​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தலைமைச் செயலகத்தில் யாகம் ஏதும் வளர்க்கவில்லை,யாகம் வளர்த்தால் முதலமைச்சராக முடியுமா? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

தலைமைச் செயலகத்தில் யாகம் ஏதும் வளர்க்கவில்லை,யாகம் வளர்த்தால் முதலமைச்சராக முடியுமா? ஓ.பன்னீர்செல்வம் கேள்வி

தலைமைச் செயலகத்தில் தமது அறையில் வழக்கமான சாமி வழிபாட்டைத்தான் நடத்தியதாகவும் யாகம் எதையும் நடத்தவில்லை என்றும் துணை முதலைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விளக்கமளித்துள்ளார்.  மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ், யாகம் செய்வதன் மூலம் முதலமைச்சர் ஆகலாம் என்ற சக்தி இருந்தால்,...

யாகம் வளர்த்தால் முதலமைச்சர் ஆகிவிட முடியுமா என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி

யாகம் வளர்த்தால் ஒருவர் முதலமைச்சராகிவிட முடியுமா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை இயக்குநர் அலுவலகத்தில், மீனவர்களுக்கு மானிய விலையிலான 27 இருசக்கர வாகனங்களை அமைச்சர் ஜெயக்குமார் வழங்கினார். அதைத் தொடர்ந்து, மீன்வளம் குறித்த 15 ஆயிரம்...

10 சதவீதம் இட ஒதுக்கீட்டை எதிர்த்து, திமுக தொடர்ந்த வழக்கில்,மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவதை எதிர்த்து, திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் வகையில், அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம்...

ஜம்மு-காஷ்மீரில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை... பாதுகாப்பு படையினர் அதிரடி..

காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்புப் படையினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பட்காம் மாவட்டம் சராரி ஷரிஃப்  நகரில் உள்ள ஜின்பாஞ்சல்  என்ற இடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில், பாதுகாப்பு படையினரும் போலீசாரும்...

சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஷ்வர ராவ் நியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரிப்பதில் இருந்து ரஞ்சன் கோகோய் விலகல்

சி.பி.ஐ. இடைக்கால இயக்குநர் நாகேஸ்வரராவின் நியமனத்துக்கு எதிரான வழக்கின் விசாரணையிலிருந்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் விலகியுள்ளார். மத்திய புலனாய்வு அமைப்பான சி.பி.ஐ.யின் இயக்குநராக இருந்த அலோக் வர்மா, சிறப்பு இயக்குநராக இருந்த ராகேஷ் அஸ்தனா ஆகியோரிடையே நிலவிய அதிகார மோதல் காரணமாக,...

தைப்பூசத் திருவிழாவையொட்டி, அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் கோலாகலம்

தைப்பூசத் திருவிழாவையொட்டி, அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர். வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. தை மாதத்தில் வரும் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி...

கர்நாடகாவில் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த எம்.எல்.ஏ.க்களிடையே மோதல், பிளவைத் தடுக்க இன்று அவசரக் கூட்டத்திற்கு சித்தராமையா அழைப்பு

கர்நாடகாவில் சொகுசு ஓட்டலில் தங்கியிருந்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களிடையே ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, இன்று எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறும் என முன்னாள் முதலமைச்சர் சித்தராமையா அறிவித்துள்ளார். கர்நாடகாவில் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதாதளம்- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கவிழ்க்க பாரதிய ஜனதா முயற்சிப்பதாக புகார்...

சென்னை : புளியந்தோப்பில் ரவுடி ஓட ஓட விரட்டிப் படுகொலை

சென்னை புளியந்தோப்பில் முன் விரோதம் காரணமாக ரவுடியை மற்றொரு ரவுடி கும்பல் ஓட ஓட வெட்டி படுகொலை செய்த சம்பவத்தில் சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  சென்னை ஓட்டேரி டோபிகானா பகுதியைச் சேர்ந்த ரவுடி குமரன். இந்த நபர்...

தைப்பூசத்தையொட்டி அறுபடை வீடுகளில் பக்தர்கள் குவிந்தனர்

தைப்பூசத் திருவிழாவையொட்டி, வடலூர் வள்ளலார் கோவிலில் 7 திரை நீக்கப்பட்டு ஜோதி தரிசனம் நடைபெற்றது. அறுபடை வீடுகள் உள்ளிட்ட முருகன் கோவில்களில் லட்சக்கணக்கில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.  தை மாதத்தில் வரும் பவுர்ணமியும், பூச நட்சத்திரமும் கூடிய நாளை தைப்பூசத் திருநாளாக தமிழர்கள் கொண்டாடி...

வெளியூர்களில் இருந்து சென்னை வரும் பேருந்து- ரயில்களில் அலைமோதிய கூட்டம்

பொங்கல் விடுமுறைக்கு சென்றவர்கள் மீண்டும் சென்னை திரும்புவதற்கு ரயில் மற்றும் பேருந்துகளில் இடம் பிடிப்பதற்கு வெகுநேரம் காத்திருந்தனர். பொங்கல் பண்டிகை முன்னிட்டு சென்னையில் இருந்து சொந்த ஊருக்குச் சென்றவர்கள் நேற்று மீண்டும் சென்னை திரும்பினர். சென்னையில் பணியாற்றும் நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான...