​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம், ஆளுநர் மாளிகைக்கு கடிதம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும் ஆறுமுகசாமி ஆணையம், ஆளுநர் மாளிகைக்கு கடிதம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பாக ஆளுநருக்கோ, முன்னாள் தலைமை செயலாளருக்கோ அறிக்கை அனுப்பப்பட்டதா என்று கேட்டு ஆறுமுகசாமி ஆணையம் கடிதம் அனுப்பிருக்கிறது.  ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது எத்தனை மருத்துவ குறிப்புகள் வந்தன என்று கேட்டு ஆளுநர் மாளிகைக்கு ஆறுமுகசாமி...

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

கட்டாய ஹெல்மெட் சட்டத்தை தமிழக அரசு முறையாக நடைமுறைப்படுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, இருசக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டுமென விதிகள் இருந்தும், அதை அரசு முறையாக அமல்படுத்தவில்லை என்றும், அதை...

வங்க கடலில் 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதால் வட தமிழகத்தில் சில இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கிழக்கு மத்திய வங்கக் கடலில்...

வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு TN Smart அமைப்பு : அமைச்சர் RB உதயகுமார்

சென்னையில் வெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, TN Smart என்ற தொழில்நுட்பம் புதிதாக உருவாக்கப்பட்டுள்ளதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். சென்னை எழிலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தேசிய கடலோர ஆராய்ச்சி மையம், சென்னை, மும்பை வானிலை ஆராய்ச்சி மையம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தின்...

மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகள் மீது குண்டர் சட்டம் - சுற்றறிக்கை வெளியிட தமிழக அரசுக்கு உத்தரவு

மணல் கொள்ளைக்கு உடந்தையாக இருக்கும் அரசு அதிகாரிகளை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கும் வகையில், 2 வாரத்தில் சுற்றறிக்கை வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக ஆறுகளில் மணல் கொள்ளையை தடுக்கக் கோரி தொடர்ந்த வழக்கு,...

ஸ்டெர்லைட் தில்லு முல்லு..! இது காசுக்கு சேர்த்த கூட்டம்

தூத்துக்குடியில் மூடப்பட்ட ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க வலியுறுத்தி, தாமிரபரணி பாசன விவசாயிகள் சங்கம் என்ற பெயரில், ஸ்டெர்லைட் ஒப்பந்ததாரர் ஒருவர், கூலிக்கு ஆட்களை அழைத்துக்கொண்டு, கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கச் சென்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ஸ்டெர்லைட்டை...

சென்னை மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் பலத்த மழை

சென்னையில் இன்று அதிகாலை பலத்த மழை பெய்த நிலையில், தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வளிமண்டலத்தில் ஏற்பட்ட காற்று சுழற்சி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று...

தமிழ்நாடு அரசு சார்பில் யாழ்ப்பாணம் நூலகத்திற்கு 1 லட்சம் புத்தகங்கள்

இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் நூலகத்திற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில், ஒரு லட்சம் புத்தகங்களை, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் வழங்கினார்.  இலங்கை கண்டியில், எம்ஜிஆர் இரண்டாம் நூற்றாண்டு ஆரம்ப விழாவில் 16ஆம் தேதி பங்கேற்ற அமைச்சர் செங்கோட்டையன், தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். உலக...

தமிழ்நாட்டில் 2019-2020 கல்வியாண்டில், புதிததாக மருத்துவ பட்ட மேற்படிப்புகளைத் தொடங்க அனுமதி

தருமபுரி, தேனி, சென்னை உள்ளிட்ட இடங்களில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், 22 இடங்களை கொண்ட பல்வேறு மருத்துவ மேற்படிப்புகளை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வருகிற 2019-2020ஆம் கல்வியாண்டு முதல், மருத்துவ பட்ட மேற்படிப்புகளைத் தொடங்க, இந்திய மருத்துவக் கவுன்சிலின் பட்டமேற்படிப்பு மருத்துவ...

தல போல சுற்றியதால் தலையில் வெட்டிய கொடூரம்..! சினிமா ரசிகரின் பரிதாப முடிவு

சினிமாவில் வருவது போல நிஜவாழ்க்கையில் ரவுடியாக சுற்றித்திரிந்த ஒருவர் தலை வெட்டி கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நிழலை நிஜத்தோடு ஒப்பிட்டு ரவுடியாக சுற்றி திரிந்தவருக்கு  நேர்ந்த பரிதாப முடிவு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி... சினிமாவை பார்த்து நிஜத்தில் ரவுடியானவர்...