​​
Polimer News
Polimer News Tamil.

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்குகளும் நாளை முதல் இயங்கும் - திரையரங்க உரிமையாளர் சங்கம்

தமிழ்நாடு முழுவதும் வெள்ளிக்கிழமை முதல் தியேட்டர்கள் இயங்கும் என திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.  8 சதவீத கேளிக்கை வரி, பராமரிப்பு கட்டணம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 16ஆம்...

மருத்துவமனைகளின் பதிவை கட்டாயமாக்கும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றம்

தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா சட்டப்பேரவையில் நிறைவேறியது.அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளை முறைப்படுத்தும் மசோதா சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தப்பட்டு, இன்று நிறைவேற்றப்பட்டது. புதிய சட்டத்தின்படி மருத்துவமனைகள் அனைத்தும் கட்டாயம் பதிவு செய்துகொள்ள வேண்டும். சிறு மருத்துவமனையில் இருந்து பல்நோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை வரை,...

சென்னையில் டிஜிபி அலுவலகம் முன் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட போலீசார் இருவர் கைது

சென்னை டிஜிபி அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற ஆயுதப்படைக் காவலர்கள் இருவர் மீதும் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து மெரீனா போலீசார் கைது செய்துள்ளனர். தேனி மாவட்டம் உத்தமபுரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ்,  சின்ன ஓவுலாபுரத்தை சேர்ந்த ரகு ஆகிய இருவரும்...

புதுச்சேரியில் பா.ஜ.கவினர் மூன்று பேர் எம்.எல்.ஏக்களாக நியமிக்கப்பட்டது செல்லும் - உயர்நீதிமன்றம்

புதுச்சேரியில் 3பேரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகத் துணைநிலை ஆளுநர் நியமித்தது செல்லும் எனச் சென்னை  உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  புதுச்சேரி மாநில பாஜக தலைவர் சாமிநாதன், செல்வக்கணபதி, சங்கர் ஆகியோரைச் சட்டமன்ற உறுப்பினர்களாகக் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஆளுநர் கிரண்பேடி நியமித்தார். மூவரின் நியமனம்...

ஓட்டுநர் உரிமம் இல்லாதவரை, சிறாரை வாகனத்தை ஓட்ட விடும் பெற்றோர், வாகன உரிமையாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை காவல்துறை

சிறார்களை மோட்டார் வாகனம் ஓட்ட அனுமதிக்கும் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.  காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், மோட்டார் வாகனச் சட்டப்படி ஓட்டுநர் உரிமம் இல்லாதவரும், 18 வயது நிறைவடையாத சிறாரும் பொது இடத்தில் வாகனத்தை ஓட்டக்...

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற பகுதியில் சி.சி.டி.வி கேமராக்களின் இயக்கம் நிறுத்தி வைக்கப்பட்டது - பிரதாப் ரெட்டி

ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக சிசிடிவி பதிவு ஏதும் தங்களிடம் இல்லை என்று அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில், பெருங்குடல் புற்றுநோய் தொடர்பான மருத்துவ கருத்தரங்கில் அப்போலோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டி பங்கேற்றார். அப்போது...

தனியார் விடுதி மேலாளரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட வழக்கறிஞர்

சென்னையை அடுத்த கேளம்பாக்கம் அருகே உணவகத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய வழக்கறிஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திருநெல்வேலியைச் சேர்ந்த மாதவன், சென்னை அண்ணா நகரில் தங்கி வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று கேளம்பாக்கத்திற்குச் சென்ற மாதவன், படூரில் உள்ள பி.பி. உணவகத்திற்கு சாப்பிடச் சென்றுள்ளார். சைவ...

இந்து சமயநிலையத்துறை கோவில்களுக்குள் இருக்கும் கடைகளில் வணிக நோக்கில் இயங்கும் கடைகளை அகற்ற உத்தரவு

தமிழகத்தில் உள்ள அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள 36,000 கோயில்களில் உள்ள வணிக நோக்கிலான கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. பழனி அடிவாரத்தில் திருகோவிலுக்கு சொந்தமான மங்கம்மாள் சத்திரத்தில் உள்ள கடைகளை காலி செய்யுமாறு, இணை...

14 வங்கிகளில் 824 கோடி ரூபாய் மோசடியாக கடன் பெற்ற கனிஷ்க் உரிமையாளர் பூபேஷ்குமாரிடம் சிபிஐ விசாரணை

சென்னையில் எஸ்.பி.ஐ உள்ளிட்ட 14 வங்கிகளில் 824 கோடி ரூபாய் மோசடியாக கடன் பெற்ற விவகாரத்தில் கனிஷ்க் தங்க நகை நிறுவன உரிமையாளர் பூபேஷ்குமாரிடம் சி.பி.ஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். கனிஷ்க் நிறுவனம், இருப்பு மற்றும் விற்பனை கணக்குகளை மோசடியாக தயாரித்து, வங்கிகளில்...

மதுரை ஆதீனத்துக்குச் செல்ல தடையை எதிர்த்து நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மதுரை ஆதீன மடத்துக்கும், மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கும் செல்வதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெகதலப் பிரதாபன் என்பவர் தொடுத்த வழக்கில் மதுரை ஆதீன...