​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு - கமல்ஹாசன் குற்றச்சாட்டு

சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாக, மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், சமூக நல்லிணக்கத்திற்காக எழும் நியாயமான குரல்களுக்கு 144 தடை உத்தரவு, கைது என்றும், அரசியல் நோக்கத்துடன் ...

சட்டப்பேரவை முன்பு மறியலில் ஈடுபட்ட மு.க.ஸ்டாலின் கைது

விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை தடை செய்ய வலியுறுத்தி, தமிழக சட்டப்பேரவை முன்பு சாலை மறியலில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்கள் கைது செய்யப்பட்டனர்.  விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு தடை விதிக்கக் கோரி அமளியில்...

சட்டப்பேரவையில் இருந்து தி.மு.க எம்.எல்.ஏக்கள் காவலர்கள் மூலம் வெளியேற்றம்

சட்டப்பேரவையில் கேள்வி நேரம் முடிந்ததும், விஸ்வ இந்து பரிஷத் ரத யாத்திரையை அனுமதித்ததை கண்டித்து, எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்து பேசினார். இதைத் தொடர்ந்து விளக்கம் அளித்த முதலமைச்சர், ரத யாத்திரையை வைத்து மு.க.ஸ்டாலின் அரசியல்...

ரதயாத்திரை நுழையும் நாளில், பெரியார் சிலை திட்டமிட்டு தகர்ப்பு : மு.க.ஸ்டாலின்

இதனிடையே செங்கோட்டைக்குள் ரதயாத்திரை நுழையும் நாளில், பெரியார் சிலை திட்டமிட்டு தகர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. அரசு உறுதியான நடவடிக்கைகள் மூலம் குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தியுள்ளார். பெரியார் சிலைகளுக்கு ஆட்சியாளர்கள் பாதுகாப்பளிக்கத் தவறினால் தி.மு.க தொண்டர்கள்...

மாவட்ட வாரியாக குழுக்கள் அமைக்கப்பட்டு மரங்கள் வளர்க்க நடவடிக்கை - திண்டுக்கல் சீனிவாசன்

தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக குழுக்கள்  அமைக்கப்பட்டு மரங்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார். ((வெப்பம் அதிகரித்துள்ளதால்)) மரங்களின் அளவு 37 சதவீதத்தில் இருந்து 17 சதவீதமாகக் குறைந்துவிட்டதாக தி.மு.க. உறுப்பினர் சக்கரபாணி தெரிவித்தார்....

சட்டம் ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்தவே ரதயாத்திரையை அரசியல் கட்சிகள் எதிர்க்கின்றன - ஜெயக்குமார் குற்றச்சாட்டு

ரதயாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களின் நோக்கம் சட்டம்-ஒழுங்கு பிரச்சனையை ஏற்படுத்துவதே என அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை பட்டினப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், இந்தியா என்பது மதச்சார்பற்ற நாடு என்றும், எந்த மதத்தினரும் ஊர்வலம் செல்லலாம் என்றும் குறிப்பிட்டார். ஆர்எஸ்எஸ், விஎச்பி போன்ற...

பலத்த பாதுகாப்புடன் விசுவ இந்து பரிஷத் ரதயாத்திரை தமிழகம் வந்தது

விஸ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரை, நெல்லை மாவட்டம் புளியரை வழியாக தமிழகத்திற்குள் நுழைந்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, 144 தடை உத்தரவையும் மீறி செங்கோட்டையில் மறியலில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டதால் பதற்றம் நீடிக்கிறது. தமிழகத்தில் கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இந்த யாத்திரை...

புதுக்கோட்டை ஆலங்குடி அருகே பெரியார் சிலை உடைப்பு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பெரியாரின் சிலையை சேதப்படுத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். ஆலங்குடி அருகே புதுக்கோட்டை விடுதி என்ற கிராமத்தில் பெரியார் படிப்பகம் செயல்பட்டு வருகிறது. அதன் அருகிலேயே தந்தை பெரியாரின் திருவுருவச் சிலை வைக்கப்பட்டுள்ளது. நேற்று நள்ளிரவு...

மறைந்த நடராஜனின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், வீரமணி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் அஞ்சலி

மறைந்த நடராஜனின் உடலுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நேரில் அஞ்சலி செலுத்தினார். சென்னை பெசன்ட் நகரில் உள்ள ம.நடராஜன் இல்லத்துக்கு வந்த திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், நடராஜன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், தமிழ் மீதும்...

கல்லூரி மாணவராக இருந்தபோது இந்தி எதிர்ப்பு போராட்டம்..! நடராஜனின் வாழ்க்கை வரலாறு

தமிழில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த ம.நடராஜன், கல்லூரி மாணவராக இருந்தபோது இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் பங்கேற்றவர் ஆவார். தஞ்சை மாவட்டம் விளார் கிராமத்தில் 1943ஆம் ஆண்டு பிறந்தவர் நடராஜன். மாணவர் பருவத்திலேயே தமிழ்மீது மிகுந்த ஆர்வம் கொண்ட அவர், இந்தியை எதிர்த்து போராட்டத்தில்...