​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
முக்கிய கோயில்களின் வளாகத்தில் கடை நடத்துவோருக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாக இந்து அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

முக்கிய கோயில்களின் வளாகத்தில் கடை நடத்துவோருக்கு மாற்று இடம் ஒதுக்குவது தொடர்பாக இந்து அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

தமிழகத்தில் உள்ள முக்கிய கோயில்களின் வளாகத்தில் கடை நடத்துவோருக்கு மாற்று இடம் ஒதுக்குவது  தொடர்பாக மார்ச் 16ஆம் தேதிக்குள், இந்து சமய அறநிலையத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் தீவிபத்து ஏற்பட்டதை அடுத்து தமிழகத்தின் முக்கிய கோயில்களில் உள்ள...

செயிண்ட் ஜோசப் முதியோர் இல்லத்தின் கிளைக்கு சீல்

வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த திருவலத்தில் செயல்பட்டு வந்த செயிண்ட் ஜோசப் முதியோர் இல்லத்தின் கிளை  மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் சீல் வைக்கப்பட்டது.  காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் முதியோர் இல்லம் அனுமதியின்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதற்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு...

கோவை கோனியம்மன் கோவில் திருத்தேர் பவனியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்

கோவை கோனியம்மன் கோவில் திருத்தேர்பவனி ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடை சூழ விமரிசையாக நடைபெற்றது. கோவையின் காவல்தெய்வம் என போற்றப்படும்  கோனியம்மன் கோவிலில் மாசி மாத திருவிழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வாக அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் கோனியம்மன் எழுந்தருளி...

ரூ.3 மட்டும் வைத்துக் கொண்டு கால் டாக்சி பயணம் செய்த நபருக்கு தர்ம அடி

3 ரூபாய் மட்டும் வைத்துக் கொண்டு கோவையில் இருந்து கால்டாக்சியில் திருச்சூர் சென்ற நபர் பணம் தர மறுத்ததால், காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார். திருச்சியை சேர்ந்த முஸ்தபா என்ற நபர் கோவை சிங்கநல்லூர் பேருந்து நிலையம் சென்றுள்ளார். கையில் வெறும் மூன்று ரூபாயை மட்டும்...

தம்பி கடையில் தேங்காய் திருடி அண்ணன் கடையில் விற்ற நபருக்கு தர்ம அடி கொடுத்த மக்கள்

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே தம்பி கடையில் தேங்காய் மூட்டையை திருடி அதை அருகில் இருக்கும் அண்ணன் கடையில் விற்ற நபரை, சிசிடிவி காட்சிகள் உதவியுடன் பிடித்து பொதுமக்கள் தர்ம அடி கொடுத்தனர்.  பேய்க்குளம் மெயின் பஜாரில் சகோதரர்களான சுந்தர்ராஜ், ஸ்ரீதர் ஆகிய...

கூட்ட நெரிசலில் படியில் பயணித்த மாணவர் விழுந்து காயம் - கூடுதல் அரசு பேருந்துகளை இயக்க கல்லூரி மாணவர்கள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் கூட்ட நெரிசலால் அரசு பேருந்தின் படியில் பயணித்த கல்லூரி மாணவர் தவறி விழுந்ததை அடுத்து, கூடுதலாக அரசு பேருந்துகளை இயக்கக்கோரி மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். திருத்தணி பேருந்து நிலையத்தில் இருந்து அங்குள்ள அரசு கலைக்கல்லூரி வழியாக குறைவான...

தாய், மகள் மர்மநபர்களால் தாக்குதலுக்குள்ளான சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் - அமைச்சர் C.V. சண்முகம்

விழுப்புரம் மாவட்டம் திருக்கோயிலூர் அருகே தாய், மகள் மீதான கொலை வெறித் தாக்குதல் சம்பவத்தில் குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவர் என்று சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். வெள்ளம்புத்தூரைச் சேர்ந்த ஆராயி என்பவரது வீட்டுக்குள் புதன் கிழமை நள்ளிரவில் புகுந்த மர்மக்கும்பல், அவரது...

சேலம் மணிப்பால் மருத்துவமனையில் சுகாதாரத்துறை அதிகாரிகள் நேரில் ஆய்வு.

இளைஞரின் ஏழ்மையைப் பயன்படுத்தி அவரது இரண்டு கிட்னி, இரண்டு கண்கள் இதயம் உள்ளிட்ட உறுப்புகளை பேரம் பேசி வாங்கியதாக சேலம் மணிபால் மருத்துவமனை மீது புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அந்த மருத்துவமனை நிர்வாகிகளிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  சேலம் மாவட்டம்...

அனுமதியின்றி இயங்கி வரும் பாலேஸ்வரம் செயிண்ட் ஜோசப் முதியோர் இல்லத்தின் கிளையில் ஆய்வு

வேலூர் மாவட்டம் திருவலத்தில் அனுமதியின்றி இயங்கி வரும் பாலேஸ்வரம் செயிண்ட் ஜோசப் முதியோர் இல்லத்தின் கிளையில் நீதிபதி முன்னிலையில் ஆய்வு நடத்தப்பட்டது.  காஞ்சிபுரம் மாவட்டம் பாலேஸ்வரம் முதியோர் இல்லம் அனுமதியின்றி இயங்கியது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, அதற்கு சீல் வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில்...

திண்டுக்கல் அருகே கோயில் திருவிழாவை ஒட்டி களைகட்டிய ஜல்லிக்கட்டு

திண்டுக்கல் அருகே பில்லமநாயக்கன்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி உற்சாகமாக நடைபெற்றது. கோயில் திருவிழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில், மதுரை, புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட காளைகள் அழைத்து வரப்பட்டன. 400க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்களும்...