IRCTC இணையதளத்தில் சில வங்கிகளின் டெபிட் கார்டு பயன்பாடு முடக்கம்

ரயில் டிக்கெட்டுக்கு ஆன் லைன் மூலம் பணம் செலுத்த சில வங்கிகளின் டெபிட் கார்டுகளை பயன்படுத்த முடியாத வகையில் ஐ.ஆர்.சி.டி.சி. முடக்கியுள்ளது.

கன்வீனியன்ஸ் கட்டண பிரச்னையே இதற்குக் காரணம் எனத் தெரிகிறது. ஐ.ஓ.பி., கனரா வங்கி, யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா, இந்தியன் வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா, எச்.டி.எஃப்.சி மற்றும் ஆக்சிஸ் வங்கிகளின் டெபிட் கார்டுகளை பயன்படுத்தி தற்போது ஆன் லைன் மூலம் பணம் செலுத்தலாம். பண மதிப்பு நீக்க நடவடிக்கைக்குப் பிறகு நுகர்வோரிடம் இருந்து வசூலிக்கப்படும் 20 ரூபாய் கன்வீனியன்ஸ் கட்டணத்தை ஐ.ஆர்.சி.டி.சி. தள்ளுபடி செய்துள்ளது.

இதில் பாதியை வங்கிகள் ஏற்க வேண்டும் என்று ஐ.ஆர்.சி.டி.சி. கூறுகிறது. ஆனால் இதனை வங்கிகள் ஏற்கவில்லை. எனவே சில வங்கிகளின் டெபிட் கார்டுகள் மூலம் பணம் செலுத்தும் வசதியை தங்களது இணையதளத்தில் இருந்து ஐ.ஆர்.சி.டி.சி. நீக்கியுள்ளது. பிரச்னையைத் தீர்க்க இந்திய வங்கிகள் சங்கமும், ஐ.ஆர்.சி.டி.சி. நிர்வாகமும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன