​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசியதாக கூறப்படும் புகாரில் ஹெச்.ராஜாவுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சம்மன்

உயர்நீதிமன்றத்தை இழிவாக பேசியதாக கூறப்படும் புகாரில் ஹெச்.ராஜாவுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சம்மன்

உயர்நீதிமன்றம் குறித்து அவதூறான கருத்து தெரிவித்தது தொடர்பான வழக்கில் வரும் 3 ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என ஹெச்.ராஜாவுக்கு தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் உத்தரவிட்டுள்ளார். நீதிமன்றத்துக்கு எதிரான தவறான கருத்துகளை தெரிவித்த ஹெச்.ராஜா மீது கிரிமினல்...

Rafale குறித்த AK அந்தோணியின் குற்றச்சாட்டுகளுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பேசப்பட்டதைவிட மலிவு என்றால், ஏன் 126 ரஃபேல் விமானங்களை வாங்கவில்லை என மத்திய அரசுக்கு ஏ.கே.அந்தோணி கேள்வி எழுப்பியுள்ளார். தங்களது ஒப்பந்தம் சிறந்தது என நம்பும் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் அது நிறைவேறாதது ஏன் என நிர்மலா...

நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு வரும் 22ந் தேதி முதல் ஸ்டெர்லைட்டில் ஆய்வு

நீதிபதி தருண் அகர்வால் தலைமையிலான குழு ஸ்டெர்லைட் ஆலையில் செப்டம்பர் 22 முதல் 3 நாட்கள் ஆய்வு செய்யும் எனத் தேசியப் பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையைத் தமிழக அரசு மூடி சீல் வைத்துள்ளது. இதை எதிர்த்து வேதாந்தா நிறுவனம்...

வேலூர் வாணியம்பாடியில் அமைச்சர் செல்லூர் ராஜூவை முற்றுகையிட்ட பொதுமக்கள்

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே புதிய ரயில்வே மேம்பாலப் பணிகளை விரைவாக தொடங்கக் கோரி அமைச்சர் செல்லூர் ராஜூவின் காரை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். ரெட்டித்தோப்புப் பகுதியையும் ஆம்பூரையும் இணைக்கும் பாதையில் ரயில்வே தண்டவாளம் குறுக்கிடுகிறது. தண்டவாளம் அமைக்கப்பட்டபோது பாதையின் குறுக்கே கட்டப்பட்ட குறுகிய...

தமிழகம், புதுச்சேரியில் இன்றும் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்றும் இடி மின்னலுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கு வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ளதன் காரணமாகவும்,தெற்கு...

டெல்லியில் மத்திய நிலக்கரித்துறை அமைச்சர் பியூஸ் கோயலுடன் தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சந்திப்பு

டெல்லியில் மத்திய எரிசக்தித்துறை அமைச்சர் பியூஸ் கோயலை, தமிழக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி சந்தித்து, தமிழகத்திற்கு தேவையான அளவு நிலக்கரி வழங்குமாறு மனு அளித்தார். தமிழகத்தில் மின்சார உற்பத்திக்கு தேவையான நிலக்கரி கிடைப்பதை உறுதி செய்யுமாறு, பிரதமர் மோடிக்கு கடந்த வாரத்தில் முதலமைச்சர்...

தமிழக அரசு ஊழியர்களுக்கு 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

தமிழக அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தி வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.  முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி 2 சதவீதம் உயர்த்தப்படுவதாக கூறியுள்ளார். கடந்த...

கடலோர காவல்படையின் தென்மண்டல கமாண்டர் நேரில் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிச் செல்லும்போது, அதுகுறித்த தகவலைப் பெறும் தொழில்நுட்பம் உள்ளதா? என்பது குறித்து நேரில் ஆஜராகி பதிலளிக்க, கடலோர காவல் படையின் தென்மண்டல கமாண்டருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு...

சாரிடானை இப்போதைக்கு விற்றுக்கொள்ள உச்சநீதிமன்றம் அனுமதி

சாரிடான் உள்ளிட்ட 3 மருந்துகளை இப்போதைக்கு விற்றுக் கொள்ளலாம் என உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. பான்டர்ம் ( Panderm), குளுக்கோநார்ம்(Gluconorm), லூபிடிக்ளாக்ஸ் (Lupidiclox), டாக்சிம் ஏஇசட் (Toxim AZ), சாரிடான் போன்ற மருந்துகளால் உடல்நலத்திற்கு பாதிப்பு ஏற்படுவதாக கண்டறியப்பட்டது. இதனை தொடர்ந்து சாரிடான் உள்ளிட்ட...

68ஆவது பிறந்த நாளை கொண்டாடும் மோடிக்கு தலைவர்கள் வாழ்த்து

68ஆவது பிறந்த நாளை கொண்டாடும் பிரதமர் மோடிக்கு, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். குடியரசுத் தலைவர், குடியரசு துணைத் தலைவர், மத்திய அமைச்சர்கள், பாஜக தலைவர் அமித்ஷா உள்ளிட்டோர் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். பிரதமர் மோடி எப்போதும் மகிழ்ச்சியுடனும், ஆரோக்கியத்துடனும்...