​​
Polimer News
Polimer News Tamil.

சூரத் நகரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி வரும் 30ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் சர்வதேச விமான நிலையத்தை பிரதமர் மோடி வரும் 30ம் தேதி நாட்டுக்கு அர்ப்பணிக்க உள்ளார். சூரத்தில் இருந்து முதல் சர்வதேச விமானம் ஷார்ஜாவுக்கு அன்றைய தினம் தொடங்கப்படும். இதற்கான ஏற்பாடுகளை சூரத் விமான நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு...

பேருந்துகள் வேலை நிறுத்தம் 9 வது நாளாக நீடிப்பு

மும்பையின் BEST போக்குவரத்துக் கழக பேருந்து தொழிலாளர்கள் போராட்டம் இன்று 9வது நாளை எட்டியுள்ளது. பேருந்துகள் ஓடாததால் பல லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மின்சார புறநகர் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிகிறது. ஆட்டோ, டாக்சி கட்டணங்களும் தாறுமாறாக உயர்ந்துள்ளன.தொழிலாளர்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தும் கொள்கைகளை...

நியுயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் மீதான பழைய பாலம் தகர்ப்பு

அமெரிக்காவின் நியுயார்க் நகரில் ஹட்சன் ஆற்றின் மீதான Tappan Zee என்றைழைக்கப்படும் பழைய பாலம் ஒன்று வெடி வைத்து தகர்க்கப்பட்டது. தென் நியாக்கை இணைக்கும் இந்தப் பாலம் பழுதானதையடுத்து அருகில் புதுப்பாலம் கட்டப்பட்டது. கடந்த 2017ம் ஆண்டு முதல் புதுப்பாலம் பயன்பாட்டுக்கு வந்ததையடுத்து...

ஹைதராபாதில் சர்வதேச காற்றாடித் திருவிழா கோலாகலம்

ஹைதராபாத்தில் சர்வதேச காற்றாடித் திருவிழா களை கட்டியுள்ளது. வானத்தில் வண்ண வண்ண காற்றாடிகள் வட்டமிடுகின்றன. பல்வேறு வண்ணங்கள், புள்ளிகள், சித்திரங்களுடன் கூடிய விதவிதமான காற்றாடிகளை மக்கள் உற்சாகமாக பறக்க விடுகின்றனர். பலத்த காற்று வீசும் இப்பருவ காலத்தில் காற்றாடி விடுவது உற்சாகமான விளையாட்டாக...

நட்சத்திர விடுதியில் புகுந்து தீவிரவாதிகள் தாக்குதல், 11பேர் உயிரிழப்பு

கென்யாவின் நைரோபி நகரில் வெளிநாட்டவர் தங்கக் கூடிய dusit d 2 நட்சத்திர விடுதிக்குள் தீவிரவாதிகள் புகுந்து தாக்குதல் தொடுத்ததில் 11 பேர் உயிரிழந்தனர். பலர் படுகாயம் அடைந்தனர். தீவிரவாதிகளில் ஒருவன் தனது உடலில் கட்டியிருந்த குண்டுகளை வெடிக்கச் செய்ததில் பெரும் சேதம்...

கும்பமேளா தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் ஒன்றரை கோடி பேர் புனித நீராடியுள்ளனர்

கும்பமேளா தொடங்கிய முதல் நாளிலேயே சுமார் ஒன்றரை கோடி பேர் புனித நீராடியுள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக் ராஜில் கும்பமேளா களை கட்டியுள்ளது. இந்நிலையில் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி பக்தர்களும் சாதுக்களும் நேற்றிரவு சுமார் 11 லட்சம்...

வேட்டைக்காரர்களால் காயம்பட்ட குட்டி யானை

தாய்லாந்தில் வேட்டைக்காரர்களால் காயமாக்கப்பட்ட குட்டி யானை பரிதாபமா உயிரிழந்தது. ரயோங் பகுதியில் பிறந்து சில மாதங்களேயான யானைக் குட்டி ஒன்று தனியாகச் சுற்றித் திரிந்தது. இதனைக் கண்ட கிராமத்தினர் வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனத்துறையினர் யானையைப் பார்வையிட்ட போது, அதன் காலில் வேலிக்...

முதலையின் பிடியில் இருந்து நொடிப்பொழுதில் தப்பியவர்

கொலம்பியாவில் கடலுக்குள் செல்ல இருந்த முதலையின் பிடியில் இருந்து இளைஞர் ஒருவர் நூலிழையில் உயிர் தப்பிய காட்சிகள் வெளியாகி உள்ளன. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் உள்ள சாண்டா மரியா கடற்கரையில் ஏராளமான சுற்றுலா பயணிகள் பொழுதைப் போக்கிக் கொண்டிருந்தனர். அப்போது கடலுக்குள்...

உலகில் திமிங்கல வேட்டையில் ஜப்பான் முன்னணியில் உள்ளது

சர்வதேச நாடுகளின் எதிர்ப்பையும் மீறி ஜப்பான் தனது திமிங்கல வேட்டையைத் தொடங்கியுள்ளது. திமிங்கலங்களை வேட்டையாடி அதன் மூலம் அன்னியச் செலாவணியை ஜப்பான் ஈட்டி வருகிறது. இதன் காரணமாக திமிங்கலங்களின் எண்ணிக்கை கடும் சரிவை சந்தித்தன. இதையடுத்து திமிங்கல வேட்டைக்கு 88 நாடுகள் தடை...

ராட்சதப் பூரானை செல்லப்பிராணியாக வளர்க்கும் இளைஞர்

தைவானில் இளைஞர் ஒருவர் கொடிய விஷமுடைய ராட்சத பூரானை வளர்த்து வருகிறார். கல்லூரியில் உயிரியல் பட்டப்படிப்பு படித்து வரும் நெய்ல் சங் லீ என்பவர், தனது வீட்டில் சுமார் ஒன்றரை அடி நீளமுள்ள பூரானை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார். கொடிய விஷம் கொண்ட...