​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை உடல்நிலையில் முன்னேற்றம்

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானை உடல்நிலையில் முன்னேற்றம்

சேலம் சுகவனேஸ்வரர் கோயில் யானையின் உடல்நலம் தொடர்ந்து தேறி வருவதாக, மருத்துவர் குழு தெரிவித்துள்ளது. ராஜேஸ்வரி என்ற அந்த யானை, கடந்த சில மாதங்களாக கால்வீக்க நோயால் அவதியுற்றதால், கோரிமேட்டில் உள்ள கோயிலுக்குச் சொந்தமான இடத்தில் வைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. படுத்தபடியே இருக்கும்...

அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான EPF பங்களிப்பை அரசே வழங்கும்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான 12 விழுக்காடு பங்களிப்பை அரசே வழங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமைப்பு சாரா துறைகளில் பணியாற்றும் 1 கோடி ஊழியர்கள்...

திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் நிகழ்ச்சிகளை மத்திய அரசு புறக்கணித்ததாக தகவல்

திபெத்திய புத்த மதத் தலைவர் தலாய் லாமாவின் நிகழ்ச்சிகளை இந்தியா புறக்கணித்துள்ளதாகக் கூறப்படுகிறது. தலாய்லாமாவும் அவரது ஆதரவாளர்களும் இந்தியாவில் தஞ்சம் அடைந்து 60 ஆண்டுகள் ஆவதையொட்டி டெல்லியில் தாங்க்யூ இந்தியா என்ற நிகழ்ச்சியும், பிரார்த்தனை நிகழ்ச்சியும் நடைபெற இருந்தது. இவற்றில் தாங்க்யூ இந்தியா நிகழ்ச்சி...

மராட்டிய முதல்வர் உறுதியை ஏற்று 6 நாட்களாக நீடித்த உண்ணாவிரதத்தை முடித்தார் அன்னா ஹசாரே

ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் அமைக்க வலியுறுத்தி, டெல்லியில் ஆறுநாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்ட சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே மஹாராஷ்டிர முதலமைச்சருடனான சந்திப்புக்குப் பின் தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார். சில ஆண்டுகளுக்கு முன் இதேபோல் உண்ணாவிரதம் இருந்து லோக்பால் சட்டம் இயற்ற...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி டெல்லியில் போராடிய தமிழக விவசாயிகள் கைது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி டெல்லியில் சாலை மறியலில் ஈடுபட்ட தமிழக விவசாயிகள் கைது செய்யப்பட்டனர். பல்வேறு விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்தினர். மத்திய அரசின் கவனத்தை ஈர்க்கும் விதமாக கைதட்டி ஓசையெழுப்பி...

சேலம் அருகே தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் கடன் மோசடி, உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில் லஞ்சஒழிப்புத்துறை சோதனை

சேலம் அருகே கூட்டுறவு சங்கத்தில் விவசாயக் கடன் வழங்கியதில் முறைகேடு நடந்தது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவின்பேரில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் 4 மணி நேரம் விசாரணை நடத்தினர். கேதுநாயக்கன்பட்டி புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2016-ஆம் ஆண்டு 250 கடன்கள்...

ஊருணியில் கழிவு கலப்பதாக குற்றம்சாட்டி நெல்லையில் அமைச்சர், மாவட்ட ஆட்சியரை முற்றுகையிட்ட மக்கள்

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் அங்கன்வாடி மையத்தை திறந்து வைக்க வந்த அமைச்சர் ராஜலட்சுமி மற்றும் மாவட்ட ஆட்சியரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். சங்கரன்கோவில் காயிதே மில்லத் தெருவில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி மைய திறப்பு விழாவுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் ராஜலட்சுமி மற்றும்...

கிம் ஜாங் உன் சீன பயணம் குறித்த வீடியோ வடகொரிய அரசு ஊடகத்தில் வெளியிடப்பட்டது

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னின் சீனப்பயணம் குறித்த வீடியோ காட்சிகளை வடகொரிய அரசு ஊடகம் வெளியிட்டுள்ளது. 40 நிமிடங்கள் ஓடக் கூடிய அந்த வீடியோவில் கிம் ஜோங் உன் தனி ரயிலில் சீனா சென்ற போது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பு காட்சிகள்...

ராயப்பேட்டையில் சரக்கு வாகனத்தைத் திருடியது தொடர்பாக கும்பகோணத்தில் 4 பேர் கைது

சென்னை ராயப்பேட்டையில் சரக்கு வாகனத்தைத் திருடியது தொடர்பாக கும்பகோணத்தில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். ராயப்பேட்டையில் உள்ள எம்.ஆர்.பி. டூல்ஸ் நிறுவனத்தில் நிறுத்தப்பட்டிருந்த டாடா ஏஸ் சரக்கு வாகனம் காணாமல் போனது. இப்பகுதி கண்காணிப்புக் காமிரா காட்சிகளை ஆய்வு செய்த போது...

மாணவர்களுக்கு கல்வி மட்டுமின்றி களப்பயிற்சியும் அவசியம் - சச்சின் டெண்டுல்கர்

கல்வி மட்டுமின்றி களப்பயிற்சியின் மூலமாகவும் மாணவர்கள் தங்கள் துறைகளில் தயாராக வேண்டும் என முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வலியுறுத்தியுள்ளார். செங்கல்பட்டு மகிந்திராசிட்டியில் உள்ள  பிஎம்டபுள்யு கார் தொழிற்சாலையின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக சச்சின் டெண்டுல்கர் கலந்து கொண்டார்....