​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 28 லட்சம் ரூபாய் கூலியை மூட்டையாக கட்டிய வியாபாரிகள்

சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 28 லட்சம் ரூபாய் கூலியை மூட்டையாக கட்டிய வியாபாரிகள்

திருச்சி வெங்காய மண்டியில் சுமைதூக்கும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய 28 லட்சம் ரூபாய் கூலித் தொகையை, வியாபாரிகள் மூட்டையாகக் கட்டி, தொழிலாளர் இணை ஆணையர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். திருச்சி பால் பண்ணை பகுதியில் இயங்கி வரும் வெங்காய சந்தையில் சுமை தூக்கும்...

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இரசாயன கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு செய்ய ஆட்சியர் உத்தரவு

தூத்துக்குடி சிப்காட் பகுதியில் இரசாயன கழிவுகள் கொட்டப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தவும் மண்ணை எடுத்து பரிசோதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரி கூறினார். கடந்த 10ஆம் தேதி சிப்காட் பகுதியில் சாலையோரம் உள்ள கழிவுநீர் ஓடை அருகே சென்ற...

ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் போதிய கட்டடங்கள் இல்லாததால் குழந்தைகள் மரத்தடியில் கல்வி பயிலும் அவல நிலை

நாமக்கல் மாவட்டம் மலையம்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் போதிய கட்டடங்கள் இல்லாததால் குழந்தைகள் மரத்தடியில் கல்வி பயிலும் நிலை உள்ளது. இராசிபுரம் அருகே மலையம்பாளையத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் முந்நூற்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளிக்கு மாணவர்களின் எண்ணிக்கைக்குப்...

பள்ளிப்பேருந்தின் அவசரக்காலக் கதவு வழியே தவறி விழுந்த 4வயதுச் சிறுமி

திருவண்ணாமலை மாவட்டம் மங்கலம் காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளிப் பேருந்தின் அவசரக்காலக் கதவு வழியாக 4வயதுச் சிறுமி தவறி விழுந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கீழ்பெண்ணாத்தூர் அருகே நம்மியேந்தலைச்  சேர்ந்த கதிர்வேல் என்பவரின் 4 வயது மகள் லட்சியாவை மங்கலத்தில் உள்ள காந்தி மெட்ரிக்குலேசன் பள்ளியில்...

அரசு விரைவு பேருந்து உள்ளே கொட்டிய மழைநீர்

திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவு பேருந்தில், மழை நீர் கொட்டியதால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகினர். நேற்றிரவு, திண்டுக்கல்லில் இருந்து சென்னை நோக்கி அரசு விரைவு பேருந்து சென்றுக் கொண்டிருந்த போது கனமழை பெய்துள்ளது. பேருந்தின் மேற்பரப்பில் பல...

வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் 4 வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் லஞ்சப் புகாரில் கைது செய்யப்பட்ட வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் பாபுவின் நான்கு வங்கி லாக்கர்களில் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். பாபு வாகனத் தகுதிச் சான்றிதழ் வழங்க 25 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட வழக்கில்...

செவ்வாய்கிழமை முதல் மலேசிய மணல் விநியோகம் தொடங்க நடவடிக்கை - தூத்துக்குடி ஆட்சியர் சந்தீப் நந்தூரி

மலேசிய மணல் விநியோகம் நாளையிலிருந்தே தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். ஆட்சியர் அலுவலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தரமாகவும் விலை குறைவாகவும் இருப்பதால் மக்கள் மத்தியில் மலேசிய மணலுக்கு நல்ல வரவேற்பு...

பெரியார் சிலைக்கு காலணிகளால் மாலை அணிவித்த சமூகவிரோதிகள்

தஞ்சாவூர் மாவட்டம் காவாரப்பட்டிலும் திருச்சியிலும் பெரியார் சிலையைச் சமூகவிரோதிகள் அவமதித்துள்ளதால் அப்பகுதிகளில் பதற்றம் நிலவுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் காவாரப்பட்டில் உள்ள பெரியார் சிலைக்குச் சில சமூகவிரோதிகள் காலணிகளால் மாலை அணிவித்துள்ளனர். இதை அறிந்த திராவிடர் கழகத்தினர் பெரியார் சிலையை அவமதித்தவர்களைக்...

நாகப் பாம்பை குரைத்தே விரட்டிய தெரு நாய்கள்

காஞ்சிபுரத்தில் நாகப் பாம்பு ஒன்றை தெரு நாய்கள் குரைத்தே விரட்டிய வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட இந்திரா நகர் பகுதியில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள வீடுகளுக்கு அருகே புதர்கள் மண்டி கிடப்பதால் அவ்வப்போது பாம்புகளின் நடமாட்டம்...

வைகை அணையில் இருந்து பாசனத்துக்கும் குடிநீருக்கும் தண்ணீர் திறப்பு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் உள்ள வைகை அணையில் இருந்து பாசனத்துக்காகத் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் 17நாட்களில் 11அடி குறைந்துள்ளது. தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததால் கடந்த மாதம் வைகை அணை முழுக்கொள்ளளவை எட்டியது. இதையடுத்து அணையில் இருந்து மதுரை மாவட்டத்தின் மேலூர்,...