#TeamQuaden: தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் 9 வயது சிறுவன்

0 1695

பள்ளியில் தனது உருவத்தை வைத்து கேலி செய்வதால் தற்கொலை செய்து கொள்ள தாயிடம் தூக்கு கயிறு கேட்டு கதறும் 9 வயது சிறுவனின் வீடியோ வைரலாகி வருகிறது.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பெண் ஒருவர் பேஸ்புக் பக்கத்தில் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று தனது 9 வயது மகன் குவார்டன் ((Quaden)) கதறும் வீடியோவை பதிவிட்டுள்ளார்.

தலை பெரியதாகவும், கை, கால்கள் வளர்ச்சி குன்றி காணப்படும் தன்னை பள்ளியில் உள்ள அனைவரும் கேலி செய்து கொடுமைப்படுத்துவதாக கூறி சிறுவன் கதறும் வீடியோ பலரது நெஞ்சங்களையும் உலுக்க வைத்துள்ளது.

வீடியோவை பார்த்த இணையதள வாசிகள் #TeamQuaden என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி சிறுவனுக்கு ஆதரவாக குரலெழுப்பி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments