​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மோடி அரசு மீதும் அரசியல் மீதும் RSS ஆளுமை செலுத்தவில்லை - மோகன் பகவத்

மோடி அரசு மீதும் அரசியல் மீதும் RSS ஆளுமை செலுத்தவில்லை - மோகன் பகவத்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எந்த விதமான ஆளுமையும் செலுத்தவில்லை என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய அவர், அரசுக்கு ஆலோசனை தேவைப்படும் போது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அணுகியிருப்பதாக அவர் கூறினார்....

இந்திய வீரர்களின் உணர்வுகளை சித்து காயப்படுத்தியுள்ளதாக நிர்மலா சீதாராமன் பேட்டி

ராணுவ வீரர்களின் உணர்வுகளை கிரிக்கெட் வீரர் சித்து காயப்படுத்தியுள்ளதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இம்ரான் கான் பதவியேற்பு விழாவிற்கு சென்ற சித்து, பாகிஸ்தான் ராணுவத் தளபதி கோமர் ஜாவேத் பாஜ்வாவை கட்டித் தழுவியது சர்ச்சையை ஏற்படுத்தியது. பெரும் ரசிகர்...

கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தந்தது அதிமுக அரசு போட்ட பிச்சை என தாம் பேசியது தவறு - கடம்பூர் ராஜூ

கருணாநிதிக்கு மெரீனாவில் இடம் தந்தது அதிமுக அரசு  போட்ட பிச்சை என தாம் பேசியது தவறு தான் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் பேசிய அவர்,  திமுக கூட்டத்தில் ஊழல் குற்றவாளி மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு  அரசு சார்பில்...

ஹெச்.ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை - RB உதயகுமார்

ஹெச்.ராஜா மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 இடங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஹெச்.ராஜா...

தமிழிசை என்ன எலிசபெத் ராணியா? என துரைமுருகன் கேள்வி

யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்பதற்கு தமிழிசை என்ன எலிசபெத் ராணியா என திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை சைதாப்பேட்டையில், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசையிடம் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் கேள்வி கேட்டதால், தாக்கப்பட்டதாக கூறப்படுவது பற்றி, துரைமுருகனிடம் செய்தியாளர்கள் கேள்வி...

எம்.ஆர்.விஜயபாஸ்கர் லண்டனில் உள்ள மின்சாரப் பேருந்து பணிமனையை பார்வையிட்டு ஆலோசனை

போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் லண்டனில் உள்ள மின்சாரப் பேருந்து பணிமனையை பார்வையிட்டார். இது தொடர்பான அரசு செய்திக்குறிப்பில் மேலைநாடுகளின் முன்னேறிய மாநகரங்களை உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வரும் சி - 40 முகமையின் வழிகாட்டுதலின் பேரில் சென்னையில் மின்சாரப் பேருந்துகளை இயக்க ஒப்பந்தம்...

ஆட்டோ ஓட்டுநரை பாஜகவினர் தாக்கியதாக கூறப்படும் புகாருக்கு தமிழிசை மறுப்பு

பெட்ரோல், டீசல் விலை உயர்வு பற்றி கேள்வி எழுப்பிய ஆட்டோ ஓட்டுநரை பாஜக-வினர் தாக்கியதாக எழுந்த புகாருக்கு, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மறுப்புத் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பெரியார் சிலை அவமதிக்கப்பட்ட விவகாரத்தில்,...

ஊழல் குறித்து திமுக பேசலாமா?: செல்லூர் ராஜூ கேள்வி

ஊழலை உலகுக்கு அறிமுகப்படுத்தியதே திமுகதான் என்றும் ஊழலைப் பற்றி திமுக பேசுவது கசாப்புக் கடைக்காரன் காருண்யம் பேசுவதைப் போலானது என்றும் அமைச்சர் செல்லூர் ராஜூ விமர்சித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் பசுமை பண்ணை திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் காய்கறி அங்காடியை பார்வையிட...

ஹெச்.ராஜாவைக் கைது செய்யக் காவல்துறைக்கு உத்தரவிடக் கோரிய முறையீட்டை ஏற்கச் சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

ஹெச்.ராஜாவைக் கைது செய்யக் காவல்துறைக்கு உத்தரவிடக் கோரிய முறையீட்டை ஏற்கச் சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது. புதுக்கோட்டை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, நீதிமன்றத்தையும் காவல்துறையினரையும் இழிவாகப் பேசினார் என்பது புகார். இது தொடர்பாகப்...

ஹெச்.ராஜாவைக் கைது செய்ய எந்த தயக்கமும் இல்லை : தம்பிதுரை

பா.ஜ.க. தேசியச் செயலர் ஹெச்.ராஜாவைக் கைது செய்ய காவல்துறைக்கு எந்தவித தயக்கமும் இல்லை என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே நாச்சிபாளையம் புதூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உயர்நீதிமன்றம் குறித்து ஹெச். ராஜா கூறிய கருத்து...