ATMகளில் உதவி கோரும் பெண்களிடம் பண மோசடி செய்து வந்த பெண் கைது

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் ஏடிஎம் களில் பணம் எடுக்க வரும் கல்வியறிவற்ற அப்பாவி பெண்களை ஏமாற்றி பணமோசடியில் ஈடுபட்டு வந்த பெண் கைது செய்யப்பட்டார்.

காரியாபட்டி பேருந்து நிலையம் அருகிலுள்ள ஸ்டேட் பேங்க் ஏடிஎம்ல் பணம் எடுக்கச் சென்ற தீயனூரைச் சேர்ந்த லட்சுமி என்பவர், உதவிக்காக அருகிலிருந்த பெண்ணை நாடியுள்ளார். 3 ஆயிரம் ரூபாய் எடுக்கச் சொல்லி லட்சுமி கேட்க, அவருக்குத் தெரியா வண்ணம் 13 ஆயிரம் ரூபாயை எடுத்துள்ளார் அப்பெண்மணி. 3 ஆயிரம் ரூபாயை மட்டும் லட்சுமியிடம் கொடுத்துவிட்டு, 10 ஆயிரம் ரூபாயோடு தப்பிக்க முயன்றுள்ளார். ஆனால் லட்சுமியின் கைபேசியில் 13 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறுஞ்செய்தி வரவே, உடனடியாக அப்பெண்ணை விரட்டிப் பிடித்து காரியாப்பட்டி காவல்நிலையத்தில் ஒப்படைத்தார். விசாரணையில் அவர் புதுக்கோட்டையைச் சேர்ந்த சீதாலட்சுமி என்பதும், அப்பகுதியில் பல அப்பாவிப் பெண்களை ஏமாற்றி பண மோசடி செய்ததும் கண்டறியப்பட்டது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன