​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வைகோ லவுட் ஸ்பீக்கருடன் பிறந்தவர் : ஜெயக்குமார்

வைகோ லவுட் ஸ்பீக்கருடன் பிறந்தவர் : ஜெயக்குமார்

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ லவுட் ஸ்பீக்கருடன் பிறந்திருப்பதாகவும், வீரவசனம் பேசுவதாகவும் கூறிய அமைச்சர் ஜெயக்குமார் தான் வீரவசனம் பேசுவதில்லை என்றார். ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசுவதைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என வைகோ தெரிவித்ததாகக் கூறி எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு அவர் பதிலளித்தார். ...

கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி இந்தர்மீத் கவுர் விலகல்

டெல்லி உயர்நீதிமன்றத்தில் கார்த்தி சிதம்பரத்தின் ஜாமீன் மனுவை விசாரிப்பதில் இருந்து நீதிபதி இந்தர்மீத் கவுர் விலகிக் கொண்டுள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கார்த்தி சிதம்பரம், வரும் 24ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில்,...

இந்தியப் பெருங்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது

இந்தியப் பெருங்கடலில் நிலவி வந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தாழ்வு மண்டலமாக மாறியுள்ளதால், லட்சத்தீவு, மாலத்தீவு பகுதிகளுக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என சென்னை வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வானில ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன், இந்தியப் பெருங்கடல்...

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களுக்கு நாளை நிவாரணத் தொகை

ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்கள் குடும்பங்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை நிவாரணத் தொகைகளை வழங்குகிறார்.  ஒக்கி புயலின் போது மாயமான மீனவர்களுக்கு தலா 20 லட்சம் ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக ஆய்வு...

டொனால்டு டிரம்பை அமெரிக்க மக்கள் தலைவராக ஏற்கவில்லை : ஹிலாரி

டொனால்டு டிரம்பை அமெரிக்க மக்கள் தலைவராக ஏற்கவில்லை என்று ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், மத்தியப் பிரதேச மாநிலம் மாண்டுவில் ((Mandu)) செய்தியாளர்களிடம் பேசிய அவர், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சில அமெரிக்கர்களின் மோசமான...

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர் வெளிநாடு தப்பியதாக தகவல்

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நபர், வெளிநாடு தப்பி ஓடியதாக தகவல் வெளியாகியுள்ளது. முறைகேடு வழக்கில் 156 பேர் மீது, சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தரகர்கள், டேட்டா எண்ட்ரி நிறுவன ஊழியர்கள் என இதுவரை...

பல நாட்கள் தங்கியிருந்து மீன்பிடிக்கும் 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் திரும்பி வரவேண்டியுள்ளன - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்

தங்குகடல் மீன்பிடிப்புக்கு 51 படகுகளில் சென்ற 500-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கரைதிரும்ப வேண்டியிருப்பதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயக்குமார் தெரிவித்தார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், குமரி கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நகர்வுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக கூறினார்....

குரங்கணி விபத்தைப் பாடமாகக் கொள்ள வேண்டும் - மருத்துவர் சங்கம்

குரங்கணி விபத்தைப் பாடமாகக் கொண்டு ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்குமாறு தமிழக அரசக்கு சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்க பொதுச்செயலாளர் டாக்டர் ரவீந்திரநாத் வலியுறுத்தியுள்ளார். அனைத்து மையங்களிலும் தீக்காய சிகிச்சை கிடைப்பதை உறுதி செய்யவும் அவர் வலியுறுத்தினார்....

ஆஸ்திரேலிய ஆளுநர் பாதுகாப்புக்கு சென்று ஐடிசி சோழா ஓட்டலுக்கு வெளியே தவித்த காவலர்கள்

சென்னை கிண்டியில் உள்ள ITC கிராண்ட் சோழா நட்சத்திர ஓட்டலில் தங்கி இருந்த ஆஸ்திரேலிய நாட்டின் ஆளுநர் பீட்டர் காஸ்கிராவ் தமக்கு காவல்துறை பாதுகாப்பு தேவையில்லை என்று கூறி விட்ட நிலையில், அதிகாரிகள் உத்தரவை மீற முடியாமல், ஆயுதப்படை காவலர்கள், இரவு...

குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது SBI

பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ, குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக அபராதம் விதித்ததன் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் பாரத ஸ்டேட்...