​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடமாட்டோம் - கமல்ஹாசன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடமாட்டோம் - கமல்ஹாசன்

நூறாண்டுகளுக்கும் மேலாக காவிரி பிரச்சினையில் தமிழகம் வஞ்சிக்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ள நடிகர் கமல்ஹாசன், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் விடமாட்டோம் என்று தெரிவித்துள்ளார். மக்கள் நீதி மய்யத்தின் கண்டனப் பொதுக்கூட்டம் திருச்சி பொன்மலையில் நேற்று நடைபெற்றது. அப்போது உரையாற்றிய கமல்ஹாசன், காவிரியில்...

ஆளுநருடன் முதலமைச்சர் சந்திப்பு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். காவிரி விவகாரத்தில் நடைபெறும் போராட்டங்கள் குறித்தும் ஆளுநர் கேட்டறிந்ததாக முதலமைச்சர் தெரிவித்தார்.  காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து, கடந்த 30ஆம்...

அறவழியில் போராடுங்கள்; உயிரை மாய்த்துக் கொள்ளாதீர்கள் - மு.க.ஸ்டாலின்

தமிழ்நாட்டின் உரிமைகளுக்காக, அறவழியில் போராட வேண்டுமே தவிர, உயிர் தியாகம் செய்யும் விபரீத முடிவுகளை யாரும் எடுக்க வேண்டாம், என திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காததைக் கண்டித்து, சேலம் மாவட்டத்தைச்...

விரும்பத்தகாத நிகழ்வுகளை காவல்துறை தவிர்க்க வேண்டும் - முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

தமிழக காவல்துறையினர் பல்வேறு சவால்களை எதிர்கொண்டு சிறப்பாக செயல்பட்டாலும் அவ்வப்போது நடக்கும் சில விரும்பத்தகாத நிகழ்வுகளை தவிர்த்திட வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.  தமிழக காவல்துறைக்கு தேர்வாணையத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட 29 காவல்துணை கண்காணிப்பாளர்களுக்கான பயிற்சி நிறைவு விழா சென்னை எழும்பூரில்...

காவிரி பிரச்சனையில் 5 வாரங்களில் தீர்வு: தமிழிசை சவுந்தரராஜன்

காவிரி விவகாரத்தில் 50 ஆண்டு காலமாக தொலைத்த உரிமைகளை, 5 வாரங்களில் பெற்றுத்தர பாஜக முயற்சிக்கும் என்று அக்கட்சியின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். நீலகிரி மாவட்டம் உதகையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், காவிரி உரிமைகள் பறிபோனதற்கு திமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட்...

அம்பேத்கர் காட்டிய பாதையில் தமது அரசு நடைபெறுகிறது: பிரதமர் மோடி

அம்பேத்கர் காட்டிய பாதையில் தமது அரசு நடந்து வருவதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற விழாவில் பேசிய பிரதமர் மோடி, தமது அரசு எப்போதும் ஏழைகளுக்காகப் பாடுபட்டு வருவதாகவும், அம்பேத்கர் காட்டிய பாதையில் நடப்பதாகவும் தெரிவித்தார். தலித் மக்களுக்குக் காங்கிரஸ்...

மத்திய அரசு தவறான நிலைப்பாடுடன் உள்ளது - O.S.மணியன்

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் மத்திய அரசு தவறான நிலைப்பாடுடன் இருப்பதாக கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் கூறியுள்ளார். நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே படகிலிருந்து கடலில் தவறி விழுந்து உயிரிழந்த புஷ்பவனத்தைச் சேர்ந்த மீனவர் செல்வவிநாயகத்தின் குடும்பத்தினரைச் சந்தித்து அவர் ஆறுதல்...

நாடாளுமன்றம் தொடர்ந்து 20ஆவது நாளாக முடக்கம்

காவிரி விவகாரம் உள்ளிட்டவற்றால், நாடாளுமன்றம் 20ஆவது நாளாக முடங்கியது. மக்களவை புதன்கிழமை காலை கூடியதும் கேள்வி நேரம் தொடங்கியது. அப்போது, எழுந்த அதிமுக எம்.பிக்கள், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க வலியுறுத்தி முழக்கமிட்டனர். இதனால் எழுத்த அமளியால், மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன்...

விடுதலைப்புலிகளின் பிரதிநிதி என்று பொய் பிரச்சாரம் செய்து உலகத் தமிழர்களை ஏமாற்றி பணம் வசூலிக்கிறார் சீமான் - வைகோ

பிரபாகரன் போர் பயிற்சி அளித்ததாகவும், பிரபாகரனுடன் வேட்டைக்கு சென்றதாகவும் கூறி உலகத் தமிழர்களிடம் நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் பணம் வசூலித்து வருவதாக ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ குற்றஞ்சாட்டியுள்ளார்....

மாநிலங்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர்ந்து அமளி, உறுப்பினர்கள் பொறுமையைச் சோதிப்பதாக வெங்கைய நாயுடு கருத்து

அமளியில் ஈடுபட்டு நாட்டு மக்களின் பொறுமையைச் எம்.பிக்கள் சோதிப்பதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கைய நாயுடு தெரிவித்துள்ளார். அவை இன்று தொடங்கியதும் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் 12பேர் பதவியேற்றுக்கொண்டனர். அதையடுத்து ஆந்திர மாநிலத்துக்குச் சிறப்புத் தகுதி வழங்கக் கோரி அந்த மாநில உறுப்பினர்கள் முழக்கமிட்டனர்....