செய்திகள் Big Stories சற்றுமுன் உலகம் இந்தியா தமிழ்நாடு அரசியல் ஆன்மீகம் விளையாட்டு வர்த்தகம் சினிமா சென்னை வீடியோ கல்வி தொழில்நுட்பம் சுற்றுச்சூழல் ஆரோக்கியம்

Advertisement

30 அடி உயர மேம்பாலத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட பெண் பரிதாப பலி..! அதிவேக காரால் சகோதரரும் உயிரிழந்தார்

Mar 20, 2023 07:34:36 AM

சென்னை மேடவாக்கம் மேம்பாலத்தில் சென்ற பைக் மீது கார் மோதியதில் 30 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட பெண்ணும், பைக்கை ஓட்டிச்சென்ற இளைஞரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சென்னை தாம்பரம் அடுத்த பம்மல், எல்.ஐ.சி., காலனியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம். இவரது மகள் கலைச்செல்வி, மகன் சந்தோஷ் குமார் இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.

கலைச்செல்விக்கு திருமணமாகி, தாம்பரம் அடுத்த சந்தோஷ்புரம் பகுதியில், தன் கணவர் சுரேந்தராவுடன் வசித்து வந்த நிலையில் சம்பவத்தன்று காலை தனது தம்பி சந்தோஷ்குமார், உடன் சைதாப்பேட்டையில் வசிக்கும் பெரியப்பா குமாரவேலுவை பார்ப்பதற்காக பைக்கில் சென்றார்.

மேடவாக்கத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் மேல் சென்று கொண்டிருந்தபோது, சந்தோஷ்குமார் பைக்கின் மீது பின்னால் வந்த மகேந்திரா மராஸோ கார் அதிவேகமாக மோதியது.

இதில் பைக்கை ஓட்டி வந்த சந்தோஷ்குமார் பைக்குடன் பாலத்தின் தடுப்புச் சுவரில் மோதி பலத்த காயமடைந்தார். பைக்கின் பின்னால் அமர்ந்திருந்த கலைச்செல்வி 30 அடி உயர பாலத்திலிருந்து கீழே விழுந்து, பலத்த காயமடைந்தார்.

அக்கம்பக்கத்தினர் கலைச்செல்வியை மீட்டு அருகிலுள்ள பள்ளிக்கரணை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்தது தெரிய வந்தது.

பாலத்தின் மீது படுகாயத்துடன் மயங்கி கிடந்த சந்தோஷ்குமாரை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் இருந்து மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சந்தோஷ்குமார் செல்லும் வழியில் சிகிச்சை பலனின்றி பரிதமாக உயிரிழந்தார்.

சம்பவம் குறித்த தகவலின் பேரில் பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் கலைச்செல்வி மற்றும் சந்தோஷ்குமார் உடலை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுனர் ஆலம், என்பவரை கைது செய்து அவரது காரை பறிமுதல் செய்தனர்.

மேம்பாலத்தில் உள்ள வளைவில் வேகமாக சென்றதால் காரை கட்டுப்படுத்த இயலாமல் இந்த விபரீத விபத்து ஏற்பட்டதாக கூறப்படும் நிலையில், வாகன ஓட்டிகள் கவனக்குறைவாக வாகனம் ஓட்டிச்சென்றால் என்ன மாதிரியான விபரீதம் அரங்கேறும் என்பதற்கு இந்த சம்பவமே சாட்சி.


Advertisement
ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்
இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!
பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!
தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!
500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?
தப்பி ஓடிய கைதி..! தட்டித் தூக்கிய குட்டி யானை!! நட்ட நடு சாலையில் துப்பாக்கியுடன் ஒரு சேஸ்..!!
கூரையை பிரித்து உயிரை பணயம் வைத்து கடைக்குள் குதித்தவருக்கு காத்திருந்த ஷாக்...!!!
8 மாத காதல் 2 மாத இல்லறத்துடன் முடிவுக்கு வந்தது ஏன்.? சிப்பிக்குள் அடங்காத முத்துக்கள்...!
அடையாளத்தை மாற்றி அடுத்தவர் வாகனத்தை 4 ஆண்டுகள் ஓட்டிய போலீஸ்.... இதெல்லாம் நியாயமா ஆபிஸர்ஸ்....?
குழந்தையின் சடலத்துடன் 10 கி.மீ தூரம் நடை பயணம்.. மலைக்கிராமங்களின் கண்ணீர் பக்கங்கள்..!

Advertisement
Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

ஆடு மேய்க்க வைத்து அடிக்கிறாங்க... உடல் எல்லாம் ரணம்... மனம் எல்லாம் வலி... சவுதி அரேபியாவிலிருந்து கண்ணீர் குரல்

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

இளம்பெண் மரணத்தில் திடீர் திருப்பம்.. விபத்தை ஏற்படுத்தி கொன்ற காதலன் கைது..!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

பொண்ணு 5 ஆம் வகுப்பு..! மாப்பிள்ளை பொறியாளர்..! ஜோடியின் தூள் பறந்த ஆட்டம்..!

Posted Jun 03, 2023 in தமிழ்நாடு,Big Stories,

தலைமுறை கடந்து தாலாட்டும் இசை இளையராஜா என்னும் பேராளுமை....!

Posted Jun 02, 2023 in தமிழ்நாடு,வீடியோ,Big Stories,

500 ரூபாய் கொடுத்தா ஆல் பாஸ் மார்க் ஷீட் இல்லன்னா ஆல் அவுட்.... தலைமை ஆசிரியரா.? இல்லை தரகரா.?


Advertisement