​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாணய மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாணய மதிப்பு கடும் சரிவு

அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் நாட்டின் நாணய மதிப்பு இதுவரை இல்லாத அளவில் கடும் சரிவை சந்தித்துள்ளது. பொருளாதார நெருக்கடி மற்றும் அமெரிக்கா விதித்த பொருளாதார தடையால் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரான் ரியாலின் மதிப்பு தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. ஒரு அமெரிக்க...

லாவோஸில் அணை உடைந்த வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் தொய்வு

லாவோஸில் அணை உடைந்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியானது தேங்கிய சகதியால் தொய்வடைந்துள்ளது. கடந்த திங்களன்று, லாவோஸ்-ல் பழுதாகியிருந்த அணை உடைந்ததில் நூற்றுக் கணக்கானோரைக் காணவில்லை. இதுவரை 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்ட நிலையில், 30 பேர் வரை உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது....

அமெரிக்காவில் 15வயதில் பயோமெடிக்கல் எஞ்சினியர் பட்டம் பெற்ற இந்திய வம்சாவளி சிறுவன்

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 15 வயதுச் சிறுவன் பொறியாளர் பட்டம் பெற்றுள்ளான். அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சிறுவன் தனிஷ்க் ஆபிரகாம் தனது 11வயதில் பட்டம் பெற்றான். அதன்பின் கலிபோர்னியப் பல்கலைக்கழகத்தில் உயிரி மருத்துவப் பொறியியல் படிப்பில் சேர்ந்த அந்தச் சிறுவன்...

அமெரிக்காவின் வாகன இறக்குமதி வரி உயர்வுக்கு எதிராக கைகோர்க்கும் நாடுகள்

மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கான வரியை உயர்த்தியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்பின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுப்பது குறித்து, கனடா உள்ளிட்ட நாடுகளின் பிரதிநிதிகள் அடுத்த வாரம் ஜெனீவாவில் சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மோட்டார் வாகனங்கள் இறக்குமதிக்கான வரியை 25...

கலிபோர்னியாவில் காட்டுத்தீயில் மொத்தம் 84,000ஏக்கர் பரப்பில் மரங்கள் எரிந்து சாம்பல்

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காட்டுத்தீயில் மூதாட்டி ஒருவரும் அவரது கொள்ளுப் பேரக் குழந்தைகள் இருவரும் உயிரிழந்தனர். காட்டுத்தீயால் இதுவரை 84ஆயிரம் ஏக்கர் நிலங்களில் உள்ள மரங்கள் எரிந்து சாம்பலாகியுள்ளன. காடுகளை ஒட்டிய பகுதிகளில் ஐந்நூறு வீடுகளும் தீக்கிரையாகின. 38ஆயிரம் பேரை வீடுகளை விட்டுப் பாதுகாப்பான...

Amazon, Netflix-க்கு போட்டியாக களமிறங்குகிறது YouTube

அமேசான், நெட்ஃபிலிக்ஸ் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக, கட்டண நிகழ்ச்சிகளைக் களமிறக்க யூடியூப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாத சந்தா அடிப்படையில் ஏற்கெனவே "யூடியூப் ரெட்" எனும் பெயரில் வழங்கப்பட்டு வரும் சேவையில், பிரத்யேக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாக யூடியூபின் நிகழ்ச்சிகளுக்கான தலைவர் சுசான்னே டேனியல்ஸ் கூறியுள்ளார். இசை,...

இந்தோனேஷியாவில் மீண்டும் வெடித்தது அனாக் காரகட்டு எரிமலை

இந்தோனேஷியாவில் அனாக் காரகட்டு என்ற எரிமலை ஒரே நாளில் 50 க்கும் மேற்பட்ட முறை சாம்பலையும், பாறைகளையும் உமிழ்ந்து வருகிறது. இதன் சாம்பல் ஒன்றரை கிலோ மீட்டர் உயரத்திற்கு தூக்கி வீசப்பட்டது. 1883ம் ஆண்டு அனாக் எரிமலை வெடித்துச் சிதறியதால் 36 ஆயிரம்...

இந்தோனேசியாவில் 6.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10பேர் உயிரிழப்பு

இந்தோனேசியாவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான லோம்போக் தீவில் 6புள்ளி நான்கு ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதில் 10பேர் உயிரிழந்தனர். 40பேர் காயமடைந்தனர். இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் இன்று அதிகாலை திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வீட்டைவிட்டு வெளியேறினர்....

ஆளில்லாத ஹெலிகாப்டர்களைத் தயாரித்தது சீனா

கலவரங்களைக் கட்டுப்படுத்தவும், உளவுப் பணிகளுக்கும் பயன்படும் வகையில் ஆளில்லாத ஹெலிகாப்டர்களை சீனா தயாரித்துள்ளது. வடகிழக்கு சீனாவில் உள்ள ஷென்யாங் (Shenyang) நகரில் உள்ள வானூர்தி ஆராய்ச்சித் திட்ட விஞ்ஞானிகள் இதனை வடிவமைத்துள்ளனர். இதற்கு முன் மற்ற நாடுகள் கண்டுபிடித்துள்ள ஆளில்லா ஹெலிகாப்டர்கள் தரைதளத்தில்...

கருப்பு மாம்பாவை மிக அருகில் படம் எடுத்து புகைப்பட நிபுணர் சாதனை

உலகின் மிகக் கொடிய விஷப்பாம்பான கருப்பு மாம்பாவை மிக அருகில் படம் எடுத்து புகைப்பட நிபுணர் ஒருவர் சாதனை புரிந்துள்ளார். தென் ஆப்பிரிக்காவின் கேப் டவுன் நகரைச் சேர்ந்தவர் பாம்புகள் ஆர்வலரான கெர்ஹர்டு வான் டெர் ((Gerhard Van der)). இவர் உலகின்...