​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தமிழக அரசு எதிர்க்கும் திட்டங்களை மத்திய அரசு திணிக்கிறது - தம்பிதுரை

தமிழக அரசு எதிர்க்கும் திட்டங்களை மத்திய அரசு திணிக்கிறது - தம்பிதுரை

கல்வித்துறை பொதுப்பட்டியலுக்குச் சென்றதால் நீட் போன்ற தேர்வுகளை மத்திய அரசு மாநில அரசுகளின் மீது திணிப்பதாகவும் மாநில அரசுகளுக்கு முழு அதிகாரத்தைத் தந்தால்தான் இந்தியா வலிமைமிக்க நாடாக மாறும் எனவும் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். கரூரில் நடைபெற்ற நிகழ்ச்சி...

டிசம்பர் மாத இறுதிக்குள் 11,12 மாணவர்களுக்கு மிதிவண்டிகள் - அமைச்சர் செங்கோட்டையன்

டிசம்பர் மாத இறுதிக்குள் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளும் கடந்த ஆண்டு மடிக்கணிணி பெறாத மாணவர்களுக்கு ஜனவரி மாத முதல் வாரத்தில் மடிக்கணிணிகள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். கரூரில் நடைபெற்ற விழா ஒன்றில் பங்கேற்று...

புயல் பாதிப்புகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் செயல்பட வேண்டும் : மு.க.ஸ்டாலின்

புயல் பாதிப்புகளை சீரமைக்க போர்க்கால அடிப்படையில் செயல்படுமாறு தமிழக அரசை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  இயற்கைச் சீற்றத்தால் தமிழ்நாடு மீண்டும் ஒரு  முறை  பெரும் பாதிப்புக்குள்ளாகியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர், தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை வாரியம் முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொண்ட விதம் பாராட்டுக்குரியது...

பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்து பெரியார் - மணியம்மையார் குறித்த பாடங்கள் அகற்றப்பட வேண்டும் - ஹெச்.ராஜா

பள்ளிப் பாடப் புத்தகத்தில் இருந்து பெரியார் - மணியம்மையார் குறித்த பாடங்கள் அகற்றப்பட வேண்டும் என பா.ஜ.க. தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் பிரகதீஸ்வரர் கோவிலுக்கு வந்த அவர், செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார்....

அரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர் சிங் ஹுடா மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அனுமதி

அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி நேசனல் ஹெரால்டு நாளிதழுக்கு அடுக்கு மாடி வீட்டை ஒதுக்கிய குற்றச்சாட்டில் அரியானா முன்னாள் முதலமைச்சர் பூபிந்தர்சிங் ஹுடா மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அனுமதி அளித்துள்ளார். பூபிந்தர் சிங் ஹுடா 2005முதல் 2014வரை அரியானா முதலமைச்சராக இருந்தார். இவர்...

தமிழக அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் - பொன் ராதாகிருஷ்ணன்

தமிழகத்தில் கஜா புயலால் பாதிப்பு ஏற்பட்டால் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர மத்திய அரசு தயாராக உள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். விருதுநகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக அரசு கேட்கும் அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும்...

சபரிமலை கோவிலில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் கருத்தொற்றுமையை ஏற்படுத்த இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் அனைத்து வயதுடைய பெண்களையும் அனுமதிக்கும் விவகாரம் தொடர்பாக, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தலைமையில் இன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறுகிறது. திருவனந்தபுரத்தில் உள்ள கேரள தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணியளவில் அனைத்துக் கட்சிக் கூட்டம்...

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் முத்தலாக் தடை உள்ளிட்ட முக்கிய மசோதாக்களை நிறைவேற்ற திட்டம்

நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத் தொடரில் முத்தலாக் தடை சட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசு முனைப்பு கொண்டுள்ளது. ரபேல் விமானம் விலை தொடர்பான சர்ச்சைகளால் நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் வியூகம் வகுத்து வரும் நிலையில், மக்களவைத் தேர்தலுக்கு முந்தைய இந்தக் கூட்டத் தொடரில் முக்கிய...

தமிழினத்தைக் காக்க முடியாதவர்கள் எப்படி இந்தியாவைக் காப்பார்கள்? - தம்பிதுரை

தமிழினத்தையே காக்க முடியாதவர்களால், இந்தியாவை எப்படி காக்க முடியும் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை சாடியுள்ளார். கரூர் மாவட்டம் கோடந்தூர் ஊராட்சிக்குட்பட்ட ஊர்களில் பொதுமக்களை சந்தித்து அவர் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை, ஏற்கெனவே பா.ஜ.க.,...

தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் வேட்பு மனு தாக்கல்

தெலுங்கானா மாநில முதலமைச்சரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ், டிசம்பர் 7 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். ஜோதிடத்தில் அதிக நம்பிக்கை கொண்டுள்ள அவர், நல்ல நேரத்தை கணக்கில்...