செயற்கை நுண்ணறிவின் மூலம் இந்தியாவின் தொழில்நுட்ப சூழலை பெருமளவு மேம்படுத்த முடியும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
உலகின் முன்னணி செயற்கை நுண்ணறிவு நிறுவனமான ஓப்பன் ஏ.ஐ.யின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன் பிரதமர் மோடியை டெல்லியில் நேரில் சந்தித்து பேசினார். அப்போது, செயற்கை நுண்ணறிவுக்கான உலகளாவிய கட்டுப்பாட்டு விதிமுறை உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டன.
இந்த சந்திப்பு குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, இந்தியாவின் தொழில்நுட்ப சூழலை செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்படுத்த முடியும் என்றார்.
மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தும் அனைத்து ஒத்துழைப்புகளையும் மத்திய அரசு வரவேற்பதாகவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.