்தைகளுக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  உக்ரைனின் கிழக்குப் பகுதியை தங்களது ஒரு பகுதி என ரஷ்யா கூறி வருகிறது. இதற்கு ஒருபிரிவினர் ஆதரவும், மற்றொரு தரப்பினர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். எதிர்ப்பாளர்கள் அமெரிக்க...

பனியில் சிக்கியவர்களை காப்பாற்றச் சென்று பனியில் சிக்கிய நாய் மீட்பு

ரஷ்யாவில் உறைபனியில் சிக்கி உயிருக்குப் போராடிய நாய் நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்டது. சிட்டா என்ற நகரில் உள்ள கெனான் என்ற ஏரியில் கண்காணிப்புக் குழுவைச் சேர்ந்த நாய் ஒன்று சுற்றி வந்தது. உறைந்திருந்த அந்த ஏரியில் யாராவது சிக்கியுள்ளனரா என்று பார்த்து...

இலங்கை நாடாளுமன்றம் கலைப்புக்கு எதிரான மனுக்களை விசாரணைக்கு ஏற்றது அந்நாட்டு உச்சநீதிமன்றம்

இலங்கையின் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து ரணில் விக்ரம்சிங்கே உள்ளிட்ட பலர் தாக்கல் செய்த மனுக்கள் மீது அந்நாட்டு உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. ராஜபக்சேவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், நாடாளுமன்றத்தைக் கலைத்த சிறிசேனா ஜனவரி 5ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்தார்....

ஒரே இடத்தில் குவிந்து கிடக்கும் குட்டி சுறாக்கள்

அயர்லாந்தின் ஆழ்கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான குட்டி சுறா மீன்கள் வலம் வருவதை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். மேற்கு கடற்கரைப் பகுதியில் 2 ஆயிரத்து 500 அடி ஆழத்தில் நூற்றுக்கணக்கான பூனைச் சுறாக்களும், ஆயிரக்கணக்கான முட்டை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுறாக்கள் எப்போதும் குட்டிகளை ஈன்றெடுக்கும் தன்மை கொண்டவை....