செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

துண்டு போட்டு சீட்ட மட்டுமில்ல திருடனையும் பிடிப்போமுல்ல... கோவை போலீசார் கெத்துப்பா..!

Jun 10, 2023 09:30:51 PM

கோவை கோனியம்மன் கோவிலில் திருடிவிட்டு, பேருந்தில் ஏறி மதுரை வழியாக தேனிக்குச் சென்ற திருடனை, அவனது தோளில் கிடந்த துண்டை அடையாளமாக வைத்து ,50க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை பின்தொடர்ந்து சென்று தனிப்படை போலீசார் மடக்கியுள்ளனர். 

சிறுதுரும்பும் பல் குத்த உதவும் என்பார்கள்.... அந்த வகையில், தோளில் போட்டிருந்த துண்டு ஒன்றை அடையாளமாக வைத்து கோயம்புத்தூர் தனிப்படை போலீசாரால் மடக்கிப்பிடிக்கப்பட்ட திருடன் சேகர் என்கிற சதீஷ் இவர் தான்...

கோயம்புத்தூர் மாநகரின் காவல்தெய்வமாக போற்றப்படும் அருள்மிகு கோனியம்மன் திருக்கோவிலில், சில வாரங்களுக்கு முன்பு, திடீரென பூஜை பொருட்கள், காணிக்கைப் பணம் திருடுபோனது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டு உக்கடம் காவல் ஆய்வாளர் சரவணன் தலைமையில், 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், திருடன் ஒருவன், தனித்து துணிகரத்தில் ஈடுபட்டதை கண்டறிந்தனர். அந்த நபர், கோவிலில் இருந்து வெளியில் வந்து சாலையில் செல்லும்போது துண்டால் முகத்தை மூடியபடி செல்வதை அடையாளம் கண்டனர்.

அடுத்தடுத்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த தனிப்படை போலீசார், அந்த நபர், உக்கடத்தில் இருந்து சிங்காநல்லூர் பேருந்து நிலையத்திற்குச் சென்று பின்னர் அங்கிருந்து மதுரைக்கு பயணமானதை கண்டறிந்தனர்.

அந்த பேருந்தின் ஓட்டுநர், நடத்துநர் செல்போன்களுக்கு தகவல் அளித்த தனிப்படை போலீசார், திருடனை கண்காணிக்குமாறு கூறியவாறு, தனி வாகனத்தில் பின்தொடர்ந்துள்ளனர். மதுரைக்குச் சென்ற அந்த நபர், பின்னர் அங்கிருந்து வேறொரு பேருந்தில் ஏறி, சொந்த ஊரான தேனிக்குச் சென்ற நிலையில், அங்கு வைத்து, உள்ளூர் போலீசார் உதவியுடன், கோவை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

கோயம்புத்தூரில் இருந்து மதுரை வழியாக தேனி சென்று போலீசிடம் பிடிபடும் வரையில், கழுத்தில் இருந்து, அந்த நபர் துண்டை அகற்றவில்லை... அந்த துண்டையும், அவன் குறித்த சிசிடிவி காட்சிகளையும் ஆதாரமாக வைத்து, திருடனை மடக்க உதவிய தனிப்படை போலீசாரையும், உக்கடம் பகுதியில் சிசிடிவி காட்சிகளை சேகரித்து திருடனை அடையாளம் காண உதவிய முகமது அனீஸ் மற்றும் அப்துல் சுபான் ஆகியோரை நேரில் அழைத்து கோயம்புத்தூர் மாநகர ஆகவல் ஆணையர் பாலகிருஷ்ணன் பாராட்டினார்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட சேகர், டவுன் ஹால் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலைபார்த்து வந்த நிலையில் நள்ளிரவில் கோவிலுக்குள் புகுந்து கைவரிசை காட்டியதாகவும் 50க்கும் மேற்பட்ட சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து அவனை பின் தொடர்ந்து தனிப்படை போலீசார் மடக்கியதாக, காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


Advertisement
ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்
H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்
அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!
செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்
லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?
கல்லூரி வாகனமா ? காதல் வாகனமா? தம்பி உனக்கென்ன வேலை எழுந்திரு..! அக்கறையுடன் எச்சரித்த பெண் எஸ்.ஐ
அய்யோ.. அம்மா.. வலிக்குது வீடுபுகுந்த கொள்ளையனை ஊர் கூடி உரித்த சம்பவம்..! டுவிஸ்ட் வைத்த போலீஸ்
புழுக்களுடன் ஊசிபோச்சுப்பா.. கிரீம் கேக் வாங்கறீங்களா..? அப்படின்னா உஷாரா இருங்க..! கேக் ஷாப்புகளில் சோதனை நடத்தப்படுமா ?
டூவீலருக்கு டிரைவர் வச்சிகிரேன்.. ஜாமீன் தாங்க மை லார்டு... TTF வாசன் அடித்த ஸ்டண்ட்..! திருக்குறளால் திருப்பி அடித்த சம்பவம்
தறிகெட்ட தனியார் பேருந்து அதிவேகத்தால் பலியான உயிர் ஓட்டுனர் தப்பி ஓடிய காட்சிகள்..!

Advertisement
Posted Sep 28, 2023 in இந்தியா,Big Stories,

ரணகளத்தில் பேட்டியா சித்தார்த்தை விரட்டிய கன்னட அமைப்பினர்..! வலுக்கும் காவிரி போராட்டம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

H.M கையை முருக்கு மாதிரி.... நறுக்குன்னு கடித்த வேதியியல் டீச்சர்..! கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகாத சோகம்

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

அக்கா உங்க நகைகள் அழகு... திமுக பெண் கவுன்சிலரின் தலையை நசுக்கிய தோழி..! நம்பிச்சென்றவருக்கு நேர்ந்த பயங்கரம்..!

Posted Sep 28, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

செல்போன் வெடித்து தீ பற்றி எரிந்ததால் பெண் கருகி பலி..! வேண்டாமே இந்த விபரீதம்

Posted Sep 27, 2023 in வீடியோ,சென்னை,Big Stories,

லியோவுக்கு சிக்கல் மேல் சிக்கல் சொன்ன நாளில் வெளியாகுமா ? பிரச்சனைக்கு இவர் தான் காரணம்..! 6 ஆயிரம் எங்கே 50 ஆயிரம் எங்கே ?


Advertisement