​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக ராகுல்காந்தி வலியுறுத்தல்

பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக ராகுல்காந்தி வலியுறுத்தல்

ரஃபேல் விமான ஒப்பந்த விவகாரத்தில், ஹெச்ஏஎல் நிறுவனத்தின் திறன் பற்றி பொய்யான தகவல்களை கூறிய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார். பிரான்சின் டசால்ட் நிறுவனத்திடம் இருந்து 126 போர் விமானங்களை வாங்குவதற்கு...

பேராயர் ஃபிராங்கோ முலக்கல்லிடம் 2-வது நாளாக விசாரணை

கேரள கன்னியாஸ்திரி பாலியல் புகார் வழக்கில் பேராயர் ஃபிராங்கோ முலக்கல்லிடம் கேரள போலீசார் 2-வது நாளாக விசாரணை மேற்கொண்டுள்ளனர். பேராயர் ஃபிரான்கோ முல்லக்கல் 2014 முதல் 2016 வரை தன்னை 13 முறை பாலியல் பலாத்காரம் செய்ததாக கேரளாவைச் சேர்ந்த கன்னியாஸ்திரி ஒருவர்...

பைக்கில் வந்த ஒருவரின் தலை மீது விழுந்த இரும்புச் சாளரம்

பெங்களூருவில் பைக்கில் வந்த ஒருவரின் தலை மீது இரும்புச் சாளரம் சட்டென விழுந்து அவரை வீழ்த்தும் பதைபதைப்பான காட்சிகள் வெளியாகியுள்ளன. கடந்த மாதம் 31-ம் தேதி, காலை பத்தேகால் மணியளவில் சந்தன் என்பவர், ஹெல்மெட் அணிந்தபடி தமது இருசக்கர வாகனத்தில் சுனகல்பேட் பகுதியில்...

பாட்னாவில் மாணவியை 9 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்த பள்ளி முதல்வர், ஆசிரியர் கைது

பீகார் மாநிலம் பாட்னாவில் மாணவியை 9 மாதங்கள் பாலியல் பலாத்காரம் செய்து கருவுறச் செய்த பள்ளி முதல்வரையும் ஆசிரியரையும் போலீசார் கைது செய்துள்ளனர். பாட்னாவின் புல்வாரி ஷரீஃப் ((Phulwari Sharif)) என்ற இடத்தில் உள்ள ஒரு பள்ளியில் தேர்வு விடைத் தாள் தொடர்பாக...

பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில் 2 ரவுடிகள் சுட்டுக் கொலை

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகாரில், ஊடகங்கள் முன்னிலையில் போலீசார் நடத்திய என்கவுன்ட்டரில், இரு ரவுடிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 6 கொலைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக முஸ்டாக்கிம் மற்றும் நவ்சாத் ((Naushad)) ஆகிய இருவரை உத்தரப்பிரதேச போலீசார் தேடி வந்தனர். இவர்கள்...

விமான பயணத்திற்கு இ-கேட் எனப்படும் டிஜிட்டல் முறை ஓராண்டில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது

விமான பயணத்திற்கு காகித ஆவணங்களை சரிபார்த்து அனுமதிக்கும் முறைக்கு மாறாக, டிஜிட்டல் முறை இன்னும் ஓராண்டில் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது. டிஜியாத்ரா ((DigiYatra)) திட்டத்தின் ஒருபகுதியாக,  விமான நிலையத்தில் பயோமெட்ரிக் முறையும் முகத்தை ஸ்கேன் செய்து அடையாளம் காணும்...

பிரதமர் வீட்டு வசதித் திட்ட வீடுகளில் மோடி படத்துடன் டைல்ஸ்கள்

மத்தியப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளில் பிரதமர் மோடி மற்றும் அம்மாநில முதலமைச்சரின் படங்களுடன் கூடிய டைல்ஸ்களை அகற்ற அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட வீடுகளின் நுழைவு வாயில் மற்றும் சமையலறையில்...

பசுவுக்கு பாரத மாதா அந்தஸ்து வழங்கக் கோரும் தீர்மானம், உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் ஏகமனதாக நிறைவேற்றம்

பசுவுக்கு "பாரத மாதா" அந்தஸ்து வழங்குக் கோரும் தீர்மானம், உத்தரகாண்ட் மாநில சட்டப்பேரவையில் நிறைவேறியது. அம்மாநில கால்நடைப் பராமரிப்புத் துறை அமைச்சரான ரேகா ஆர்யா, இந்த தீர்மானத்தை கொண்டு வந்து பேசுகையில், ஆக்சிஜனை உள்ளிழுத்து, அதே வாயுவை வெளியேற்றும் ஒரே விலங்கு பசு...

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம், இடைத்தரகராக செயல்பட்ட நபர், இந்தியாவிடம் ஒப்படைக்கப்படுவாரா?

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ((AgustaWestland)) ஹெலிகாப்டர் பேர ஊழலில் இடைத்தரகராக செயல்பட்ட நபரை, இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு ஐக்கிய அரபு அமீரக நீதிமன்றம் நேரடியான உத்தரவு ஏதும் பிறப்பிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மத்தியில் காங்கிரஸ் ஆட்சியின்போது விவிஐபி-களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம்...

சிக்கன வகுப்புப் பயணிகளுக்கான இலவச உணவு வழங்கும் சேவையை நிறுத்துவதாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் அறிவிப்பு

ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், தனது சிக்கன வகுப்புப் பயணிகளுக்கான இலவச உணவு வழங்கும் சேவையை வரும் 25-ம் தேதி முதல் நிறுத்துவதாக அறிவித்துள்ளது. எகானமி கிளாஸ் எனப்படும் சிக்கன வகுப்பில் பயணிகளுக்கான சலுகைகளை ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது....