​​
Polimer News
Polimer News Tamil.

அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி அளிக்காததால் சாலை மறியலில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு கைது

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் அரசு நிகழ்ச்சியில் பங்கேற்க அனுமதி அளிக்காததால் சாலை மறியலில் ஈடுபட்ட சட்டப்பேரவை உறுப்பினர் பிரபு கைது செய்யப்பட்டார். குடியநல்லூர் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைச்சர் சி.வி. சண்முகம் திறந்துவைத்தார். அண்மையில் அதிமுகவிலிருந்து தினகரன் அணிக்கு மாறிய...

நெடுஞ்சாலையில் புது மணப்பெண்ணை சுட்டுக் கொன்று நகைகள் கொள்ளை

டெல்லி-டேராடூன் நெடுஞ்சாலையில் மீரட் அருகே, திருமண கோஷ்டியின் காரை வழிமறித்த 6 கொள்ளையர்கள், மணப்பெண் ஃபர்ஹானாவை சுட்டுக் கொன்று விட்டு 5 லட்சம் ரூபாய் நகைகளுடன் காரையும் கடத்தி தப்பிச் சென்றுவிட்டனர். கையில் உள்ள ரிவால்வரில் சுட்டதில் திருமண கோஷ்டியை சேர்ந்த...

உலகின் குறைந்த உயரம் கொண்ட மனிதரா மன்பிரீத் கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரிக்க கோரிக்கை

இந்தியாவின் உயரம் குறைந்த இளைஞரான மன்பிரீத் சிங்கை கின்னஸ் சாதனை புத்தகம் அங்கீகரிக்கவேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாபைச் சேர்ந்த 23 வயது மன்பிரீத் சிங்கின் உயரம் 24 புள்ளி 7 அங்குலமாகும். மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் முற்றிலும் குழந்தைபோல அவர்...

Face Tracker என்ற நவீன மொபைல் போன் செயலி மூலம் செயின் பறிப்பு கொள்ளையனை கைது செய்த போலீஸ்

சென்னையின் பல பகுதிகளில் தொடர் செயின் பறிப்புச் சம்பவங்களை அரங்கேற்றி வந்த கொள்ளையனை, ஃபேஸ் ட்ரேக்கர் என்ற நவீன மொபைல் போன் செயலி மூலம் போலீசார் கைது செய்துள்ளனர்.  சென்னை அபிராமபுரம் சிருங்கேரி மட சாலையில்,  வாகனசோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக...

கருப்பு நிற குரங்குகளை கணக்கெடுக்கும் சீனா வனவிலங்கு அதிகாரிகள்

சீனாவில் முதன்முதலாக கருப்பு நிற கூர்மூக்கு குரங்குகள் குறித்த கணக்கெடுப்பை யுனான் வனப்பகுதியில் வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.ஜின்ஷா ஆற்றின் கரையை ஒட்டிய அடர்ந்த காடுகளில் வசிக்கும் இத்தகைய குரங்குகள் அரசின் பாதுகாப்புடன் உயிர் பிழைத்துள்ளன.அவை மரத்தை விட்டு மரம் தாவி பாயும்...

புதுச்சேரியில் தூய்மை சான்றிதழ் பெறாத கிராமங்களுக்கு இலவச அரிசி கிடையாது என்ற உத்தரவு வாபஸ்

இலவச அரிசி விவகாரத்தில் கடும் எதிர்ப்பு  கிளம்பியதை அடுத்து, புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண்பேடி ஒரேநாளில் தனது உத்தரவை வாபஸ் பெற்றுக் கொண்டார். புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி, மண்ணாடிப்பட்டு கிராமத்தில் நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் முடிவில், சுத்தமான...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி வெற்றி - பரபரப்பான ஆட்டத்தில் சென்னை அணியை வீழ்த்தியது

சென்னை அணிக்கு எதிரான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. சென்னை- மும்பை அணிகள் மோதிய போட்டி புனேவில் நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து, முதலில் களம்...

பாலியல் பலாத்கார வழக்கில் சிறையில் உள்ளார் ஆசாரம் பாபு ஆசிரம வாசிகளுடன் தொலைபேசியில் பேசிய பேச்சு வெளியானது

சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்த குற்றத்துக்காக சாகும் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட ஆசாரம் பாபு நல்லகாலம் பிறக்கும் எனப் பேசியுள்ள ஆடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஆசிரமத்தில் உள்ள சிறுமியைப் பாலியல் பலாத்காரம் செய்தது தொடர்பான வழக்கில் சாமியார் ஆசாரம் பாபுக்கு...

ஆந்திர மாநிலத்தில் வீட்டிற்கு திருட வந்த மர்மநபர்கள், கேமரா காட்சிகள் மூலம் சிக்கினர்

ஆந்திர மாநிலத்தில் பூட்டிய வீட்டை கேமிரா பொருத்தி போலீசார் கண்காணிப்பது தெரியாமல் திருட வந்தவர்கள் சிக்கிக் கொண்டனர். அந்த மாநிலத்தின் குப்பம் மண்டலம் சாந்தி லேஅவுட்டில் வசிக்கும் ராதாகிருஷ்ணராஜு என்பவர் 23ஆம் தேதி வெளியூர் சென்றார். இது குறித்து முன் கூட்டியே போலீசாருக்கு...

காவிரி பிரச்சினையில் விவசாயிகள் உரிமையை பெற்றுத்தர இறுதி வரை போராடுவோம் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

காவிரி பிரச்சினையில் விவசாயிகள் உரிமையை பெற்றுத்தர இறுதி வரை போராடுவோம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்தி திருவாரூரில் அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,...