செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement
கல்வி

உயர் கல்வியில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு.. அந்த பாடத் திட்டத்தை 90 சதவீத கல்வி நிறுவனங்கள் பின்பற்ற தொடங்கி விட்டதாக உயர்கல்வித்துறை தகவல்..!

Aug 03, 2023 02:22:22 PM

தமிழகத்தில் உயர் கல்வியில் பொது பாடத்திட்டத்தை அமல்படுத்த தன்னாட்சி கல்லூரிகள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், அந்த பாடத் திட்டத்தை 90 சதவீத கல்வி நிறுவனங்கள் பின்பற்ற தொடங்கி விட்டதாக உயர்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

அமைச்சர் பொன்முடி தலைமையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இதுதொடர்பாக நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த தன்னாட்சி கல்லூரிகளின் முதல்வர்கள் பங்கேற்றனர். அவர்கள் பொதுப் பாடத்திட்டத்தில் உள்ள பிரச்சனைகளை எடுத்துரைத்ததாக தெரிகிறது.

குறிப்பாக கல்வி நிறுவனங்களுக்கான தேசியத் தரவரிசைக் கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படும் எனக் கூறிய அவர்கள், விருப்ப பாடங்களை எப்போது வேண்டுமானாலும் தேர்வு செய்து கொள்ளலாம் என்ற முறைக்கும் எதிர்ப்பு தெரிவித்தனர். பொதுப் பாடத்திட்டத்துக்கு போதிய பாடவேளை நேரம் இல்லை என்றும், ஆசிரியர்கள் பற்றாக்குறை இருப்பதாகவும், கிரெடிட் சிஸ்டத்தில் பிரச்சனை ஏற்படும் என்றும் அவர்கள் கூறினர். இளநிலை பாடத்திட்டத்தை விட முதுநிலை பாடத்திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

கூட்டத்திற்குப் பின் பேட்டியளித்த அமைச்சர் பொன்முடி, 900 கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்திய பிறகே பொது பாடத்திட்டத்தை கொண்டு வந்துள்ளதாகவும், அதற்கு எதிராக கருத்து தெரிவித்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்றும் கூறியிருந்தார்.


Advertisement
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகள் இன்று மீண்டும் திறப்பு
தமிழகத்தில் அரையாண்டு தேர்வு தேதி தள்ளிவைப்பு
கனமழை எச்சரிக்கை காரணமாக நெல்லையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை...!
பிளஸ் டூவில் உயிரியல் பாடத்தை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்காதவர்களும் மருத்துவக் கல்வியில் சேரலாம்
அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் உள்ள கல்லூரிகளில் உயர்த்தப்பட்ட தேர்வு கட்டணம் திருப்பி வழங்கப்படும் - துணை வேந்தர் வேல்ராஜ்
பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வு மற்றும் சான்றிதழ் கட்டணம் உயர்த்தப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு
தொடர் கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..?
கனமழை காரணமாக எந்தெந்த மாவட்டங்களில் பள்ளி - கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை..?
ஆசிரியர் சங்க பிரதிநிதிகளுக்கு தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தைக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் அழைப்பு

Advertisement
Posted Dec 11, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செத்த சித்தப்பா பெயரில் அரிவாளோடு வசூல் வேட்டை... கஞ்சா போதையில் அட்டூழியம்... 2 கடைக்காரர்களுக்கு அரிவாள் வெட்டு

Posted Dec 10, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

வரிசை கட்டி நிற்கும் புல்லட்டுகள்.. புத்தகங்களை இழந்து நிற்கும் மாணவர்கள்.. தவிக்கும் பள்ளிக்கரணைவாசிகள்...

Posted Dec 10, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

மழை வெள்ளத்தில் கலந்த கச்சா எண்ணெய்க்கு நாங்கள் பொறுப்பல்ல..! கையை விரித்த மணலி சிபிசிஎல்..! கடிவாளம் போட்ட பசுமைதீர்ப்பாயம்..!

Posted Dec 09, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

ஒன்றரை லட்சம் ரூபாய்க்கு தினமும் ரூ 6000 வட்டி வசூல் வியாபாரியை கடத்தி அட்டூழியம்..! மிரட்டலால் உயிரை மாய்த்த மனைவி

Posted Dec 09, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

இப்ப வருவியா..? மாட்டியா..? மருமகளுக்கு கெடுவிதித்த மாமியார் வெள்ளத்தில் படகில் சென்று பைட்..! பச்சிளம் குழந்தைக்காக பாசப்போராட்டம்


Advertisement