​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கை எம்.பி.க்களுக்கு ராஜபக்ச லஞ்சம் கொடுக்க முயன்றார் - சிறிசேனா

இலங்கை எம்.பி.க்களுக்கு ராஜபக்ச லஞ்சம் கொடுக்க முயன்றார் - சிறிசேனா

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க மகிந்த ராஜபக்ச, எம்பிக்களுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றதாக இலங்கை அதிபர் சிறிசேனா தெரவித்துள்ளார். நாளிதழ் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில், கடந்த நவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்தை தோற்கடிக்க, ராஜபக்சவால் 113 எம்பிக்களின்...

மழைநீர் மேலாண்மையின் ஒரு பகுதியாக, பஞ்சுவிரிப்பு பொருத்தப்பட்ட நடைபாதைகள்

சீனாவில் மழைநீர் மேலாண்மையின் ஒரு பகுதியாக, பஞ்சுவிரிப்பு பொருத்தப்பட்ட நடைபாதைகள் அமைக்கப் பட்டுள்ளன. ஹெனான் மாகாணத்தில் உள்ள ஹெபி நகரில் இந்த முயற்சி முன்னெடுக்கப் பட்டுள்ளது. மழைநீர் சேமிப்பு மற்றும் மழை நேரத்தில் சாலைகளில் தேங்கும் மழைநீரை கையாள்வது போன்ற பிரச்சினைகளைத் தீர்க்க...

கவிழ்ந்த நிலையில் அந்தரத்தில் தொங்கிய சரக்கு வாகனத்தில் இருந்து ஓட்டுனர் பாதுகாப்பாக மீட்பு

சீனாவின் சான்சி மாகாணத்தில் கவிழ்ந்து கிடந்த சரக்கு லாரியில் இருந்து ஓட்டுனர் பாதுகாப்பாக மீட்கப்பட்டார். நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அந்த சரக்கு வாகனம் திடீரென நிலைதடுமாறி கவிழ்ந்தது. முன்பகுதி என்ஜின் பாலத்திற்கு கீழே அந்தரத்தில் தலைகுப்புற தொங்கிக் கொண்டிருந்தது. அதன் ஓட்டுனர் பலத்த...

கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்தவர்கள் மாரத்தான் ஓட்டம்

ஸ்பெயினில் நடத்தப்பட்ட மாரத்தான் ஓட்டத்தில் ஏழாயிரத்துக்கும் அதிகமானோர் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமணிந்து பங்கேற்றனர். புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் சிகிச்சைக்கு நிதி திரட்டுவதற்காக, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாரத்தான் ஓட்டம் என்று மட்டுமின்றி, கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் நிகழ்ச்சியாகவும் அமைய வேண்டும் என்பதற்காக,...

பிரான்சில் பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வை கண்டித்து போராடிய 1700 பேர் கைது

பிரான்சில் அரசுக்கு எதிராக போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டதாக 1700 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வைக் கண்டித்து சனிக்கிழமை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மஞ்சள் உடை அணிந்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தலைநகர் பாரீஸ் உள்பட பல்வேறு...

ஹுவேய் தலைமை நிதி அதிகாரி மெங்க் வான்சூவை விடுவிக்கச் சீனா வலியுறுத்தல்

கனடாவில் கைது செய்யப்பட்ட ஹுவேய் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி மெங்க் வான்சூவை விடுவிக்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் எனச் சீனா எச்சரித்துள்ளது. ஹுவேய் நிறுவனரின் மகளும் அவர் நிறுவிய ஹுவேய் டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியுமான மெங்க் வான்சூ...

ரக்பி போட்டியை அதிபர் டிரம்ப் டாஸ் போட்டு தொடங்கி வைத்தார்

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில் நடைபெற்ற ராணுவம் மற்றும் கப்பற்படையினர் பங்கேற்ற விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து, அதிபர் டிரம்ப் பார்வையிட்டார். பிலடெல்பியா நகரில், இந்த விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. முதலில், அதிபர் டிரம்ப், குறிப்பிட்ட இலக்கில், வந்திறங்கிய பாராசூட் வீரர்கள் வரவேற்றனர்... இதனைத்...

ஷாங்காய் முன்னாள் சரக்கு கப்பல் இறக்கு தளம் அடியோடு மாற்றம்

சீனாவில், மிகவும் அழுக்கடைந்து காணப்பட்ட, சரக்கு கப்பல் இறக்கு தளம், பார்ப்போரை கொள்ளை கொள்ளும் விதமாக, நேர்த்தியான கலாச்சார மையமாகவும், தொழில்நுட்ப மையமாகவும் மாற்றப்பட்டிருக்கிறது.. ஷாங்காயின்,((Shanghai)) சரக்கு கப்பல் இறக்கு தளமாக, அதன் அருகாமையில் உள்ள ஷூஹூய்((Xuhui)) பகுதி இருந்து வந்தது. சில...

கவுதமாலாவில், கிறிஸ்துமஸ் பெருவிழாவை வரவேற்கும் விதமாக, பேய் பொம்மைகளை தீயிட்டு கொண்டாட்டம்

கவுதமாலா நாட்டில், கிறிஸ்துமஸ் பெருவிழாவை வரவேற்கும் விதமாக, பேய் பொம்மைகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. நமது ஊரில் உள்ள போகி பண்டிகையைப் போன்று, கவுதமாலா நாட்டில், கிறிஸ்துமஸ் விழாவை ஒட்டி பாரம்பரிய வழக்கம் கடைபிடிக்கப்படுகிறது. கிறிஸ்துமஸ் முன்னேற்பாடு பணிகளை தொடங்கும் முன், கோர...

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறும் காட்சிகள் வெளியாகின

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகக் குடியேறுபவர்கள் மெக்சிகோ எல்லை வேலிச் சுவருக்கு அடியில் துளையிட்டு  நுழையும் காட்சிகள் வெளியாகியுள்ளன. அமெரிக்காவில் குடியேறும் நோக்கத்துடன் பலவாரங்களாக நடந்தும் வாகனங்களில் பயணம் செய்தும் வந்த ஆயிரக்கணக்கானோரை எல்லைச் சுவருக்கு அருகில் அமெரிக்க அதிகாரிகள் தடுத்து நிறுத்தியுள்ளனர். மெக்சிகோ எல்லையான டிஜுவானாவிலேயே...