​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆந்திராவில் அதிநவீன வசதிகள் மற்றும் A/C வசதியுடன் கூடிய காவல் நிலையம்

ஆந்திராவில் அதிநவீன வசதிகள் மற்றும் A/C வசதியுடன் கூடிய காவல் நிலையம்

அதிநவீன வசதிகள் மற்றும் ஏ.சி. வசதியுடன் கூடிய காவல் நிலையத்தை ஆந்திர மாநில துணை முதலமைச்சர் சின்னராஜப்பா திறந்து வைத்தார். இந்த காவல் நிலையம் முற்றிலும் ஏ.சி. வசதியுடனும், கைதிகளுக்கு கூட படுக்கை வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் பேப்பர் பயன்பாடு இல்லாமல் முற்றிலும்...

புதுச்சேரியில் கல்லூரி மாணவி தற்கொலையில் அதிர்ச்சி தகவல்

புதுச்சேரியில் தற்கொலை செய்துகொண்ட கல்லூரி மாணவி உடல் அடக்கம் செய்யப்பட்ட நிலையில், அவரை இளைஞர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்து மிரட்டியதே தற்கொலைக்கு காரணம் என்று பெற்றோர் புகார் அளித்துள்ளனர். அங்குள்ள கல்லூரியில் பி.டெக் பயின்ற மாணவி கடந்த மாதம் தற்கொலை செய்து...

வைஷ்ணவி தேவி கோவில் மலையில் பரவிய காட்டுத் தீயால் இரண்டு நாட்களாக 25,000 பக்தர்கள் பரிதவிப்பு

ஜம்மு காஷ்மீரின் கட்ரா மலைத் தொடரில் ஏற்பட்ட தீ விபத்து, ராணுவ ஹெலிகாப்டர்கள் உதவியுடன் கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. திரிகூட மலையில் ஏற்பட்ட காட்டுத் தீயால் புதன்கிழமை முதல் வைஷ்ணவதேவி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இதனால் கட்ரா மலையடிவார முகாம்களில் சுமார்...

சூரத்தில் கையில் உருவிய வாளுடன் பைக்கில் அச்சுறுத்தும் பெண் தாதா

குஜராத் மாநிலம் சூரத்தில் புரி கோஹில்(buri gohil) என்ற பெண் தாதா பட்டப்பகலில் கையில் வாளுடன் இருசக்கர வாகனத்தில் சென்று பொதுமக்களை அச்சுறுத்தியதற்காக போலீசார் அவரை கைது செய்துள்ளனர். பல முறை பல்வேறு வழக்குகளுக்காக கைது செய்யப்பட்ட இந்த பெண் தாதா ஜாமீனில்...

ஊதிய உயர்வு தொடர்பான கோரிக்கைகளை வலியுறுத்தி மே 30,31 தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

மாத இறுதியில் 30 மற்றும் 31 ஆகிய இரண்டு நாட்களுக்கு வங்கி ஊழியர் சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டம் அறிவித்துள்ளன. கடந்த 5ம் தேதி மும்பையில் ஊதிய உயர்வு தொடர்பாக நடத்தப்பட்ட முத்தரப்பு பேச்சுவார்த்தையில் 2 சதவீதம்தான் ஊதிய உயர்வு அளிக்கப்படும் என்று...

ஸ்ரீநகரில் தடையை மீறி பிச்சையெடுத்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பிச்சையெடுக்க தடைவிதிக்கப்பட்டதை அடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட பிச்சைக்காரர்களை போலீசார் கைது செய்துள்ளனர். ஸ்ரீநகரில் உள்ள வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பொது இடங்களில் பிச்சை எடுப்பவர்கள் பொதுமக்களுக்கு மிகுந்த தொந்தரவாக இருப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து, ஸ்ரீநகரில் பிச்சை எடுக்க தடை...

பெங்களூருவில் குழந்தை கடத்த வந்தவர் எனக்கூறி இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 4 பெண்கள் உள்பட 14 பேர் கைது

பெங்களூருவில், குழந்தை கடத்த வந்தவர் எனக்கூறி இளைஞர் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கில், 4 பெண்கள் உள்பட 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ராஜஸ்தானைச் சேர்ந்த கல்லுராம் என்ற இளைஞர், சாம்ராஜ்பேட்டையின் பென்சன் மோகலா பகுதியில் வேலைதேடி அலைந்து திரிந்தபோது, குழந்தை கடத்த...

மும்பை அருகே அடுக்குமாடி குடியிருப்பை கலக்கிய குரங்கு பொறி வைத்து பிடிப்பு

மும்பை அருகே 17 நாட்களாக வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்த குரங்கு பொறி வைத்து பிடிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள கல்யாண் நகரின் கனககிரி அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த 17 நாட்களுக்கு முன் புகுந்த குரங்கு ஒன்று, வீடுகளில் இருந்த மாம்பழங்களை திருடி தின்னத் தொடங்கியது....

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு எதனையும் விதிக்கவில்லை - நாராயணசாமி

புதுச்சேரியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கு உச்சநீதிமன்றம் காலக்கெடு எதனையும் விதிக்கவில்லை என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக, புதுச்சேரி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தல் குறித்து பல்வேறு கட்சியினரும் தங்களது கருத்துகளை...

11 வயது சிறுமியை 5 சிறுவர்கள் சேர்ந்து சீரழித்த கொடூரம்

திருப்பதி அருகே, சிறுமியை மிரட்டி பல மாதங்களாக தொடர்ந்து பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி வந்த 5 சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரைச் சேர்ந்த 11 வயது சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 18 வயதுக்கு உட்பட்ட...