​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உத்தரப்பிரதேச கஸ்கஞ்ச் கலவரம் தொடர்பாக 112 பேர் கைது

உத்தரப்பிரதேச கஸ்கஞ்ச் கலவரம் தொடர்பாக 112 பேர் கைது

உத்தரப்பிரதேச மாநிலம் கஸ்கஞ்ச் கலவரம் தொடர்பாக 112 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குடியரசு தினத்தை முன்னிட்டு கஸ்கஞ்ச் நகரில் விஸ்வ இந்து பரிஷத்தும் பா.ஜ.க. மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி.யும், இணைந்து நடத்திய பேரணியின் மீது மர்ம நபர்கள் கல்வீசியதைத் தொடர்ந்து கலவரம் வெடித்தது. கடைகள்...

போக்குவரத்து அலுவலகத்தில் பழகுநர் உரிமம் பெறப் பெண்கள் காத்திருப்பு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் இருசக்கர வாகன ஓட்டப் பழகுநர் உரிமம் வாங்குவதற்காக ஐந்நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் வரிசையில் காத்து நின்றனர். மகளிருக்கு இருசக்கர வாகனம் வாங்குவதற்கு மானியம் வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து ஏராளமானோர் அதற்கான...

கழிவறைக்குள் சென்ற 12 அடி நீளமுள்ள பாம்பு மீட்பு

ஆஸ்திரேலியாவில் கழிவறைக்குள் சென்ற 12 அடி பாம்பு ஒன்று பிடிபட்டது. குயின்ஸ்லாந்து பகுதியில் வீட்டுக்குள் நுழைந்த மரப்பாம்பு ஒன்று, ஆட்கள் நடமாட்டம் அதிகமாக இருந்ததால் அருகில் இருந்த கழிவறைக்குள் சென்றது. தண்ணீர் திறக்கப் பயன்படும் சிறிய துவாரத்திற்குள் சென்ற அந்தப் பாம்பை, உள்ளூர்...

யானைகள் புத்துணர்வு முகாம்: மவுத் ஆர்கன் வாசித்தல், நொண்டி அடித்தல் என உற்சாகமாக பொழுதுபோக்கும் யானைகள்

தமிழகத்தில் உள்ள கோவில் மற்றும் திருமடங்களைச் சேர்ந்த யானைகளுக்கு புத்துணர்வு அளிக்கும் வகையில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் அருகில் தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் யானைகள் புத்துணர்வு முகாம் நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் 4ஆம் தேதி தொடங்கிய முகாமில் 33...

சிரியா உள்நாட்டுப் போரால் அகதிகளானவர்களை சந்தித்தார் ஏஞ்சலினா ஜோலி

ஐ.நா.சபையின் சிறப்புத் தூதரான ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி ஜோர்டான் நாட்டின் ஜத்தாரி முகாமில், சிரிய அகதிகளை சந்தித்துப் பேச்சு நடத்தினார். சுமார் 85 ஆயிரம் பேர் இந்த முகாமில் அகதிகளாக உள்ளனர். தமது இரண்டு குழந்தைகளுடன் முகாமுக்கு சென்ற நடிகையை, அங்குள்ளவர்கள்...

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர். திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே அய்யம்பாளையத்தில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுப்போட்டியில் 600காளைகளும் 250க்கு மேற்பட்ட மாடுபிடி வீரர்களும் பங்கேற்றுள்ளனர். மாடுகள் முட்டியதில் வீரர்கள் 5பேர் காயமடைந்தனர். விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் அருகே...

திருச்சியில் துப்பாக்கி விற்பனை செய்ய முயன்ற போலீஸ்காரர் கைது

திருச்சியில் துப்பாக்கி விற்பனை செய்வதற்காக ஹோட்டலில் தங்கியிருந்த சென்னையைச் சேர்ந்த போலீஸ்காரரை போலீசார் கைது செய்துள்ளனர். திருச்சி கண்டோன்மெண்டு பகுதியில் உள்ள ஓட்டல்களில் சிலர் துப்பாக்கிகளுடன் தங்கியிருப்பதாக தஞ்சை ஒருங்கிணைந்த குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைந்தது. அதன் பேரில் ஆய்வாளர் செந்தில்குமார்...

மன்னிப்பு கேட்பதால் வைரமுத்துவின் தரம் தாழ்ந்துவிடாது – பொன்.ராதாகிருஷ்ணன் கருத்து

மன்னிப்பு கேட்பதால் வைரமுத்துவின் தரம் தாழ்ந்துவிடாது என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தன் தாய்க்கு நிகராக ஆண்டாளை மதிப்பதாக கூறும் வைரமுத்து, அந்த தாயிடம் மன்னிப்பு கேட்பதால் அவரின் தரம் தாழ்ந்து விடாது...

துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து 3,000-த்துக்கு மேற்பட்டோர் போராட்டம்

குமரி மாவட்டத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ள பன்னாட்டு சரக்குபெட்டக மாற்று முனையத் துறைமுகத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கன்னியாகுமரியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவ மக்கள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 27 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான இந்தத் துறைமுகத்தை முதலில் இனையம் பகுதில்...

இனி என்னை அரசியல் மேடைகளில் அடிக்கடி காணமுடியும் : உதயநிதி ஸ்டாலின்

இனி தன்னை அரசியல் மேடைகளில் அடிக்கடி காணமுடியும் என்று மு.க.ஸ்டாலின் மகனும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேருந்துக் கட்டண உயர்வுக்கு எதிராக தி.மு.க. சார்பில் தாம்பரத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர் மேடையில் நிற்பதைவிட தொண்டர்களில் ஒருவனாக...