​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கடலூர், நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

கடலூர், நாகை மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

நாகை, கடலூர், காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது. கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்கள் புயலால் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு...

ஜெயலலிதாவின் சொத்துக்களை பராமரிக்க நிர்வாக அதிகாரியை நியமிப்பதை குறித்து தீபக், தீபாவுக்கு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் 913 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை பராமரிக்க நிர்வாக அதிகாரியை நியமிக்கக் கோரும் வழக்கில் ஜெயலலிதாவின் சகோதரரின் வாரிசுகள் தீபக், தீபா பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கறிஞர் கே.புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோரின் மனுவில், ஜெயலலிதா சொத்துக்களை பாதுகாக்க நேரடியான...

சபரிமலை கோவிலில் அனைத்து பெண்களையும் அனுமதிக்க முடிவு - பினராயி விஜயன்

சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு மாறாக நடந்துகொள்ள முடியாது என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு சீசன் தொடங்கவுள்ள நிலையில் தரிசனத்துக்காக10 வயதுக்கு மேற்பட்ட 50 வயதுக்கு உட்பட்ட 500  பெண்கள் கேரள போலீசாரின் இணையதளத்தில்...

"கஜா புயல்" நாகை துறைமுகத்தில் 10ம் எண் புயல் கூண்டு ஏற்றம்

கஜா புயலின் தீவிரத்தை உணர்த்தும் வகையில், கடலோர மாவட்டங்களில் உள்ள துறைமுகங்களில், புயல் எச்சரிக்கை கூண்டுகள் ஏற்றப்பட்டிருக்கின்றன நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் துறைமுகங்களில் 10ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டிருக்கிறது. அதி தீவிரப் புயல் உருவாகியுள்ளது என்றும், அது துறைமுகம் அல்லது...

நாகை மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கஜா புயல் கரையைக் கடக்கும் நாகை மாவட்டத்தில், முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  நாகை மாவட்டத்தில் 75 பேர் கொண்ட பேரிடர் மீட்புக் குழுவும், ஃபர்ஸ்ட் ரெஸ்பாண்டர்ஸ் எனும் பயிற்சி பெற்ற தன்னார்வலர்கள் 4 ஆயிரத்து 500 பேரும் மீட்புப் பணிக்குத்...

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபாட்டிற்கு ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை - மத்திய அரசு

தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட ஸ்டெர்லைட் ஆலை மட்டுமே காரணம் இல்லை என்கிற  மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் அறிக்கையை ஏற்பதும் ஏற்காததும் தமிழக அரசின் விருப்பம் எனச் சென்னை உயர் நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. தூத்துக்குடியில் நிலத்தடி நீர் மாசுபட...

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்பு

தென்கிழக்காசிய நாடுகளுடனான இந்தியாவின் உறவு வலுவடைந்திருப்பது மகிழ்ச்சியளிப்பதாகப் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். சிங்கப்பூரில் தென்கிழக்காசிய நாடுகளின் உச்சி மாநாடு நவம்பர் 11முதல் 15வரை 5நாட்களாக நடைபெற்று வருகிறது. இன்று காலையில் ஆசியான் - இந்தியா உச்சி மாநாடு என்கிற தலைப்பில் நடைபெற்ற...

கஜா புயல் நெருங்குவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்

கஜா புயல் இன்று இரவு கரையைக் கடக்கவுள்ள நிலையில் கடலூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடலூர் மாவட்டத்தில் 28 புயல் பாதுகாப்பு மையங்களும், 14 பல்நோக்கு பாதுகாப்பு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் பள்ளிகள், சமுதாயக் கூடம் என 191 இடங்கள்...

புதுச்சேரியில் காலை முதல் கடல் சீற்றம்..!

கஜா புயல் நெருங்கி வரும் நிலையில் புதுச்சேரியில் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் முடுக்கிவிடப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.  கஜா புயல் கரையை கடக்கும் போது புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும் எனவும், கடலோரப் பகுதிகளில் கடல்...

கஜா புயல் இன்று இரவு 8 முதல் 11 மணிக்குள் நாகை மாவட்டத்தில் கரையைக் கடக்க வாய்ப்பு

கஜா புயல், இன்றிரவு 8 மணி முதல் 11 மணிக்குள் நாகை மாவட்டத்தில் கரையைக் கடக்கக்கூடும் என தமிழ்நாடு மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள கஜா புயல், நாகையில் இருந்து வடகிழக்கே சுமார் 245 கிலோமீட்டர்...