​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விதிகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் சிக்கிய அமைச்சரின் மனைவி ராஜினாமா

விதிகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் சிக்கிய அமைச்சரின் மனைவி ராஜினாமா

கேரளாவில், விதிகளை மீறி பணி நியமனம் செய்யப்பட்டதாக எழுந்த சர்ச்சையில் சிக்கிய அமைச்சரின் மனைவி தனது பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். கேரள பொதுப்பணித்துறை அமைச்சர் சுதாகரனின் மனைவி ஜூபிலி நவப்பிரபா((JubileeNavaprabha))....  இவரை, கேரளா பல்கலைக்கழகத்தில் மாநில சுயநிதி கல்லூரிகளின் இயக்குநராக, 35...

தன்னை விட 15 வயது குறைவான, ரோஹ்மன் ஷாலை காதலிப்பது உண்மை - சுஷ்மிதா சென்

தன்னை விட 15 வயது குறைவான, விளம்பர மாடல் ரோஹ்மன் ஷாலை காதலிப்பது உண்மை என்றும், ஆனால், திருமணம் குறித்து வெளியாகும் செய்தியில் உண்மையில்லை என்றும், முன்னாள் பிரபஞ்ச அழகியும், நடிகையுமான சுஷ்மிதா சென் தெரிவித்திருக்கிறார். ஏராளமான ஹிந்தி படங்களில் நடித்துள்ள சுஷ்மிதா...

காஷ்மீரில் வாகனசோதனையின் போது தாக்குதல் நடத்திய தீவிரவாதி சுட்டுக் கொலை

காஷ்மீரில் பாதுகாப்புப் படையினருடன் மோதலில் ஈடுபட்ட தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான்.  ஹந்த்வாரா மாவட்டத்தில் ராணுவத்தினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதி ஒருவன் துப்பாக்கியால் சுட்டான். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய எதிர்த்தாக்குதலில் அந்தத் தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டான். இந்நிலையில்,...

ஒடிசாவின் வனப்பகுதியில் 100 யானைகள் நுழைந்து அட்டகாசம்

ஒடிசாவில் வனப்பகுதியை ஒட்டிய கிராமத்திற்குள் புகுந்த 100 யானைகள் விளைநிலங்களைச் சேதப்படுத்தின. சத்தீஷ்கர் மாநிலத்தின் ராசாகோவிந்பூர் வனப்பகுதியிருந்து ஒடிசாவுக்கு இந்த யானைக் கூட்டம் வந்ததாகக் கூறப்படுகிறது. 100க்கும் மேற்பட்ட எண்ணிக்கையைக் கொண்ட இந்த யானைக் கூட்டம் தற்போது மயூர்பஞ்ச் மாவட்டத்தின் விளைநிலங்களுக்குள் புகுந்துள்ளதால்...

வங்கிகளில் கடன் பெற்று மோசடி செய்தவர்களின் பட்டியலை அதிரடியாக வெளியிட்ட 4 பொதுத்துறை வங்கிகள்

கடன் வாங்கி மோசடி செய்தோரின் பட்டியலை பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆப் பரோடா, ஐ.டி.பி.ஐ., மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை இணையத்தில் வெளியிட்டு உள்ளன. இந்த நான்கு வங்கிகளில் மட்டும், 1,815 பேர், 42 ஆயிரம் கோடி ரூபாய் கடன்...

பா.ஜ.க. மூத்த தலைவரும், மத்திய அமைச்சருமான அனந்த்குமார் காலமானார்...

மத்திய அமைச்சரும், பா.ஜ.க. மூத்த தலைவர்களில் ஒருவருமான அனந்த்குமார் காலமானார். அவருக்கு வயது 59. மத்திய அமைச்சர் அனந்தகுமாருக்கு புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வந்தார். அமெரிக்காவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற பின் உடல்நலம் சீரானது. இந்நிலையில், மீண்டும் உடல்நலக்குறைவு...

அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் - தேசிய சிறுபான்மையின ஆணையம்

முஸ்லிம்கள் அமைதியாக வாழ, அயோத்தியில் ராமர் கோயிலை கட்ட வேண்டும் என்று தேசிய சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் கயோருல் ஹஸன் ரிஸ்வி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் ராமர் கோயில் - பாபர் மசூதி கட்டுவது குறித்த மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில்...

சர்தார் வல்லபாய் பட்டேலின் பிரம்மாண்டமான சிலை, 5 நாள்களில் 75 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர்

குஜராத்தில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான சர்தார் வல்லபாய் பட்டேலின் சிலையை, 5 நாள்களில் 75 ஆயிரம் பேர் பார்வையிட்டுள்ளனர். 182 மீட்டர் உயரத்தில் பிரம்மாண்டமாக வடிவமைக்கப்பட்டு, நர்மதை ஆற்றின் கரையில் நிறுவப்பட்டுள்ள இந்தச் சிலை, அக்டோபர் 31 ஆம் தேதி திறக்கப்பட்டது....

ஏர் இந்தியா ஆபரேசன்ஸ் இயக்குநர் அர்விந்த் 2 ஆண்டுகளில் 2-வது முறையாக ஆல்கஹால் பரிசோதனையில் சிக்கினார்

ஏர் இந்தியா ஆபரேசன்ஸ் இயக்குநர் அர்விந்த் கத்பாலியா 2 ஆண்டுகளில் 2-வது முறையாக ஆல்கஹால் பரிசோதனையில் சிக்கியுள்ளார். ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் தலைமை விமானிகளில் ஒருவரும், ஏர் இந்தியா இயக்குநர்களில் ஒருவருமான அர்விந்த் கத்பாலியா, கடந்த ஆண்டும் இதேபோன்ற பிரச்சனையில் சிக்கினார்....

8 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை பெற்றுள்ளது இந்தியா

8 லட்சம் டன் சர்க்கரையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்களை இந்தியா பெற்றுள்ளது. 2017 - 2018ஆம் ஆண்டில் நாட்டின் சர்க்கரை ஏற்றுமதி 32.5 மில்லியன் டன்களாக இருந்தது. 2018 - 2019 ஆண்டிலும் இதே அளவு உற்பத்தியாகியுள்ளது. உள்நாட்டு தேவையை விடவும் கூடுதல்...