​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடிகளில் ரூ.1,00,000 கோடி ரூபாய் ஏய்ப்பு

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடிகளில் ரூ.1,00,000 கோடி ரூபாய் ஏய்ப்பு

நாடு முழுவதும் கடந்த 5 ஆண்டுகளில் வங்கி மோசடிகளில் 1 லட்சம் கோடி ரூபாய் ஏய்க்கப்பட்டுள்ளதாக மத்திய ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலமான கேள்விக்கு ரிசர்வ் வங்கி அளித்த பதிலின் அடிப்படையில் பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளில்...

காவிரி நீர்பங்கீட்டு திட்டவரைவை உருவாக்க மேலும் 2 வார கால அவகாசம் கோரிய மனுவை விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

காவிரி நதி நீர் பங்கீட்டு செயல் திட்டத்தை தாக்கல் செய்ய மேலும் 2 வாரம் கூடுதல் அவகாசம் கோருவது தொடர்பாக மத்திய அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ளது. காவிரி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், 6...

இணையம் வழியாகச் செல்பேசியில் இருந்து லேன்ட்லைனை அழைக்கும் முறையை அனுமதிக்க அரசு ஒப்புதல்

இணையவழியாகச் செல்பேசிக்கும் லேண்ட்லைன் தொலைபேசிக்கும் அழைப்புக் கொடுக்கும் முறையை அனுமதிக்க அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. . இந்த முறைப்படி வீட்டிலும் அலுவலகத்திலும் இருக்கும்போது வைபைமூலம் இணையவழியாக செல்பேசியில் இருந்து லேண்ட்லைன் போனிற்கு அழைப்பில் பேச முடியும்.  இதற்கு இணையவழித் தொலைபேசிச் செயலியைப் பதிவிறக்கம்...

ஜம்மு காஷ்மீரில் பள்ளிப் பேருந்து மீது கல்வீச்சு - தாக்குதலில் பள்ளிக் குழந்தைகள் இருவர் காயம்

ஜம்மு காஷ்மீரில் பள்ளிப் பேருந்து மீது கல்வீசித் தாக்கியதில் இரண்டு குழந்தைகள் காயமடைந்துள்ளனர். கத்துவா சிறுமி பலாத்கார சம்பவத்தை அடுத்து வன்முறை ஏற்பட்டதால் இயல்பு நிலை திரும்பும் வரை கடந்த மாதம் பள்ளி, கல்லூரிகளை மூட அம்மாநில அரசு உத்தரவிட்டது. இந்த...

பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என தீர்ப்பு

பத்திரிகையாளர் ஜோதிர்மய் டே சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில் சோட்டா ராஜன் குற்றவாளி என மும்பை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மும்பையில் இருந்து வெளிவரும் மிட்டே என்கிற ஆங்கில நாளிதழின் ஆசிரியரான ஜோதிர்மய் டே, மும்பை போவாயில் உள்ள அவரது வீட்டின் அருகே 2011ஆம் ஆண்டு...

ஆப்பிள் நிறுவன காலாண்டு வருவாய் கணிசமாக அதிகரிப்பு - ரூ.6.65 லட்சம் கோடியை முதலீடு செய்ய ஆப்பிள் நிறுவனம் திட்டம்

கடந்த காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது. இதையடுத்து, இந்திய மதிப்பில் 6.65 லட்சம் கோடி ரூபாயை (($100 billion)) பங்கு சந்தைகளில் அந்நிறுவனம் முதலீடு முடிவு செய்யவுள்ளது. கடந்த காலாண்டில், ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய், 25.3 சதவீதம்...

வாகன நெரிசலைத் தவிர்க்கத் சுங்கச்சாவடிகளில் கேமரா மூலம் வாகன இயக்கத்தைக் கண்காணிக்கத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டம்

சுங்கச் சாவடிகளில் கேமராக்கள் மூலம் வாகன இயக்கத்தைக் கண்காணித்து, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கத் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் திட்டமிட்டுள்ளது. நாள்தோறும் பத்தாயிரம் வாகனங்களுக்கு மேல் வந்து செல்லும் பத்துச் சுங்கச் சாவடிகளில் கேமராக்கள் மூலம் வாகன இயக்கத்தைக் கண்காணிக்கத் திட்டமிட்டுள்ளது. இந்தச்...

டெல்லியில் முகத்தில் ஸ்பிரே அடித்து நகைக் கடையில் கொள்ளை முயற்சி

டெல்லியில் பரபரப்பான சாலையில் உள்ள நகைக் கடையில் கொள்ளை அடிக்க முயன்றவனை, கடையின் உரிமையாளர் தடுத்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளன. திஃக்ரி என்ற இடத்தில் உள்ள அந்தக் கடையில் பட்டப் பகலில் கொள்ளையன் புகுந்தான். கையில் ஸ்பிரே வைத்துக் கொண்டு,...

உலகின் காற்று மாசு மிக்க 20 நகரங்களில் 14 இந்திய நகரங்கள் - WHO ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல்

உலகின் காற்று மாசு மிக்க 20 நகரங்கள் பட்டியலில் 14 இந்திய நகரங்கள் இடம்பெற்றிருப்பதாக சுகாதார நிறுவனமான WHO ஆய்வறிக்கையில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் நான்காயிரத்து 300 நகரங்களில் PM 2.5 மற்றும் PM...

செல்பேசி சிம் பெற ஆதார் கட்டாயமில்லை என மத்திய அரசு விளக்கம்

செல்பேசி சிம் வழங்குவதற்கு ஆதார் கட்டாயமில்லை என தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஆதார் வழக்கில் இறுதித் தீர்ப்பு வரும் வரை பல்வேறு திட்டங்களுடன் ஆதார் எண் இணைப்பதைக் கட்டாயமாக்க வேண்டாம் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இருப்பினும் தொலைத்தொடர்பு நிறுவனங்கள்...