​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
6வது நாளாக உண்ணாவிரதம் - அன்னா ஹசாரேயின் உடல் நிலை பாதிப்பு

6வது நாளாக உண்ணாவிரதம் - அன்னா ஹசாரேயின் உடல் நிலை பாதிப்பு

ஊழலுக்கு எதிராக வலிமையான லோக்பால் அமைக்க வலியுறுத்தி, டெல்லியில் ஆறுநாட்களாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வரும் சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேயின் உடல் நிலை பாதிக்கப்பட்டதையடுத்து அவர் தினமும் செய்தியாளர்களை சந்திக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது. ஹசாரேயின் உடலை பரிசோதித்த அவருடைய மருத்துவர்,...

தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தேசிய மருத்துவ கவுன்சில் மசோதாவுக்கு பிரதமர் மோடியின் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சித்த மருத்துவர்கள் ஆங்கில வைத்தியம் பார்க்க அனுமதிக்கும் முடிவை மத்திய அரசு கைவிட்டுள்ளது. ஆங்கில வைத்தியம் பார்க்கும் சித்த மருத்துவர்களுக்கு ஓராண்டு சிறைத்தண்டனையுடன் 5 லட்சம்...

மகாராஷ்ட்ராவில் சூடு பிடிக்கும் தேநீர் விவகாரம்

மகாராஷ்டிர முதலமைச்சர் அலுவலகத்தில் ஒரு நாளைக்குச் சராசரியாகப் பதினெட்டாயிரத்து ஐந்நூறு கோப்பைத் தேநீர் பரிமாறப்பட்டதாகக் கணக்குக் காட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிர முதலமைச்சர் அலுவலகத்தில் தேநீருக்காகச் செலவிடப்பட்ட தொகை 2015-2016ஆம் ஆண்டில் 58லட்ச ரூபாயாக இருந்தது. 2017-2018ஆம் ஆண்டில் 3கோடியே 40லட்ச ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தத்...

காவிரிநீர் பங்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் விதித்த கெடு இன்றுடன் முடிகிறது

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கும் விவகாரத்தில், மீண்டும் உச்சநீதிமன்றத்தை நாட மத்திய அரசு முடிவெடுத்திருப்பதாக கூறப்படுகிறது. காவிரி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், காவிரி வாரியம் அமைப்பது தொடர்பான உத்தரவில், "திட்டம்" என்று குறிப்பிடப்பட்டிருப்பதாகவும், அதற்கான விளக்கத்தை உச்சநீதிமன்றத்திடம் கேட்டுப் பெற...

ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்று மாலை விண்ணில் பாய்கிறது GSLV ராக்கெட்

தகவல் தொடர்புக்கான ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளுடன், ஜி.எஸ்.எல்.வி.-எஃப்08 ராக்கெட் இன்று மாலை விண்ணில் ஏவப்பட உள்ளது.இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, தகவல் தொடர்புக்கான ஜிசாட்-6ஏ செயற்கைக்கோளைத் தயாரித்துள்ளது. இதனை ஜிஎஸ்எல்.வி எஃப்08 ராக்கெட் மூலம் அனுப்புவதற்கான 27 மணி நேர கவுன்ட்-டவுன்...

காஷ்மீர் வனப்பகுதியில் 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீரில், பாதுகாப்பு படையினரின் அதிரடி தேடுதல் வேட்டையில், 4 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ராஜோவ்ரி (Rajouri ) மாவட்டத்தின் பீர் பான்சாலில் ((Pir Panchal)) உள்ள வனப்பகுதியில், தீவிரவாதிகள் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலையடுத்து, மத்திய பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்....

வெடிகுண்டு மிரட்டலால் மீண்டும் டெல்லிக்கே திரும்பியது ஏர் இந்தியா விமானம்

வெடிகுண்டு மிரட்டலால் ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் டெல்லிக்கே திருப்பப்பட்டது. டெல்லியில் இருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவுக்குப் புறப்பட்டது. AI-020 என்ற அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், ஏர் இந்தியா நிறுவனத்தின்...

தகவல் பாதுகாப்பு தொடர்பாக ஏப்-7க்குள் பதிலளிக்க ஃபேஸ்புக்கிற்கு மத்திய அரசு நோட்டீஸ்

தகவல் பாதுகாப்பு தொடர்பாக அடுத்த மாதம் 7 ஆம் தேதிக்குள் பதிலளிக்குமாறு ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.  ஃபேஸ்புக்கில் பகிரப்படும் தனிநபர் குறித்த தகவல்களை, பிற நபர்கள் முறைகேடாக பயன்படுத்தி விடாமல்...

ஏர் இந்தியாவின் 76% பங்குகளை விற்க மத்திய அரசு முடிவு

ஏர் இந்தியாவின் 76விழுக்காடு பங்குகளை விற்க முடிவு செய்துள்ள அரசு, அதை வாங்க விரும்புபவர்களின் கோரிக்கைகளை வரவேற்றுள்ளது. 28ஆயிரம் ஊழியர்களைக் கொண்டுள்ள ஏர் இந்தியா நிறுவனம் ஐம்பதாயிரம் கோடி ரூபாய்க்கு மேல் நட்டத்தில் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் 76விழுக்காடு பங்குகளை...

அரசு நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலஅவகாசம் நீட்டிப்பு

அரசு நலத்திட்டங்களுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான  காலஅவகாசம் வரும் ஜுன் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.எரிவாயு இணைப்பு, மண்ணெண்ணெய், ஸ்காலர்ஷிப் எனும் கல்வி உதவித் தொகை உள்ளிட்ட மானியத்துடன் கூடிய அரசு சேவைகள் மற்றும் அரசின் நலத்திட்டங்களைப்...