​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வலுக்கிறது போராட்டம்.. தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை..

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி வலுக்கிறது போராட்டம்.. தூத்துக்குடி தெற்கு, சிப்காட் காவல் நிலைய பகுதிகளில் 144 தடை..

ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக் கோரி தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 40 ஆயிரம் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. போராட்ட அறிவிப்புகளை அடுத்து நகரின் சில பகுதிகளில் 144 தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.  ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பணிகளை நிறுத்த வலியுறுத்தி குமரெட்டியாபுரம் கிராம மக்களின்...

கேரளாவில் நிபா வைரஸ் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்தியக் குழு ஆய்வு

கேரளாவில் நிபா வைரஸ் பரவி வருவதைத் தொடர்ந்து, மத்தியக் குழுவினர் அம்மாநிலத்தின் பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டனர். கேரள மாநிலத்தில் கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மூளைக்காய்ச்சல் அறிகுறிகளோடு சிகிச்சை பலனின்றி 11 உயிரிழந்துள்ளனர். இதில் 3 பேருக்கு நிபா பாதிப்பு இருந்ததை கேரள...

ஐ.பி.எல். இறுதிப் போட்டியில் முதலில் நுழையப் போவது யார்? சென்னை - ஐதராபாத் அணிகள் இன்று பலப்பரீட்சை

ஐ.பி.எல். இறுதிச் சுற்றுக்கு தகுதி பெறுவது யார் என்பதற்கான போட்டியில், சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. கடந்த மாதம் 7ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல். போட்டியில் 56 லீக் ஆட்டங்கள் நடைபெற்றன. புள்ளிகள் அடிப்படையில் ஐதராபாத் மற்றும் சென்னை அணிகள்...

மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங் -மதச்சார்பற்ற ஜனதா தளம் கூட்டணி ஆட்சி... பா.ஜ.க தலைவர் அமித் ஷா குற்றச்சாட்டு

கர்நாடகத்தில் மக்கள் தீர்ப்புக்கு எதிராக காங்கிரசும், மதச்சார்பற்ற ஜனதா தளமும் கைகோர்த்திருப்பதாக அமித்ஷா குற்றம்சாட்டினார். டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவா, மணிப்பூரில் தனிப்பெரும் கட்சியாக இருந்தும் காங்கிரஸ் ஆட்சியமைக்க உரிமை கோரவில்லை என விளக்கமளித்தார். கர்நாடகத்தில் தனிப்பெரும் கட்சி என்ற...

மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு கூடுதல் இடங்கள் தேவை : உயர்நீதிமன்றம்

பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் வாய்ந்த மருத்துவர்களின் தேவை அதிகரித்துள்ளதால், மருத்துவப் பட்டமேற்படிப்புக்காக கூடுதல் மருத்துவக் கல்லூரிகளை தொடங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது மருத்துவ மேற்படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சேர்க்கையிடம் பெற்ற 16 மருத்துவர்கள், மாநில ஒதுக்கீட்டுக்கு நடைபெறும் கலந்தாய்வுக்கான...

24ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம்

தமிழக சட்டப்பேரவையின் அலுவல் ஆய்வுக்குழுக் கூட்டம் வரும் 24ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் 15ஆம் தேதி 2018-19ஆம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மார்ச் 19ஆம் தேதி முதல் மார்ச்...

தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்த பீதி வேண்டாம் - சுகாதாரத்துறை செயலாளர் வேண்டுகோள்

நிபா வைரஸ் குறித்து தமிழகத்தில் பொதுமக்கள் யாரும் பீதியடைய வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், கேரளாவில் 10 பேரைப் பலிகொண்ட நிபா ((Nipah)) வைரஸ்...

கட்டண விவரத்தை வெளிப்படையாக தெரிவித்து அறிவிப்பு பலகைகள் வைக்க வேண்டும் - தனியார் பள்ளிகளுக்கு செங்கோட்டையன் அறிவுறுத்தல்

கட்டண விவரத்தை வெளிப்படையாக தெரிவித்து அறிவுப்பு பலகைகள் வைக்க தனியார் பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்கள் பயில 1.32 லட்சம் விண்ணப்பங்கள் : செங்கோட்டையன் விரைவில் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஒதுக்கீடு : செங்கோட்டையன் தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டண...

கேரளாவில் பரவும் Nipha எனும் உயிர் கொல்லி வைரசால் பீதி - 11 பேர் உயிரிழப்பு

  நிபா எனப்படும் உயிர்க்கொல்லி வைரஸ் தாக்குதலால் கேரளத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். நிபா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்கு மத்திய சுகாதாரத்துறை சார்பில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. உயிர்கொல்லியான நிபா வைரஸ் தாக்கி கேரள மாநிலத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதால், அங்கு பீதி ஏற்பட்டுள்ளது....

கர்நாடக அணைகளின் நிலவரத்தை தெரிந்து கொள்ள நேரில் வரவேண்டும் - ரஜினிக்கு குமாரசாமி அழைப்பு

கர்நாடக அணைகளைப் பார்வையிட வருமாறு நடிகர் ரஜினிகாந்துக்கு அம்மாநில முதலமைச்சராக பதவி ஏற்க உள்ள மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார்.  நேற்றுச் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், கர்நாடகத்தில் புதிதாக முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ள குமாரசாமிக்கு வாழ்த்துத் தெரிவித்தார்....