​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலோர மாவட்டங்களில் தொடங்கியது மீன்பிடித் தடைக்காலம் - 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

கடலோர மாவட்டங்களில் தொடங்கியது மீன்பிடித் தடைக்காலம் - 61 நாட்கள் மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை

தமிழகத்தில் மீன்பிடி தடைக்காலம் நள்ளிரவு முதல் அமலுக்கு வந்துள்ளது.  தமிழக கடல் பகுதிகளில் ஏப்ரல் 15 முதல் மே 29 ஆம் தேதி வரையிலான 45 நாட்கள் மீன்கள் இனப்பெருக்க காலமாக அறியப்படுகிறது. கடந்த ஆண்டு முதல் மீன்பிடி தடைக்காலமானது, 45 நாட்களில்...

பெண் புரோக்கரான கல்லூரி பேராசிரியை..! பின்னணியில் இருப்பது யார் ?

விருதுநகர் மாவட்டம் அருகே அருப்புக்கோட்டையில் உள்ள தேவாங்கர் கலைக்கல்லூரி பேராசிரியை ஒருவர், கல்லூரியில் படிக்கும் 4 மாணவிகளை, மதுரை காமராஜர் பல்கலைக்கழக உயர் அதிகாரிகளுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள அழைத்த ஆடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் தேவாங்கர்...

கோவையில் பார்வையற்றோரையும் தன்னார்வலர்களையும் இணைக்கும் புதிய மொபைல் ஆப் YESABLE அறிமுகம்

கோவையில் பார்வையற்றவர்கள் தேர்வு எழுத வசதியாக பார்வையற்றோர் மற்றும் தன்னார்வலர்களை இணைக்கும் வகையில் புதிய மொபைல் அப்ளிகேஷன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சீர் செய் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் YESABLE என்ற இந்த புதிய மொபைல் ஆப்பை அறிமுகம் செய்துள்ளது. பார்வையற்ற மாற்றுத்...

உயர்கல்வி பயில்வதில் தமிழகம் முதலிடம் - கே.பி. அன்பழகன்

நாட்டிலேயே தமிழகத்தில்தான் 46.9 சதவிகித மாணவர்கள் உயர்கல்வி பயிலச் செல்வதாக தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் தெரிவித்துள்ளார். பள்ளிக் கல்வித்துறை சார்பில் தருமபுரி மாவட்டத்தில் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட அரூர் கல்வி மாவட்ட துவக்க விழா, அரூரில் சனிக்கிழமையன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற...

கோடையில் கொட்டிய கனமழை..! ஸ்டெர்லைட் காரணமா..?

தூத்துக்குடி மாவட்டத்தில் தகிக்கும் வெப்பத்தை தணிக்கும் வகையில், இரவு நேரத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாமிரபரணி ஆறு பாயும்... தூத்துக்குடி மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகள் கடந்த சில ஆண்டுகளாக பருவ மழை பொய்த்து போனது..! தாமிரபரணிக்குள் கடல்...

போலீஸ் மீது தாக்குதல் நடத்தியது தவறு - சீமான்

ஐ.பி.எல் போட்டிக்கு எதிரான போராட்டத்தின் போது காவலர்களும், ரசிகர்களும் தாக்கப்பட்டது எதிர்வினை என்று பாரதிராஜா கருத்து தெரிவித்திருந்த நிலையில் போராட்டக்காரரால் காவலர் தாக்கப்பட்டது தவறு என்று சீமான் கருத்து தெரிவித்துள்ளார். ஐ.பி.எல் போட்டியை தடுத்து நிறுத்துவதற்காக தமிழர் கலை இலக்கிய பண்பாட்டு பேரவை...

சென்னை அருகே நடைபெற்ற கண்காட்சியில் முப்படையினர் சாகசம், கடைசி நாளில் மட்டும் மூன்று லட்சம் பேர் பார்வையிட்டனர்

சென்னையை அடுத்த திருவிடந்தையில் நடைபெற்ற பாதுகாப்பு துறை கண்காட்சியை இரண்டரை லட்சத்திற்கும் அதிகமானோர் பார்வையிட்டுள்ளனர். கண்காட்சியை ஒட்டி நடைபெற்ற முப்படையினரின் சாகச நிகழ்ச்சி பார்வையாளர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. சென்னையில் இருந்து 40 கிலோ மீட்டர் தொலைவில்  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள  திருவிடந்தையில்...

வெளிமாநிலங்களில் பயிலும் மாணவர்கள் தற்கொலை தடுப்பு நடவடிக்கை குறித்து எட்வின் ஜோ விளக்கம்

வெளிமாநிலங்களில் பயிலும் தமிழக  மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாக  மருத்துவக் கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தெரிவித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் ஆற்றூரில் மரியா ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களுடன் பேசிய அவர், ...

ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை - தூத்துக்குடி ஆட்சியர் எச்சரிக்கை

ஸ்டெர்லைட் விவகாரத்தில், மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும்வகையில் செயல்படுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் வெங்கடேசன் எச்சரித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ஸ்டெர்லைட் தாமிர உருக்காலையின் முதல் அலகை தொடர்ந்து நடத்த அனுமதி கோரிய  விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்து

தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள், தமிழிலேயே புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ள வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகிறது. தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன. இந்நிலையில்,சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஒவ்வொருவரும் தமிழ்ப்புத்தாண்டு தெரிவிக்கும் வீடியோ, டுவிட்டரில்...