​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

லண்டன் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி

 லண்டன் உயிரியல் பூங்காவில் பிளாஸ்டிக் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்காக லண்டன் மற்றும் கடற்கரையில் குப்பைகளாக போடப்பட்ட 15 ஆயிரம் பிளாஸ்டிக் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டன. பூங்காவில் பிளாஸ்டிக் பாட்டில்கள் மூலம் வீடுகளை அமைத்து இவற்றில் தான் இனி வசிக்க நேரிடும்...

அணு ஆயுத பரிசோதனை கூடத்தை தகர்த்தது வடகொரியா.. தற்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக அறிவிப்பு..

அமெரிக்காவுக்கு அளித்த வாக்குறுதியின்படி, அணு ஆயுத பரிசோதனை கூடத்தை தகர்த்துள்ள வடகொரியா, தற்போதும் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாக கூறியுள்ளது. அமெரிக்கா, தென்கொரியா, ஜப்பான் நாடுகளை அச்சுறுத்தும் வகையில் தொடர்ந்து, அணு ஆயுத சோதனையை நடத்தி வந்த வடகொரியா, ஐ.நா. மற்றும் அமெரிக்காவின் தொடர்...

பிறந்து சில மாதங்களேயான குட்டிக் கரடியின் வீடியோ காட்சிகள்

பெல்ஜியம் நகரின் ஆன்ட்வர்ப் வனவிலங்குப் பூங்காவில் அரிய வகை விலங்கினமாக கருதப்படும் கரடியான ஜமோரா ஒரு குட்டியை ஈன்றது. கருப்பும் பிரவுனும் கலந்த நிறத்தில் டெடி பேர் பொம்மை போல் அழகாக காட்சியளிக்கிறது இந்த குட்டிக் கரடி. கடந்த பிப்ரவரி 16ம்...

போலீசார் துரத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் திருடன் சுழற்சி வேகத்தில் தூக்கி வீசப்படும் காட்சிகள்

பிரேசிலில் போலீஸ் துரத்தியதால் கட்டுப்பாட்டை இழந்த கார் திருடன் தாறுமாறாக பல்டியடித்த காரிலிருந்து தூக்கி வீசப்படும் காட்சிகள் வெளியாகியுள்ளன. பரானா பகுதியில் பிரேசில் நேரப்படி கடந்த திங்களன்று காலை திருட்டுக் காரை ஓட்டிச் சென்ற ஒருவன், போலீசார் துரத்துவதை அறிந்து தப்புவதற்காக வேகமாக...

லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அட்ரிப்ட் படத்தின் அறிமுக விழா

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலஸ் நகரில் அட்ரிப்ட் (Adrift)படத்தின் அறிமுக விழாவில் பங்கேற்ற படத்தின் கதாநாயகி ஷாயிலின் ஊட்லீ, கடல் என்றால் தமக்கு கொள்ளை ஆசை என்று தெரிவித்தார். இப்படத்திற்காக 3 மாதங்களாக கடலிலேயே நடித்த அனுபவம் கனவு நனவானது போல் உள்ளதாக தெரிவித்தார்....

பயங்கரவாதி ஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு அனுப்புமாறு பாகிஸ்தானிடம் ஜி ஜின்பிங் கூறியதாக வெளியான தகவல் ஆதாரமற்றது - சீன வெளியுறவுத்துறை

பயங்கரவாதி ஹபீஸ் சயீதை மேற்காசிய நாடுகளுக்கு அனுப்புமாறு பாகிஸ்தானிடம் ஜி ஜின்பிங், கேட்டுக்கொண்டதாக வெளியான தகவல் ஆதாரமற்றது  சீனா தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சீனா சென்றிருந்த பாகிஸ்தான் பிரதமர் சாஹித் ககான் அப்பாஸியிடம்(Shahid Khaqan Abbasi), லஷ்கர் இ தொய்பா இயக்கத்தின் தலைவன்...

அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் இடையேயான பேச்சுவார்த்தை ரத்து

வடகொரியா அதிபருடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார். வட கொரியா சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் இருந்த கோபமான சொற்கள் மற்றும் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளால் இந்த முடிவு எடுக்கப்படுவதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். நீண்ட நாள் எதிரியான வடகொரியாவுடன் ,...

நிதிமுறைகேட்டுப் புகார் தொடர்பான விசாரணைக்காக மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்பு இரண்டாவது நாளாக ஆஜர்

நிதிமுறைகேட்டுப் புகார் தொடர்பான விசாரணைக்காக மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் ஊழல் தடுப்பு ஆணையத்தின் முன்பு இரண்டாவது நாளாக ஆஜரானார். மலேசியாவில் மகாதிர் முகமது தலைமையிலான புதிய அரசு பதவியேற்றுள்ள நிலையில், முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீதான ஊழல் புகார்...

ஆப்பிள் ஐபோன் பேட்டரி மாற்ற ரூ.5900 செலுத்தியவர்கள் ரூ.3900 திரும்பப் பெறலாம்

ஆப்பிள் ஐபோன் வைத்திருப்பவர்கள் பேட்டரி மாற்றுவதற்கு முழுத் தொகை கொடுத்திருந்தால் மூவாயிரத்துத் தொள்ளாயிரம் ரூபாயைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம். ஆப்பிள் ஐபோன்களின் பேட்டரி விரைவாகத் தீர்ந்துபோவதைத் தடுக்க, செல்பேசிகளின் செயல்திறனைக் குறைத்ததாகக் கூறப்பட்டது. இதையடுத்துப் பழைய ஐபோன்களுக்குப் புதிய பேட்டரி மாற்றிக்கொள்ளும் திட்டத்தையும்...

புவியில் மின்னல் வெட்டு ஏற்படுவது குறித்த அனிமேஷன் காட்சி, தேசிய பெருங்கடல் வளிமண்டல ஆராய்ச்சி அமைப்பு வெளியிடு

புவியில் மின்னல் வெட்டும் போது ஏற்படும் தோற்றம் குறித்த வீடியோவை அமெரிக்காவின் தேசிய பெருங்கடல் வளிமண்டல ஆராய்ச்சி அமைப்பு வெளியிட்டுள்ளது. GOES-17 செயற்கைக்கோளின் மூலம் அனுப்பப்பட்ட தகவல்களின் அடிப்படையில், அனிமேஷன் செய்யப்பட்ட காட்சி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 9ம் தேதி வட மற்றும் தென்...