​​
Polimer News
Polimer News Tamil.

ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டாரா கங்கனா? - போலீசார் சம்மன்

நடிகர் ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்ற புகாரில் நடிகை கங்கனா ரனாவத்துக்கு, தானே குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். முக்கிய பிரமுகர்களின் செல்போன் அழைப்பு விவரங்களை தனியார் துப்பறிவாளர்கள் மூலம் முறைகேடாகப் பெற்ற வழக்கில், கைது...

ரூ 1000 கோடி செலவில் மகாபாரதத்தை திரைப்படமாக்க அமீர்கான் திட்டம்

நடிகர் அமீர்கான், மகாபாரதத்தை ஆயிரம் கோடி ரூபாய் செலவில் திரைப்படமாக எடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்திரைப்படத்தை தொழிலதிபர் முகேஷ் அம்பானி இணை தயாரிப்பாளராக தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹாலிவுட்டில் எடுக்கப்பட்ட லார்ட் ஆப் தி ரிங்ஸ் போன்ற பிரம்மாண்டமான படமாக இதனை...

ஹிருத்திக் ரோசனின் செல்போன் அழைப்பு விவரங்களை கேட்டாரா கங்கனா?

பாலிவுட் முன்னணி நடிகை கங்கனா ரனாவத், நடிகர் ஹிருத்திக் ரோஷனின் செல்போன் அழைப்பு விவரங்களை முறைகேடாகப் பெற முயன்றதாக புகார் எழுந்துள்ளது. செல்போன் அழைப்பு விவரங்களை துப்பறிவாளர்கள் பெற்று அவற்றை வழக்கறிஞர்களுக்கு விற்ற வழக்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது. இந்த வழக்கில், வழக்கறிஞர் ரிஸ்வான்...

வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் விஜய் படத்திற்கு மட்டும் சிறப்பு அனுமதி ஏன்? - தயாரிப்பாளர் கேள்வி

வேலை நிறுத்தம் நடைபெற்று வரும் நிலையில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் விஜய் நடிக்கும் படத்தின் படப்பிடிப்புக்கு மட்டும் தயாரிப்பாளர் சங்கம் அனுமதி கொடுத்துள்ளதற்கு தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.சதீஷ்குமார் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். க்யூப் நிறுவனத்திற்கு எதிராக போராடி வரும் தயாரிப்பாளர் சங்கம் கடந்த 16ந்...

சினிமாத்துறை பிரச்சனைகளை பேசித் தீர்க்க வேண்டும் - நடிகர் ரித்திஷ்

சினிமாத்துறையில் உள்ள பிரச்சனைகளை பேசித் தீர்க்காமல், போராட்டம் நடத்துவது, திரையரங்குகளில் திரைப்படங்களை ஓடவிடாமல் செய்வது உள்ளிட்டவை, விஷாலில் திறமையின்மையை காட்டுவதாக நடிகரும், முன்னாள் எம்.பியுமான ரித்திஷ் குற்றம் சாட்டியுள்ளார்....

நடிகை பூஜா தத்வால் வறுமையிலும் நோயிலும் வாடும் நிலையில் சல்மானிடம் உதவி கோரிக்கை

நடிகர் சல்மான்கானுடன் வீர்கதி (Veergati) படத்தில் நடித்த நடிகை பூஜா தத்வால் (Pooja Dadwal) வறுமையில் வாடும் நிலையில் சல்மான்கானின் பொருளுதவியைக் கோரியுள்ளார். 1995-ஆம் ஆண்டு வெளியான வீர்கதி படத்தில் சல்மான்கானுடன் நடித்தவர் பூஜா தத்வால். இவர் காசநோயால் பாதிக்கப்பட்டு மும்பை டி.பி....

தயாரிப்பாளர், திரையரங்குகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர கமல், விஷால் முயற்சி

திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்குகள் வேலை நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத் தலைவர் விஷால் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கடந்த 3 வாரகாலமாக புதிய படங்கள் வெளியாகாத நிலையில் மார்ச் 15 முதல் சென்னை தவிர...

திராவிட நாடு தொடர்பான கேள்விக்கு பதில் அளிக்க ரஜினிகாந்த் மறுப்பு

திராவிட நாடு தொடர்பான கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் பதில் அளிக்க மறுத்து விட்டார். இமயமலைக்கு ஆன்மிக சுற்றுலாப்பயணம் சென்றுள்ள அவர் இன்று உத்தராகண்ட் மாநிலம் அல்மோராவிற்கு சென்றார். அங்கு பாபாஜி குகைக் கோயிலில் வழிபாடு நடத்திய ரஜினிகாந்த், செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது...

நடிகை ரகுல் ப்ரீத்சிங் - நடிகர் மோகன்பாபு குடும்பத்தினர் திருப்பதி கோயிலில் வழிபாடு

யுகாதி திருநாளையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகை ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட திரை நட்சத்திரங்கள் சுவாமி தரிசனம் செய்தனர். நடிகர் ரஜினிகாந்தின் நண்பரும், தெலுங்கு திரையுலகின் கலெக்ஷன் கிங் என அழைக்கப்படுபவருமான மோகன்பாபு, இன்று காலை திருமலையில் வழிபாடு நடத்தினார். அவரது...

'சிப்' வைத்து சீப்பான அரசியலை செய்கிறார்கள்: டி.ராஜேந்தர்

மின்னணு எந்திர வாக்குப்பதிவு என்பது ஒரு தந்திர வாக்குப்பதிவு என லட்சிய திராவிட முன்னேற்றக்கழக தலைவரும் இயக்குனருமான டி.ராஜேந்தர் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், வாக்குப்பதிவு இயந்திரத்தில் சிப்பை வைத்து சீப்பான அரசியலை செய்கிறார்கள் என்றார்....