​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிரிமியா கல்லூரியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 17 பேர் பலி

கிரிமியா கல்லூரியில் மாணவர் நடத்திய துப்பாக்கிச் சூடு - 17 பேர் பலி

கிரிமீயாவில் கல்லூரியில் புகுந்து மாணவர் துப்பாக்கியால் சுட்டத்தில் 17 பேர் உயிரிழந்தனர். கெர்ச் நகரில் உள்ள கல்லூரிக்கு சென்ற 17 வயதான வாலாடிஸ்லேவ் ரோஸ்ல்யாகோவ் , துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதில் 16 பேர் உயிரிழந்த நிலையில் , அவர் தன்னை தானே...

செய்தியாளர் மாயமான விவகாரத்தில் விசாரணைக்கு சவுதி மன்னர் உத்தரவு

சவுதி அரேபிய செய்தியாளர் மாயமானது குறித்த விவகாரத்தில் விசாரணைக்கு அந்நாட்டு மன்னர் உத்தரவிட்டுள்ளார். வாஷிங்டன் போஸ்ட் நாளிதழின் சவுதி அரேபிய செய்தியாளராக பணியாற்றி வந்த ஜமால் கசோக்கி, அந்நாட்டு மன்னர் சல்மானின் முடியாட்சியை பற்றி கடுமையாக விமர்சித்து வந்தார். இந்நிலையில் கடந்த 2-ஆம்...

பாகிஸ்தானுக்கு அதிநவீன ஏவுகணைகளை விற்பனை செய்கிறது சீனா

சீனாவின் அதி நவீன ஏவுகணையை பாகிஸ்தான் வாங்க உள்ளது. இதுகுறித்து சீனாவின் அரசு நாளிதழான குளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில், சீனாவின் புதிய ஏவுகணையான ஹெச்.டி.-1 -யை பாகிஸ்தான் வாங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது. கப்பல், விமானம் மற்றும் தரையில் இருந்தும் ஏவக்கூடிய ஹெச்.டி.-1...

கொலை செய்ய சதி செய்வதாக இந்திய உளவுத்துறையான ரா மீது சிறிசேனா குற்றஞ்சாட்டவில்லை - இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சகம் விளக்கம்

இந்தியா உளவு அமைப்பான ரா தம்மை கொலை செய்ய திட்டமிட்டதாக அதிபர் மைத்ரிபால சிறிசேனா கூறவில்லை என்று இலங்கை அரசு விளக்கம் அளித்துள்ளது. கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் பங்கேற்ற இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா, தம்மை கொலை செய்ய இந்திய...

கனடா நாட்டில் சட்டபூர்வமாக்கப்பட்ட கஞ்சா விற்பனை

கனடா நாட்டில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. அக்டோபர் மாதத்தில் கஞ்சா சட்டபூர்வமாக்கப்படும் என்றும் இதன் மூலம் பணம் சமூக விரோதிகளிடம் சென்று சேர்வதை தடுக்க முடியும் என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடு தெரிவித்திருந்த நிலையில் தற்போது சட்டபூர்வமாக்கப்பட்டுள்ளது. கனடாவில் மருத்துவ ரீதியாக கஞ்சா ஏற்கனவே...

டெக்சாஸின் சில பகுதிகளில் வெள்ளப் பெருக்கு - ஒருவர் பலி

அமெரிக்காவின் டெக்சாஸில் சில பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதை அடுத்து அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டு வருகின்றனர். செவ்வாய் அன்று 24 மணி நேரத்துக்கும் மேல் 30 சென்டிமீட்டருக்கும் மேலாக கொட்டித் தீர்த்த கனமழையால், கொலரேடோ நதியின் லிண்டன் B நீர்த்தேக்கம் திறக்கப்பட்டது. மேலும்,...

லண்டனில் குழந்தைகளுக்கான மேடை நாடகப் பயிற்சிப் பட்டறை

லண்டனில் அடுத்த தலைமுறையை மேடை நாடகத்தின்பால் ஈர்க்கும் பொருட்டு, குழந்தைகளுக்கான பயிற்சிப் பட்டறை நடத்தப்பட்டது. ஒரு காலத்தில் ரசிகர்கள் கூட்டத்தால் அரங்குகள் நிரம்பி வலிந்த லண்டனின் ராயல் ஓப்ரா ஹவுஸ் ((Royal Opera House)), ரசிகர்ளை கணிசமான அளவில் இழந்துள்ளது. இதையடுத்து அழிந்து...

உலகம் முழுவதும் யூ டியூப் இணையதள சேவை திடீரென முடக்கம்

கூகுள் நிறுவனத்தின் சார்பு இணையதளமான யூ டியூப் இன்று காலை உலகம் முழுவதும் திடீரென முடங்கியது. திரைப்படங்கள், பாடல்கள், கலைநிகழ்ச்சிகள் உட்பட பல்வேறு வீடியோ பதிவுகளைக் கொண்டுள்ள மிகப்பெரிய இணையசேவை திடீரென முடங்கியதால், பலகோடி பயனாளர்கள் கடும் அவதிக்கு ஆளாகினர். இணையதளம் பக்கத்தில்...

அமெரிக்காவில் கார் நிறுத்துவது தொடர்பான தகராறில் தாய் மற்றும் மகளை அடித்து தூக்கி வீசிய நபர்

அமெரிக்காவில் காரை நிறுத்துவது தொடர்பாக தாய் மற்றும் மகளை அடித்து துவைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர். டெக்ஸாஸ் மாகாணத்தில் சான் ஆன்டனியோ என்ற இடத்தில் தனது காரை நிறுத்துவதற்காக ஒருவர் தயாராகும்போது அங்கு தனது தாயாருடன் வந்த அஞ்சலிக்கா லோசானோ ((Anjelica Lozano))...

வடக்கு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்சுக்கு 50வது மேன் புக்கர் விருது

வடக்கு அயர்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண் எழுத்தாளர் அன்னா பர்ன்சுக்கு இந்த ஆண்டுக்கான மேன் புக்கர் விருது அளிக்கப்படுகிறது. அவருடைய நாவலான மில்க்மேன் புத்தகத்திற்காக இந்த விருது அவருக்கு அளிக்கப்படுகிறது. இலக்கியத்தில் உயரிய விருதுகளில் ஒன்றாக கருதப்படுவது மேன் புக்கர் விருது. இந்த...