​​
Polimer News
Polimer News Tamil.

அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த முன்னாள் காவலர் கைது

சென்னை வடபழனியில் அரசு வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த முன்னாள் காவலர் கைது செய்யப்பட்டுள்ளார். மதுரையை சேர்ந்த ராஜீவ் கிருஷ்ணா என்பவர், ராஜீவ் கிருஷ்ணா 2013 முதல் 2014 வரை பெரம்பலூர் ஆயுதப்படையில் காவலராக பணியாற்றியுள்ளார். கடந்த 2015ஆம் ஆண்டில் இருந்து...

பீகாரில் டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை பெற்ற பெண் பலி

 டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பெண், பரிதாபாமாக உயிரிழந்தார். மருத்துவமனையில், ஒரு பெண்ணுக்கு காக்கி சட்டை அணிந்த மருத்துவமனை ஊழியர் ஒருவர், டார்ச் லைட் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை செய்யும் காட்சிகள் இரு தினங்களுக்கு சமூக வலைத்தளங்களில் வைரலாக...

மருத்துவமனைகளின் பதிவை கட்டாயமாக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி மருத்துவமனைகள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். சிறு மருத்துவமனையில் இருந்து பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வரை,...

மேம்படுத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

மேம்படுத்தப்பட்ட வழிநடத்து தொழில்நுட்பத்துடன் கூடிய பிரமோஸ் ஏவுகணையின் சோதனை வெற்றிகரமாக நடைபெற்றது. ராஜஸ்தான் மாநிலம் பொக்ரானிலிருந்துகாலை 8.42 மணிக்கு ஏவப்பட்ட இந்த ஏவுகணை திட்டமிட்ட பாதையில் பயணித்து இலக்கை துல்லியமாக தாக்கியதாக, பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தமது ட்விட்டர் பதவில்...

தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவடைந்தது, தேதி குறிப்பிடப்படாமல் சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது

தமிழ்நாடு சட்டப்பேரவை தேதிக் குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்படுவதாக, சபாநாயகர் தனபால் அறிவித்திருக்கிறார்.  தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 15ஆம் தேதி தொடங்கியது. முதல் நாளில், தமிழ்நாடு அரசின் 2018-2019ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, திங்கட்கிழமை முதல் புதன்கிழமை...

மற்றொரு பெண்ணுடன் சமி பேசிய விவரங்களை வெளியிட்டார் சமியின் மனைவி ஜஹான்

இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சமிக்கு பல பெண்களை அறிமுகம் செய்து வைத்ததே லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் முகமது பாய் என்பவர் தான் என சமியின் மனைவி புதிய புகார் ஒன்றை தெரிவித்துள்ளார். முகமது சமிக்கு பல்வேறு பெண்களுடன் தொடர்பு இருப்பதாக...

அக்காவின் கணவர் மீது ஆசை... அக்காவையே கொன்ற தங்கை...

திருப்பூரில் பச்சிளம் குழந்தையின் கண்முண்ணே இளம்பெண் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக அப்பெண்ணின் தங்கை மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்துள்ளனர். கலாபக்காதலன் திரைப்பட பாணியில் அக்காவின் கணவர் மீதான ஆசையால் கொலைகாரியாக மாறிய...

விழுப்புரம் போக்குவரத்து கோட்ட அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு சோதனை

விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தில் ஓய்வூதிய வைப்பு நிதி வழங்கியதில் 20 கோடி ரூபாய் கையாடல் செய்ததாக எழுந்த புகாரில் லஞ்ச ஒழிப்பு பொலீஸார் சோதனை நடத்தினர். ஓய்வூதியப் பணப்பலன்களுக்காக போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த 4 மாதங்களுக்கு...

ஃபேஸ்புக் ஆப்கள் மூலம் கண்காணிக்கப்படுவதில் இருந்து பயனாளர் தப்பும் வாய்ப்பு

ஃபேஸ்புக் பயன்பாட்டாளர்களின் ரகசியத் தகவல்கள் பரிமாறப்படுவதாகக் கூறி, உலகம் முழுவதும் டெலிட் ஃபேஸ்புக் எனும் பிரச்சாரம் நடந்துவரும் நிலையில், கண்காணிக்கப்படுவதில் இருந்து பயனாளர் தப்பவும் வாய்ப்பு உள்ளது.  ஃபேஸ்புக்கை வைத்துள்ள கணினி அல்லது மொபைலில் நாம் தேடுவது, நமக்குப் பிடித்தது, நாம் செலவிடுவது...

சேலம் அருகே கூலித்தொழிலாளி கழுத்தை அறுத்து கொடூர கொலை

சேலம் மாவட்டம் எளம்பிள்ளை அருகே கூலி தொழிலாளியை கழுத்தை அறுத்து கொடூரமாகக் கொலை செய்த கொலையாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். எளம்பிள்ளையைச் சேர்ந்த ராஜி, அப்பகுதியில் கூலிவேலை செய்து வந்தார். நேற்று வீட்டை விட்டு வெளியே சென்ற ராஜி அதன் பின்னர் வீடு...