​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியாத்தம் அருகே வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தும் யானைகள்

குடியாத்தம் அருகே வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களில் சேதத்தை ஏற்படுத்தும் யானைகள்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே வனப்பகுதியை ஒட்டிய விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டுயானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்குமாறு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். சைனகுண்டா வனப்பகுதியை ஒட்டிய விளைநிலங்களுக்குள் இரவு புகுந்த 11 யானைகள் கொண்ட கூட்டம், மாஞ்செடிகள் மற்றும் கத்தரிக்காய்...

கஜா புயலில் சாய்ந்த தென்னை மரங்களுக்கு கண்ணீர் அஞ்சலி

கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களுக்கு 30ஆவது நாள் கண்ணீர் அஞ்சலி செலுத்தும் விதமாக பட்டுக்கோட்டையில் விவசாயிகள் பேரணி நடத்தினர். சென்ற மாதம் இதேநாளில் கஜா புயல் கரையைக் கடந்த போது தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட 7 மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. தென்னை...

பெற்ற தாயே குழந்தையை கிணற்றில் வீசிக் கொன்ற கொடூரம்

ஓடும் பேருந்தில் குழந்தை கடத்தப்பட்டதாக நாடகமாடிய பெண், அந்த குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததை கண்டறிந்து போலீசார் கைது செய்துள்ளனர்.  பெரம்பலூர் மாவட்டம் வாலிகண்டாபுரம் அருகேயுள்ள தேவையூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள். இவரது கணவன் பிச்சை பிள்ளை வெளிநாட்டில் வேலை பார்த்து...

தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 4.62 கோடி முறைகேடு

சேலம் மாவட்டம் ஓமலூரை அடுத்த குண்டுக்கல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் 4 கோடியே 62 லட்சம் ரூபாய் கையாடல் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். விவசாயக் கடன், நகைக்கடன் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்ததையடுத்து இங்கு அதிகாரிகள்...

ஓசூர் அருகே சுமார் 100-க்கும் மேற்பட்ட காட்டுயானைகள் சுற்றித்திரிவதால் மக்கள் அச்சம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே மீண்டும் சுமார் 100-க்கும் மேற்பட்ட காட்டுயானைகளின் வருகையால், சானமாவு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பாக 100க்கும் மேற்ப்பட்ட காட்டுயானைகள் தமிழக எல்லையான ஜவளகிரி வனப்பகுதிக்கு இடம்...

வளர்ப்புக் கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய்

தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியில் வளர்ப்பு கால்நடைகளைத் தாக்கும் கோமாரி நோய், வன விலங்குகளுக்கு பரவாத வகையில், வனத்துறையினர் தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். பெரியகுளம், சோத்துப்பாறை, கும்பக்கரை, தேவதானப்பட்டி உள்ளிட்ட மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள பகுதிகளில், காட்டு மாடு, மான்...

காருண்யா பல்கலைக்கழக விடுதியில் மாணவர் தற்கொலை என தகவல் - போலீசார் விசாரணை

கோவையில் காருண்யா பல்கலைக்கழக விடுதியில் வடமாநில மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். கோவையை அடுத்த சிறுவாணி சாலையில் காருண்யா நகரில் இயங்கிவரும் காருண்யா பல்கலைக்கழகத்தில், ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரைச் சேர்ந்த ஆம்பர் பிரகாஷ் கல்கோ என்பவர்...

மார்கழி மாதத்தை முன்னிட்டு திருச்செந்தூர் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றம்

மார்கழி மாதம் தொடங்குவதால், நாளை அதிகாலை 3 மணிக்கே திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் நடை திறக்கப்பட உள்ளது. மார்கழி மாதம் நாளை தொடங்குவதால், முருகப்பெருமானின் அறுபடை வீடுகளின் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் கோவில் நடை திறப்பு மற்றும் பூஜை நேரங்கள்...

திருச்சி விமான நிலையத்தில் 388 கிராம் தங்க நகைகள் பறிமுதல்

மலேசியாவில் இருந்து விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 11 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை திருச்சி விமான நிலைய நுண்ணறிவுப்பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து நேற்றிரவு திருச்சிக்கு வந்த மலிண்டோ விமானத்தின் பயணிகளின் உடைமைகளை நுண்ணறிவுப்பிரிவு...

அரசு பள்ளியில் தகரக்கொட்டகையில் மண் தரையில் அமர்ந்து படிக்கும் பள்ளி மாணவர்களின் அவலம்

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் தகரக் கொட்டகையில், மண் தரையில் அமர்ந்து படிக்கும் அவலத்தை உடனடியாக போக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சத்தியமங்கலம் அடுத்த குஜ்ஜம்பாளையத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் குஜ்ஜம்பாளையம், பண்ணையத்தூர்,...