NAAC கருத்தரங்கு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டுள்ளன

NAAC எனப்படும் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான தேசிய தர நிர்ணய குழுவின் கருத்தரங்கம் சென்னையில் இன்று நடைபெற்றது.

சென்னைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்த கருத்தரங்களில் தேசிய தர நிர்ணய குழுவின் தலைவர் வீரேந்திர சவுகான் உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களின் முதல்வர்கள், பேராசியர்கள் என பலரும் கருத்தரங்கில் கலந்து கொண்டனர். அப்போது பேசிய வீரேந்திர சவுகான், தேசிய தர நிர்ணய குழுவின் அங்கீகாரத்தைப் பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான விதிமுறைகள் எளிமை படுத்தப்பட்டுள்ளதாகவும், விண்ணப்பித்த கல்லூரிகள் உள்கட்டமைப்பு போன்ற அனைத்து பிரிவுகளிலும் 30 சதவீதம் புள்ளிகளைப் பெற வேண்டும் என்றும் கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன