​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆஸ்திரேலியா அருகில் உள்ள தீவு நாட்டில் நித்தியானந்தாவுக்கு வங்கி கணக்கு

ஆஸ்திரேலியா அருகில் உள்ள தீவு நாட்டில் நித்தியானந்தாவுக்கு வங்கி கணக்கு

நித்யானந்தா, வனுவாட்டு தீவு நாட்டின் வங்கியில், கணக்கு வைத்துள்ளது தெரியவந்துள்ளது. சிறப்பு பூஜை செய்ததற்கு கட்டணம் செலுத்துமாறு, நித்யானந்தா தரப்பில், ஒருவருக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலில், வனுவாட்டு தேசிய வங்கியின் தகவல்கள் குறிப்பிடப்பட்டிருந்தன. அதன்மூலம், வனுவாட்டு தலைநகர் போர்ட் வில்லாவில் உள்ள வங்கிக்...

கடத்தல்காரர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட 1000 கோடி மதிப்புடைய ஹெராயின் அழிப்பு

டெல்லியில் ஆயிரம் கோடி மதிப்புடைய ஹெராயின் போதைப் பொருளை சுங்கத் துறை அதிகாரிகள் அழித்தனர். ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு கடத்தி கொண்டு வரப்படும் ஹெராயின், பிறகு இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தல்காரர்களால் கடத்தப்படும். இதுபோல கடத்தலுக்கு கொண்டு வரப்பட்ட ஆயிரம்...

நீர்மூழ்கி கப்பலில் இருந்து ஏவுகணையை ஏவி இந்தியா 2வது முறையாக சோதனை

நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை இந்தியா 2-வது தடவையாக வெற்றிகரமாக சோதித்து பார்த்துள்ளது. நீர்மூழ்கி கப்பலில் இருந்து பாய்ந்து சென்று இலக்கை தாக்கவல்ல பாலிஸ்டிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு...

இருசக்கர வாகனத்தில் டிக்டாக் எடுத்தபடியே பயணித்தவர்களுக்கு நிகழ்ந்த விபரீதம்

ஒடிஷா மாநிலம் பெர்ஹாம்பூரில், இளைஞர்கள், டிக்டாக்கில் வீடியோ பதிவு செய்துகொண்டே இருசக்கர வாகனம் ஓட்டியபோது நிகழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். கஞ்சம் மாவட்டத்தைச் சேர்ந்த ஷிப சங்கர் சாஹு என்பவர், தனது மைத்துனருடன் ஆலயத்திற்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார். இருவரும், டிக்டாக்கில்...

தமிழகத்தைச் சேர்ந்த 24 காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிப்பு

தமிழகத்தைச் சேர்ந்த 24 காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. குடியரசு தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த காவல்துறையினருக்கு குடியரசுத் தலைவர் பதக்கங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் தமிழகத்தில் சிலைத் தடுப்புப் பிரிவு ஏ.டி.ஜி.பி. அபய் குமார்...

திடீரென தீப்பிடித்து எரிந்த அரசு பேருந்து

கோவை மாவட்டம் கவுண்டம்பாளைம் பணிமனையில் இருந்து வெளியே வந்த அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான சொகுசு பேருந்து ஒன்று மின்கசிவு காரணமாக கொளுந்து விட்டு எரிந்து சேதமடைந்தது. கவுண்டம்பாளையத்தில் உள்ள தமிழ்நாடு அரசு விரைவு போக்குவரத்து கழக பணிமனையில் பேருந்துகளை பராமரிக்கும்...

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை - சுகாதாரத் துறை அமைச்சர்

தமிழகத்தில் கொரனோ வைரஸ் பாதிப்பு இல்லை என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் நகராட்சிக்குட்பட்ட காந்தி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆய்வு செய்தனர். பின்னர்...

சபலத்துக்கும் மதுபோதைக்கும் அடிமையாகி இரண்டரை வயது பேத்தியை தொலைத்து நிற்கும் முதியவர்

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் முதியவரை மயக்கி, அவரது இரண்டரை வயது பேத்தியை கடத்திச் சென்றதாகக் கூறப்படும் பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 62 வயதில் சபலத்துக்கும் மதுபோதைக்கும் அடிமையாகி பேத்தியை தொலைத்துவிட்டு நிற்கும் நபர் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... பல்லடம் அடுத்த...

காவலர் தேர்வில் களவாணிதனம்.. குற்றவாளிகளுக்கே வகுப்பெடுக்கும் வகையில் நூதன மோசடி

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு போல, தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய சார்பு ஆய்வாளர், 2-ம் நிலை காவலர் பதவிகளுக்கான தேர்விலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.  தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வில் நடைபெற்ற முறைகேடு...

சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளியே வரவேண்டும் - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேட்டி

சசிகலா சிறையில் இருந்து விரைவில் வெளியே வரவேண்டும் என தான் பிரார்த்திப்பதாக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சாமி தரிசனம் செய்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஜீயரை சந்தித்து உரையாடினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தனி நபர்கள்...