​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்லத் தடை விதிக்க வாய்ப்பு

கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்கள் வெளிநாடு செல்லத் தடை விதிக்க வாய்ப்பு

வங்கிக் கடனைத் திருப்பிச் செலுத்தாத தொழிலதிபர்கள் 91 பேர் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது. பொதுத்துறை வங்கிகளில் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் கடன்பெற்ற பெருந்தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி ஆகியோர் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து...

தமிழக பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ஒட்டுமொத்தமாக 8,916 கோடி ரூபாய் ஒதுக்கீடு

நெல்லைப் போலவே, துவரை, உளுந்து, பச்சைப் பயறு உள்ளிட்ட பயறு வகைகளையும் தமிழக அரசு நேரடியாகக் கொள்முதல் செய்யும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. வேளாண்துறை மூலம் 10 லட்சம் ஹெக்டேரில் திருந்திய நெல் சாகுபடி மேற்கொள்ளப்படும். நெல் உற்பத்திக்கான ஊக்கத் தொகை வழங்க...

கரும்பு உற்பத்திக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு

கரும்புக்கான விலை நிர்ணயத்தில் வருவாய்ப் பகிர்வு விலை நிர்ணயம் என்னும் புதிய முறைக்கு மாற அரசு முடிவெடுத்துள்ளது. வருவாய்ப் பகிர்வு விலை நிர்ணய முறையால் விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகும் விலையுடன், கூடுதலாகச் சர்க்கரை ஆலைகளின் இலாபத்தில் ஒரு பகிர்வும் கிடைக்கும். கரும்புக்கான போக்குவரத்துச் செலவு...

மகசூல் அதிகரிப்பால் சின்னவெங்காயத்தின் விலை கடும் சரிவு

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே  மகசூல் அதிகரிப்பால் சின்னவெங்காயத்தின் விலை கடும் சரிவடைந்துள்ளது.  கடந்த சில மாதங்களாக சின்னவெங்காயத்தின் விலை, வரத்து குறைவு காரணமாக அதிகரித்து புதிய உச்சத்தை தொட்டது. இதன் காரணமாக தருமபுரி மாவட்டம் பாலக்கோடு மற்றும் அதன் சுற்றுவட்டார...

ரூ.8,200 கோடி மதிப்புள்ள டிசிஎஸ் பங்குகளை விற்கும் டாடா சன்ஸ்

நாட்டின் மிகப்பெரிய வர்த்தக குழுமமான டாடா சன்ஸ் லிமிடெட், தனது மென்பொருள் நிறுவனமான, TCS-ன் 8 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்புடைய பங்குகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இதையொட்டி, டிசிஎஸ் பங்குகளை 2 ஆயிரத்து 872 ரூபாய் முதல், 2 ஆயிரத்து...

A320Neo ரக விமானங்கள் பறப்பதற்கு தடை - IndiGo, GoAir நிறுவனங்களின் 65 விமான சேவைகள் ரத்து

பழுதடையும் வாய்ப்புடையவை என்று கருதப்படும் என்ஜின்களைக் கொண்ட A320Neo ரக விமானங்கள் பறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால்,  இண்டிகோ மற்றும் கோ(Go) ஏர் நிறுவனங்களின் 65 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.ஏர்பஸ் நிறுவனத்தின் A320Neo ரக விமானங்களை இந்தியாவில் இண்டிகோ மற்றும் கோஏர்...

குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது SBI

பாரத ஸ்டேட் வங்கியான எஸ்பிஐ, குறைந்தபட்ச இருப்புத் தொகை பராமரிக்காவிட்டால் விதிக்கப்படும் அபராதத்தை 75 சதவீதம் வரை குறைத்துள்ளது. வங்கிக் கணக்கு வைத்திருப்பவர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையை பராமரிக்காததற்காக அபராதம் விதித்ததன் மூலம் கடந்த ஆண்டு ஏப்ரல்-நவம்பர் காலகட்டத்தில் பாரத ஸ்டேட்...

டிஜிட்டல் முறையில் 200 இதழ்களை வழங்குகிறது ஆப்பிள்

டிஜிட்டல் முறையில் இதழ்களை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வகை செய்யும் ஒப்பந்தத்தில் ஆப்பிள் கையெழுத்திட்டது. டிஜிட்டல் இதழ்களுக்கான சந்தா சேவையை Next issue media LLC நிறுவனத்திடம் இருந்து ஆப்பிள் பெற்றது. இதன் மூலம் ஆப்பிளின் டிஜிட்டல் இதழ் சேவையை பயன்படுத்துவோர் மாதம்...

ஆந்திரா வங்கியின் பங்குகள் 15 ஆண்டுகளில் இல்லாத சரிவு

ஆந்திரா வங்கியின் முன்னாள் இயக்குநர் தொடர்புடைய ஊழல் விசாரணையால் அவ்வங்கியின் பங்குகள் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சியை சந்தித்துள்ளன. பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான ஆந்திரா வங்கியின் இயக்குநராக இருந்த அனுப் கார்க், Sterling Biotech எனும் தனியார் நிறுவனத்திற்கு மோசடியான ஆவணங்களின்...

எதையும் வேகத்தோடும், வலுவோடும் எதிர்கொள்வதே தமது வெற்றியின் ரகசியம் - ஜெஃப் பெசோஸ்

அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் எதையும் வேகத்தோடும், வலுவோடும் எதிர்கொள்வதே தமது வெற்றியின் ரகசியம் எனத் தெரிவித்துள்ளார். 54 வயதிலேயே உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளவர் அமேஸான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ். தமது தாத்தாவின் கேரேஜில் (Garage ) இருந்து அமேசான்...