​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குரங்கணி பகுதியில் ஆய்வைத் தொடங்கும் விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா

குரங்கணி பகுதியில் ஆய்வைத் தொடங்கும் விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா

தேனி மாவட்டம் குரங்கணி பகுதியில் நிகழ்ந்த தீ விபத்து குறித்து ஆதாரங்கள் இருந்தால் பொதுமக்கள் வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வழங்கலாம் என விசாரணை அதிகாரி அதுல்ய மிஸ்ரா தெரிவித்தார். குரங்கணி பகுதியில் கடந்த 11ஆம் தேதி நிகழ்ந்த காட்டுத்தீயில் சிக்கி 17 பேர்...

தமிழகத்தில் அரசியல் மாற்றம் கொண்டு வரவேண்டும் -ரஜினி

இமய மலையில் இருந்து ஆன்மீகப் பயணத்தை முடித்து சென்னை திரும்பிய நடிகர் ரஜினிகாந்த் தென் சென்னை மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் தேர்வில் ஈடுபட்டு வருகிறார், நேற்று ராகவேந்திரா திருமண மண்டபத்தில் திரண்ட தமது ஆதரவாளர்கள் மத்தியில் வீடியோ கான்பிரன்சிங்...

2ஜி தீர்ப்பின் மூலம் தி.மு.க. மீதான வீண்பழி துடைப்பு - மு.க.ஸ்டாலின்

திராவிட இயக்கத்தை வீழ்த்துவதற்காக பின்னப்பட்ட சதிவலைகளை முறியடித்து 2ஜி வழக்கில் ஆ.ராசா வெற்றி பெற்றிருப்பதாக திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.  சென்னை அண்ணா அறிவாலயத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா எழுதிய "2ஜி அவிழும் உண்மைகள்" என்ற நூல்வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில்...

சசிகலா பிரமாணப் பத்திரத் தகவல்கள் என வெளிவந்த தகவல்கள் தவறானவை - ஆறுமுகசாமி ஆணையம் தகவல்

ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலாவின் பிரமாணப் பத்திரத்தில் குறிப்பிட்டதாக வெளிவந்தவற்றில் பெரும்பாலான தகவல்கள் தவறானவை என நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் தெரிவித்துள்ளது. ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலா தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தில் இடம்பெற்றதாகக் கூறி ஆங்கில நாளிதழில்...

திருச்சி திருவெறும்பூர் இளம்பெண் உஷா உயிரிழந்த விவகாரதில் குற்றவியல் விசாரணைக்கு உத்தரவு: முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திருச்சி திருவெறும்பூர் வாகன சோதனையின்போது தவறி விழுந்து உயிர் இழந்த உஷா விவகாரத்தில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் காமராஜ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு, குற்றவியல் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, திமுக எம்எல்ஏ மகேஷ் பொய்யாமொழியும், காங்கிரஸ்...

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தன்னை வாழ்த்தி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் - ஸ்டாலின்

சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் தன்னை வாழ்த்தி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம் என எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். வழக்கமாக சட்டப்பேரவையில் பேசும் உறுப்பினர்கள், அவர் தாங்கள் சார்ந்த கட்சியின் தலைவர்கள் புகழ்ந்து பேசுகின்றனர். இதனால், உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் நேரம் வீணாவதாக...

பெருநகர் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட புறநகர் பகுதிகளில், புதைவட கம்பிகள் மூலம், முழு அளவில் மின்சாரம் விநியோகிக்க நடவடிக்கை - தங்கமணி

சென்னை பெருநகர் மற்றும் விரிவாக்கம் செய்யப்பட்ட புறநகர் பகுதிகளில், புதைவட கம்பிகள் மூலம், முழு அளவில் மின்சார விநியோகத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அமைச்சர் தங்கமணி உறுதியளித்திருக்கிறார். சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது, திமுக எம்எல்ஏ அரவிந்த் ரமேஷ் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின்...

ஆந்திரப்பிரச்னைக்குக் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முடியாது - தம்பிதுரை

ஆந்திரப்பிரச்னைக்குக் கொண்டுவரும் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவளிக்க முடியாது என மக்களவை துணை சபாநாயகரும், அ.தி.மு.க எம்.பியுமான தம்பிதுரை தெரிவித்துள்ளார். காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி மார்ச் 5ல் இருந்து தொடர்ந்து மக்களவையில் அதிமுக எம்.பி.க்கள் போராட்டம் நடத்தி வருவதாக தம்பிதுரை...

ஜெயலலிதாவின் கைரேகை தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை

ஜெயலலிதா கைரேகை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவிற்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  2016ஆம் ஆண்டு திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட ஏ.கே.போஸ் வேட்பு மனுவில் சின்ன ஒதுக்கீட்டு மனுவில் ஜெயலலிதாவின் கைரேகை போலியாக பெறப்பட்டதால் போசின்...

மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் ராமராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படுவதாக வைகோ குற்றச்சாட்டு

தமிழகத்தில் மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையில் ராமராஜ்ய ரத யாத்திரை நடத்தப்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் மதிமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ கலந்துகொண்டார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் நிலவும்...