​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு

தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 10 மக்களவை தொகுதிகள் ஒதுக்கீடு

நாடாளுமன்ற தேர்தலுக்கான திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே கூட்டணியை அறிவிப்பதில் தமிழக அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. பா.ஜ.க., பா.ம.க.வுடன் கூட்டணி அமைத்து தொகுதி பங்கீட்டையும் முடித்துள்ளது அதிமுக. இதே போல திமுகவும்,...

ஓசூரில் கோவில் திருவிழாவில் அனுமதியின்றி எருதுவிடும் நிகழ்ச்சி, தடுத்து நிறுத்திய போலீசார் - பொதுமக்கள் இடையே மோதல்

ஓசூர் அருகே அனுமதியின்றி நடத்தப்பட்ட எருது விடும் விழாவை தடுத்து நிறுத்திய போலீசார் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தப்பட்டதோடு, காவல் துறை வாகனமும் அடித்து நொறுக்கப்பட்டது. ஓசூரை அடுத்த மதகொண்டப்பள்ளி பஸ்கர வெங்கடரமண சுவாமி கோவில் தேர்த் திருவிழா நேற்று நடைபெற்றது. அதனை...

கோடநாடு கொலை, கொள்ளை தொடர்பான வழக்கில் சயான், மனோஜை கைது செய்யக் கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத மனோஜ், சயான் ஆகியோரது ஜாமீனை உதகை நீதிமன்றம் ரத்து செய்தது.  மேலும் இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்தவும் நீதிபதி போலீசாருக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்யக்கோரி, சயான், மனோஜ் இருவரும் உயர் நீதிமன்றத்தில்...

அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குவதில் இழுபறி

அ.தி.மு.க - தே.மு.தி.க கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்குவதில் இழுபறி நிலவி வருகிறது. பா.ஜ.க., பா.ம.க.வுடன் அ.தி.மு.க.வின் தொகுதி உடன்பாடு இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் இன்று பிற்பகலில் தே.மு.தி.கவுடன் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்று கூறப்பட்டது. ஆனால் எத்தனை தொகுதிகள் தங்களுக்கு ஒதுக்கப்படும்...

சவூதி அரேபிய இளவரசர் சல்மான் - பிரதமர் நரேந்திர மோடி பேச்சுவார்த்தை

பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் இந்தியாவுக்கு சவுதி அரேபியா பூரண ஒத்துழைப்பு அளிக்கும் என்று, அந்நாட்டு பட்டத்து இளவரசர் அறிவித்துள்ளார்.  தனி விமானம் மூலம் செவ்வாய்கிழமை இரவு டெல்லி வந்த சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானை டெல்லி விமான நிலையத்தில் மரபுகளையும்...

அனில் அம்பானி குற்றவாளி..! உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 4 வாரத்தில் 453 கோடி ரூபாயை அந்த நிறுவனத்திற்கு வழங்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளது.  தொலை தொடர்பு வர்த்தகத்தில் ஸ்வீடனைச்...

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி போராட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டக் கோரி மதுரையில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தேவர் தேசபக்திப் பேரவை என்ற அமைப்பின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில் காலை 9.40 மணி முதல்...

த.மா.காவுடன் அ.தி.மு.க கூட்டணி பேச்சுவார்த்தை

நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து த.மா.கா - அ.தி.மு.க இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றதாகக் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளுடன் கூட்டணி உடன்பாடு இறுதி செய்யப்பட்ட நிலையில் இன்று த.மா.கா பொதுச் செயலாளர் விடியல் சேகர் அ.தி.மு.க. கூட்டணி பேச்சுவார்த்தைக்...

பேராசிரியை நிர்மலா தேவி வழக்கில் கைதான கருப்பசாமி, முருகன் ஆகியோருக்கு 10 மாதங்களுக்குப் பின் ஜாமீன்

பேராசிரியை நிர்மலாதேவி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த உதவி பேராசிரியர் முருகன், முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் இன்று ஜாமீனில் விடுதலையாகினர். கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் அருப்புக்கோட்டை தனியார் கல்லூரி உதவி பேராசிரியர் நிர்மலாதேவி கடந்தாண்டு...

தி.மு.க.- காங். தொகுதி பங்கீடு.. சென்னையில் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்க திட்டம்...

தி.மு.க கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு எத்தனை தொகுதிகள் என்பது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க - காங்கிரஸ் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளன. இதனை தொடர்ந்து கூட்டணியில் காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்...